அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது பேசும்போது திக்கிப் பேசும் குழந்தைகளின் குறைகளைப் போக்க நாம் மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியாகும்
தான் பெற்ற பிள்ளை பிற குழந்தைகளைப்போன்று சரளமாகப் பேசுவதை தங்களால் கேட்க இயலவில்லையே என்று மனம் குமுறும் பெற்றோர்களின் நிலையைச் சொல்லி
மாளாது
நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் இப்படிப்பட்ட அந்த கஷ்டங்கள் எதன் மூலம் அந்த ஜாதகத்தை தாக்குகின்றது, எப்படி வருகின்றது என்பதை நம் பிறப்பு ஜாதகத்தின் மூலம் கண்டறிய வேண்டும்
அதாவது, ஒரு ஜனன ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இப்படிப் பேச்சிலே சிரமப்படும் அந்தக் குழந்தைகளுக்கு
"பேச்சு ஸ்தானம்" என்று வர்ணிக்கப்படும் 2வது ஸ்தானமான வாக்குஸ்தானத்திலே நச்சுகிரகங்கள் இருந்தாலோ அந்த வாக்குஸ் தானத்தை நோக்கி நச்சுக்கிரகங்களின் பார்வை இருந்தாலோ அந்தக் குழந்தை வழக்கத்திற்கு மாறாக பேசவேண்டிய நேரத்திலே பேசாமல் காலதாமதமாக அது பேசும்பொழுது பெற்றோர்களுக்கு கண்ணீர் அருவியாக ஊற்றெடுக்கிறது
ஏனென்றால், எப்படி மனித வாழ்க்கையில் மனிதனுக்கு மூச்சு மிகமிக முக்கியமோ அதுபோல அவன் வாழ்க்கை நடத்துவதற்கு பேச்சும் முக்கியமானதாக இருக்கிறது அப்படி இருக்கின்ற அந்தச் சூழ்நிலையிலே அந்தக் குழந்தைக்கு "ஊமை" என்ற பட்டம் வந்துவிடுமோ, "தோற்றுவாய்" என்ற பட்டம் வந்துவிடுமோ என்று பயம் கொள்ளாத பெற்றோர்களே இல்லை. அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நரகவேதனை என்னவென்று
இதற்கெல்லாம் நம் முன்னோர்கள் அருமையான பரிகாரத்தையும், அதற்கான ஸ்தலங்களையும் கூறி வைத்திருக்கின்றார்கள். அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்
முதலில் நாம் ஜாதகத்தை நன்கு கவனிக்க வேண்டும். அதிலே இருக்கின்ற அந்த வாக்கு ஸ்தானம் பாதிக்கப்படும்பொழுது இந்தக்குழந்தையும் பாதிக்கப்படும் தசையை அது அடைந்து கொண்டிருக்கும்பொழுது அந்த குடும்பத்தில் துன்பம் தலையெடுக்க துவங்குகின்றது. அதற்கு அந்தக் குழந்தை ஒரு காரணமல்ல, அதன் முற்பிறவியின் பாவம் காரணம்
அதற்கு தீர்வு காண நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இப்படி பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை கும்பகோணத்திலிருந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள, சிவனுடைய ஸ்தலமான
எழுத்தறிநாதர்" என்று அழைக்கப்படும் ஸ்தலத்திற்கு அழைத்துச் சென்று நாம் வேண்ட வேண்டும். இந்த ஸ்தலம் அகஸ்திய முனிவர் சிவபெருமானிடம் இலக்கணம் பயின்ற ஸ்தலமாக வணங்கப்படுகிறது
சரியாக பேச இயலாத குழந்தைகளுக்கு இக்கோயில் அர்ச்சகர் பூக்காம்பினால் தேனைத் தொட்டு நாக்கில் எழுதுகின்றார். பிறகு குழந்தைகள் நன்கு பேசத் துவங்கி விடுகிறது
படிப்பிலே மந்தமும், அதீத ஞாபகமறதியும் உள்ள குழந்தைகளுக்கு பூக்காம்பினில் தேன் தொட்டு நாக்கில் எழுதுகின்றார் அர்ச்சகர்,
அப்படிப்பட்ட இந்த கோயில் "இன்னம்பூர்"
என்று அழைக்கப்படுகின்றது. பேச்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுடைய பேச்சுத்திறனை ஆண்டவனின் அருளால் வளர்க்க வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்
No comments:
Post a Comment