அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது யார்யாருக்கெல்லாம் குழந்தைகள் தடைபடுகின்றது என்பதை சூரியன் மூலமாக, சந்திரன் மூலமாக, செவ்வாய் மூலமாக, புதன் மூலமாக, சுக்கிரன் மூலமாக, குருவின் மூலமாக பழுதுபட்டவர்களுக்கெல்லாம், பரிகாரம் மூலமாக விளக்கம் அளித்து வந்தோம்.
இன்று ராகு என்ற கிரகம், குழந்தைபேறுக்கு எவ்விதத்தில் உடைமை உண்டாக்குகின்றார் என்பது பற்றியாகும்
அதை நீக்க நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை இப்பொழுது விளக்கமாகக் காணலாம். சென்ற பிறவியிலே ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ கோயில் பாம்புகளையோ அல்லது அதன் வசிப்பிடமான புற்றை அழித்திருந்தாலோ, பாம்புகளை வைத்து தொழில் செய்தாலோ அல்லது அப்பாம்புகளை காட்டி பயமுறுத்தி பணம் பறித்தாலோ ராகு பெருமானுக்கு எரிச்சல் உண்டாகும். அதன் விளைவாக இந்த பிறவியிலேயே, குழந்தை ஸ்தானம் என்று கூறப்படுகின்ற 5வது ஸ்தானத்திலேயோ அல்லது ஒன்பதாவது ஸ்தானத்திலேயோ வந்தமர்ந்து தடையை உண்டாக்குவார்.
அப்படிப்பட்ட ராகு பெருமானை வணங்கி அந்த தடையை நீக்கி, குழந்தை பேறை எவ்விதம் பெறலாம் என்பதையும் மேற்கொண்டு காணலாம். அதாவது, ராகுவை வசியம் செய்கின்ற கருப்பு உளுந்து" அது உடைக்காமல் முழுதாக இருந்தால் மிகவும் நல்லது. அதை 200 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு, ஒன்ட வெள்ளைத்துணிகளிலே சம அளவிலே பங்கிட்டு, அதை பார்த்துக்கொண்டு, கணவன்-மனைவி இல்லறம் மேற்கொள்ளும் நேரத்திலே அவர்கள் பயன்படுத்தும் தலையணையின் கீழ் வைத்து இன்பம் துய்க்கும் செயலை அனுஷ்டிக்க வேண்டும். பின்பு, அந்த
"கருப்புளுந்து" கட்டை சேகரிக்க வேண்டு அதுபோன்று அவர்கள் ஒன்பது முறை
"கருப்புளுந்து" கட்டை சேகரிக்க வேண்டும்
எப்பொழுதும் இதுபோன்ற பரிகாரங்கள் செய்யும் பொழுது குல தெய்வங்களையும் மறக்காமல் மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு காணிக்கையாக காசுகளை எடுத்து குலதெய்வத்திற்கு நேர்த்திக் கடனாக வேண்டி, இந்தப் பரிகாரத்தையும் அதனால் சேர்த்து செய்து வரும்பொழுது, சுமார் 45 நாள் அல்லது ஒரு மண்டலத்திற்குப் பிற ராகு பெருமான் சமாதானமாகி, அவரே மனமிரங்கி அந்தத் தம்பதிகளுக்குக் குழந்தை பேறை வழங்குவார் என்றால் அ அவர்கள் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.
இது, காண்பதற்கும், செய்வதற்கும் மிக எளிய பரிகாரமாகத் தோன்றும். ராகு பெருமானை வசியம் செய்யும்
"கருப்புளுந்து" பரிகாரத்திற்கு தானியத்திலேயே மிக முக்கிய பங்குண்டு என்பதை "ஜோதிட அன்பர்கள் நினைவி தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட இந்த பாவங்களுக்கு, சாபங்களுக்கு இவ்விதமான தோஷங்களுக்கு நம் முன்னோர்கள் அனுபவித்து உணர்ந்து அதற்கான பரிகாரங்களையும் கண்டுபிடித்து பின் வரும் சந்ததியினருக்காக அருளிச் சென்றிருக்கின்றனர் என்றால் அவர்களி தெய்வீக குணத்தை நாம் மறந்துவிடலாகாது.
எனவே, இப்படிப்பட்ட பரிகாரங்கள் முறையாக பின்பற்றி செய்யவேண்டும்.
பின்பு, பரிகாரத்திற்காக சேகரித்த பொருட்களை குளம், குட்டை, ஊரணி, கண்மாய் போன்ற தேங்கிய நீர் நிலைகள் இடக்கூடாது. ஆறு அல்லது கடலில் ராகு பெருமானை மனதில் நினத்தவாறு
"ராகு பெருமானே நாங்கள் செய்த பிழையை மன்னித்து, எங்களுக்கு குழந் பாக்கியம் அளிக்க வேண்டும்" என்று மனதார வேண்டி அதில் போட வேண்டும், மேலும் இவ்வாறான பரிகாரங்கள் வேை செய்யுமா? செய்யாதா? என்ற கேள்விகளையும், சந்தேகங்களையும் விட்டுவிடுங்கள்.
தெய்வத்தின் மீது முழுநம்பிக்கை வைத்து மேறகொள்ளப்படும் பரிகாரம் என்றுமே தோற்றது இல்லை, தோற்கப்போவதும் இல்லை என்று கூறி இப்பகுதியை இனி பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment