Wednesday, June 10, 2020

விவாகரத்தை தடுக்க அருமையான பரிகாரம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது கணவன், மனைவியிடையே திருமண வாழ்க்கை கசந்து, விவாகரத்து பெற்று விரைவிலேயே அவர்களின் திருமண பந்தம் முடிவிற்கு வந்துவிடுகிறதே அந்நிலையை மாற்றுவதற்கான பரிகாரங்கள் பற்றியதாகும்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், அவர்கள் பிறக்கும்பொழுதே இந்த தோஷம் இருந்து விடுகிறது என்பது நன்கு ஜோதிடம் அறிந்தவர்களால் கண்டுபிடித்து கூறமுடியும்

இருவீட்டு சம்மந்திகளுக்கும் ஏற்படும் பிரச்சினைக்கு காரணம் என்னவென்றால் ஒரு ஜனன ஜாதகத்திலே குருவும், சுக்கிரனும் ஒன்றாக இருந்தாலும், ஏழாம் ஆதியோடு பகைப் பெற்றிருந்தாலும் ராசி பொருத்தம் சரியில்லையென்றாலும், இப்படிப்பட்ட ஜாதகங்கள் விரைவாக விவாகரத்தை நோக்கி சென்றுவிடுகின்றன

அதற்கான பரிகாரம்தான் இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த சுக்கிரன் அசுரகுருவிற்கு அதிபதியாக இருக்கின்றார். குரு தேவர்களுக்கு குருவாகவும், பிரகஸ்பதி யாகவும் இருக்கின்றார். அவர்கள் இருவருக்கும் எப்பொழுதும் சண்டைநிகழ்ந்த வண்ணமாக இருப்பதால், இந்த அடிப்படையிலே பிறந்தவர்கள் சதாசர்வகாலம் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்

இப்படிப்பட்ட அமைப்பை உடையவர்களின் ஜாதகத்தை நீங்கள் ஒப்பிடும்பொழுது அதிக கவனத்துடன் சேர்த்தால் இப்பிரச்சினையை எளிதாக எதிர்கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் ஏற்கனவே திருமணம் முடிந்தவர்கள் பிரச்சினை உள்ளவர்கள், விவாகரத்துக் கோருபவர்கள், கவனிக்க வேண்டிய பரிகாரம் என்னவென்றால், ஒருமுறை திருச்செந்தூருக்குச் சென்று வள்ளி,  தெய்வ யானை வணங்கி, அந்த ஆலயத்திலே ஆறுமணிநேரத்திற்கு மேல் தங்கி, "ஸ்ரீம் சரவணபவ" என்ற மந்திரத்தை ஓதி எப்பொழுதும் முருகனையும் வள்ளியையும் வணங்கிக்கொண்டிருந்தால், கிரகங்கள் உங்களை தாக்காது, இந்த விவகாரத்தை நீங்கள் எளிதாக தகர்த்து விடலாம் அந்தச் சிக்கலில் இருந்து எளிதாக தப்பி விடலாம்

மற்றொரு அருமையான பரிகாரம் என்னவென்றால், அதாவது ஒரு ஜாதகத்திலே ஏழாவது இடம் "களத்தி ஸ்தானம்" என்று கூறப்படுகிறது

பதினோறாவது, "சக களத்தி" என்று கூறப்படிகின்றது. அதாவது "சக்களத்தி

என்றே கூறப்படுகின்றது. ஒரு சிலருக்கு ஒரு திருமண அமைப்பு, ஒருசிலருக்கு இரண்டு விதமான திருமண அமைப்பு, இதை பொருத்தம் பார்க்கும்பொழுதே நீங்கள் தவிர்த்து விட்டீர்களென்றால், இந்த விவாகரத்திற்கு அவசியம் இல்லை. தலை இருப்பவர்களுக்குத்தான் தலைவலி, பல் இருப்பவர்களுக்குத்தான் பல் வலி.

ஜோதிடத்தை நன்குணர்ந்த ஜோதிடர்கள் அறிவாளிகள். இந்த குறிப்பிட்ட நபருக்கு ஒரு மனைவியா? அல்லது இரு மனைவியா? என்று கணித்து விடுகிறார்கள்

ஜாதகம் சாதகமாக இருந்து திருமணம் செய்து வைத்தால் இரு வீட்டைச் சேர்ந்தவர்களும் கைகலப்பில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏற்படாது

வழக்குமன்றங்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.அருமையான பெருமையான இந்தப் பரிகாரத்தை பயன்படுத்தி இருவீட்டார்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமணம் முடிந்தவர்களும், திருமணம் கைகூட இருப்பவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயன்படுத்தி வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டுமென்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment