பெருமை வாய்ந்த அன்பர்களே, நீங்களனைவரும் இறைவனின் கருணையை பெற்ற பாக்கியசாலிகள், அதிர்ஷ்டசாலிகள், ஆண்டவனின் அருட்கடாட்சத்தை பெற்ற புண்ணியவான்கள். இன்றைய பகுதிக்கு செல்வோமா அன்பர்களே
இன்று நாம் காணவிருப்பது, ஏழு ரிஷிகள் என்றழைக்கப்படும் "சப்தரிஷிகளை"
பற்றியும், அவர்களை எந்தக் கிழமைகளில் வணங்கினால் அன்றைய தினம் மிகுந்த பலனை பெறலாம் என்பது பற்றியும் ஆகும்
நம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நூறு கோடிக்கும் மேலான மக்களுக்கும் முன்னோடிகள் யாரென்றால் நம் முன்னோர்கள் என்போம். அது முற்றிலும் உண்மையே. ஆனால் நம் முன்னோர்கள் எந்த பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்று பார்க்கும்பொழுது, நமது வேதம் என்ன கூறுகிறது என்றால், ஏழு ரிஷிகள் மூலமாகத்தான் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களனைவரும் வந்துள்ளோம் என்றால் அது மிகையாகாது
அன்பர்களே, சப்தரிஷிகளை கிழமைக்கு ஒருவராக வணங்கி வேண்டும்பொழுது நாம் பெறுகின்ற பலன் மிகவும் அபாரமானது, ஆற்றல் மிக்கது
வாரத்தில் முதல் நாளானது ஞாயிறு
ஞாயிறு அன்று நீங்கள் படுக்கையைவிட்டு எழும்பொழுது சப்த ரிஷிகளில் ஒருவரான
"வசிஷ்ட முனி நீங்கள் நினைக்க வேண்டும். "வசிஷ்டர்" என்பவர் ஞாயிற்றுகிழமையின் அதிபதியாவார்
அவருடைய மந்திரத்தை உச்சரிக்கும்பொழுது ஞாயிறானது மிகவும் இனிமையாக இருக்கும். அந்த மந்திரமானது "ஓம் ஸ்ரீ வசிஷ்ட மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை உச்சாடனம் செய்தால் ஞாயிறு தினம் மிகவும் நன்மையான தினமாக இருக்கும்
அடுத்து வருவது திங்கள். இந்த திங்கள் தினத்திற்கு, சப்தரிஷிகளில் ஒருவரான
பரத்வாஜர்" உரியவராவர். "பரத்வாஜர் ரிஷியை" திங்களன்று படுக்கையை விட்டு எழும்பொழுது 'ஓம் ஸ்ரீ பரத்வாஜ மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை உச்சாடனம் செய்து வணங்கவேண்டும். அதன்பின் இந்த திங்கள் அற்புதமான நாளாக மாறும்.
செவ்வாயன்று செவ்வாய்க்கிழமைக்கு அதிபதியான "காசிப மகரிஷியை" போற்றி வேண்டும். "ஓம் ஸ்ரீ காசிப மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை உச்சாடனம் செய்து வர அன்று ஏற்படும் தடைகள் அகலும் ஆனந்தம் பெருகும்
அடுத்தது, புதன்கிழமையாகும். இந்த புதன்கிழமைக்கு அதிபதியானவர்
"கௌதம மகரிஷியாவார்". இவரை நாம் எழும்பொழுது "ஓம் ஸ்ரீ கௌதம மகரிஷியே போற்றி போற்றி" என்று அவரை நினைக்க வேண்டும். அதன் மூலம் அன்றைய நாள் உங்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்
அதுபோல, வியாழனன்று அத்தரி மகரிஷியை" "ஓம் ஸ்ரீ அத்தரி மகரிஷியே போற்றி போற்றி" என்று அவர் நாளைக்கு வேண்டும். அதன் மூலம் அன்றைய நாள் உங்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்
அதுபோல, வியாழனன்று அத்தரி மகரிஷியை" "ஓம் ஸ்ரீ அத்தரி மகரிஷியே போற்றி போற்றி" என்றும்
வெள்ளியன்று "விஸ்வாமித்திரரை", "ஓம் ஸ்ரீ விஸ்வாமித்திர மகரிஷியே போற்றி போற்றி' என்றும் சனியன்று "ஜமத்கனி மகரிஷி" "ஓம் ஸ்ரீ ஜமத்கனி மகரிஷியே போற்றி போற்றி
என்றும் சொல்லிவர அற்புதமான ஒரு நிலைக்குச் சென்றால், அதில் எள்ளளவும் ஐயமில்லை என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment