அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, நல்ல வீடு, நிலம் அமைய வீடு கட்ட முட்டுக்கட்டையாக இருந்த காரணிகள் விலக, வீட்டை துரிதமாகக் கட்டி முடிக்க மேற்கொள்ளும் பரிகாரங்கள் குறித்ததாகும்.
இதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு, இதற்கான ஜோதிடப் பின்னனிகளைப் பற்றி சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே செவ்வாய், பலம் பெற வேண்டும். அது நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு வீடு அற்புதமாக அமையும்.
லக்கனத்திலிருந்து எண்ணிவர 4-ஆம் ஆதி நல்ல நிலையிலிருந்தால், அவர்களுக்கு வீடு அமையும். லக்கனத்திலிருந்து 4-ஆம் ஆதி 6-வது இடத்தில் இருந்தால், 8 மற்றும் 12-ஆகிய இடத்தில் இருந்தால், நீச்சம் பெற்றால், பாவகிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் அல்லது பார்வை பெற்றால் செவ்வாயானது பலம் குன்றி 6,8,12-ல் மறைந்தால், அவர்களுக்கு எப்பொழுதும் வாடகை வீடுதான்.
அப்படிப்பட்டவர்களேல்லாம், எங்களின் ஆசை பூர்த்தியடைய வேண்டும், நீங்கள் சொந்த வீடு வாங்க வேண்டும், அது எங்களுக்கு நல்ல முறையில் அமைய வேண்டும் என்று கோரினால், அதற்கான ஒரு தித்திப்பான பரிகாரம் ஒன்று உங்களை வந்தடையக் காத்துக் கொண்டிருக்கிறது.
முதலிலே நிலம் அமைந்து, வீடு அமைந்து அது தாமதமாக நடப்புக்கு வருகின்ற அன்பர்களுக்கு ஒரு முறை "திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவர்" வணங்கி
"ஸ்ரீம் சரவண பவ" எனும் மந்திரத்தை ஓதி, அந்தம் ஆலயத்திலே ஆறு மணி நேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, நீங்கள் கட்டுகின்ற வீடு எங்கு தடைபட்டதோ, எந்த நிலத்தில் அது தாமதப்படுகின்றதோ அந்த நிலத்தைச் சுற்றி நீங்கள் தெளிக்க வேண்டும்.
வீடு அமையாதவர்களுக்கு நிலங்களே கிடைக்காதவர்களுக்கு, வீடு அமைவதே குதிரை கொம்பாக இருப்பவர்களுக்கு, வாடகை வீட்டில் நம் காலம் கழிந்து விடுமா? என்று ஏங்குபவர்களுக்கு ஒரு பரிகாரம் உங்களின் வாழ்வில் ஒரு முறையேனும் "சிறுவாபுரி முருகனை"
ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர உங்கள் வாழ்விலே அற்புதமான முன்னேற்றம் ஏற்பட்டு, உங்கள் வாழ்க்கையிலே, அருமையான ஒரு நிலை தோன்றி, நீங்கள் நிலத்தை வாங்குவீர்கள், வீடு கட்டும் கனவு, நிஜமாகும் என்றால் அது அந்த சிறுவாபுரி முருகனை"
வணங்குவதால் வரும் பலனேயன்றி வேறொன்றுமில்லை.
ஒன்பது செவ்வாயன்று சென்று அவரை வணங்குவதால் உங்களின் ஜாதகத்தில் உள்ள, கோளாறு தணிந்து, கட்டுபாட்டிற்கு வந்து, ஆனந்தநிலையை உங்கள் சொந்த வீட்டில் கழிப்பீர்கள் என்றால் அது உறுதியிலும் உறுதி. இது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட.
எனவே, அன்பர்களே, இனி உங்கள் கவலைகளை மறந்து, வேதனைகளைத் துறந்து உங்களுக்காகவே உங்களின் துன்பங்களைப் போக்குவதற்காகவே அளிக்கப்பட்டு வரும் பரிகாரங்களை மேற்கொண்டு பலனடைய வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment