இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 5 - ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படகூடிய சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்
இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் செய்யும் காரியம் தாமாதமாகவே முடியும்
சுபகாரியத்தில் தடை ஏற்படும். வீட்டை அடிக்கடி மாற்றம் செய்வர். இல்லை எனில் வீட்டில் சுபிட்சம் குறைந்து பிரச்சனைகள் அதிகரிக்கும். சின்ன விஷயத்திற்காக கவலைப்பட்டு நிம்மதியின்றி திண்டாடுவீர்கள். கணவன்- மனைவி உறவு சுமாராக இருக்கும். குழந்தைகள் பழியை ஏற்க வேண்டியிருக்கும்
பரிகாரம்
உடனடியாக சுதர்சன ஹோமத்தை செய்ய வேண்டும், வீட்டிலேயே "கீதா ஹோமம்"
5 பிராமணர்கள் கொண்டு செய்து 10 பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்
மற்றும் குருவாயூரப்பனுக்கு அவரவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை துலாபாரமாகவும், அபிஷேகமாகவும் செய்வது உகந்தது. சுசீந்திரம் சென்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபடலாம்
No comments:
Post a Comment