Tuesday, June 16, 2020

பாம்பாட்டி சித்தரின் ரகசியம்



ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் (ஸ்ரீ மருதமலை சித்தர் தியானச் செய்யுள்

அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து பின் உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து கூடுவிட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து கொடுத்தவனே வலயத்தின் காலவரே

ஆதிசேஷனின் அருணா காடு ஆதிசிவனின் மகன் வரம்கொண்டு ஜாதி மதங்கள் பேதம் இன்றி காக்கும் சித்தரே காக்க காக்க

பாம்பாட்டிச் சித்தர் "ஜோகி” எனும் வகுப்பில் பிறந்தவர். இளம் வயதிலேயே பாம்பை பிடித்து படமெடுத்து ஆடச் செய்து. அவைகளின் விஷத்தை சேமித்து விற்பதும், விஷ முறிவு மூலிகைகளை காடுகளில் கண்டெடுப்பதுமாய் இருந்தார்

பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார் மருதமலையில் விஷ வைத்திய ஆய்வுக்கூடம் ஒன்றும் துவங்கினார்

அப்பொழுது வைத்தியர் சிலர், பாம்பாட்டிச் சித்தரிடம் காட்டில் நவரத்தின பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது பெருத்த விலை போகும் என்றும், மேலும் அது இறை தே இரவில் மட்டுமே வெளியில் வருவதாகவும் கூறினார்

இதனைக் கேள்விப்பட்டவுடன் பாம்பாட்டி சித்தர், எப்படியாவது அந்த நவரத்தின பாம்பை பிடித்து விடுவது என்று முடிவு செய்தார். அதன்படி, அவர் நவரத்தின பாம்பு பிடிக்கின்ற தருவாயில் அனைத்து பாம்புகளும் புற்றிலே மறைந்து கொண்டன. அதைக் கண்டு பாம்பாட்டிச் சித்தர் பாம்புகள் அனைத்தும் காட்டிக் காலி செய்துவிட்டனவோ" என்று எண்ணி கொண்டிருக்கும் நேரத்தில், பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கு மிகவும் பிரகாசமான ஒளியுடன் சட்டை முனி சித்தர் தோன்றினார். இங்கு எதை தேடுகிராய்? என வினவினார். அதற்கு பாம்பாட்டியார் 'நான் நவரத்தின பாம்பு பிடிக்க வந்தேன், அதை காணவில்லை' என்று தெரிவித்தார்.

இதை கேட்ட சட்டைமுனி சிரித்தார் நவரத்தின பாம்பு உனக்குள் நீயே வைத்துக்கொண்டு வெளியே தேடுகின்றாயே இது பயனற்ற செயல் அல்லவா மிருந்த உல்லாசத்தை தர பட்டிய ஒரு பாம்பு அனைவர் உடலிலும் உண்டு ஆனால் யாரும் அதை அறிவதில்லை எனவே வெளியே திரியும் அந்த பாம்பை தேடுவதை விட்டு விட்டு, இல்லாத பாம்பை தேடி ஓடாதே' என்று கூறினார் இவை அனைத்தையும் கேட்டு உண்மையினை உணர்ந்த பாம்பாட்டியார் சிந்தரின் காலில் விழுந்து வணங்கினார்

சட்டைமுனி சித்தர் கனவில் பாம்பாட்டி யாரை பார்த்து விளக்கம் தர தொடங்கினர். அற்புதம் வாய்ந்த இந்த மனித உடலினுள் ஆதியிலிருந்தே குண்டலினி என்ற ஒரு பாம்பு படுத்துகொண்டு இருக்கிறது தூங்கி கொண்டு இருக்கும் அந்த பாம்பு அறிவை குறைக்கின்றது இதன் நுட்பத்தை அறிந்து கொள்வது அரிது மக்களின் துன்பத்துக்கு மூலாகாரணமே இந்த மூலாதார பாம்பின் உறக்கம் தான்

இறைவனை உணர பாடு படுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது குண்டலினி என்ற அந்த பாம்பு விழித்தெழும், எனவே தியானம் சித்திக்கும் இறைவன் நம்முள் வீற்றிருப்பார்

மனிதன் இறைவனை காணும் இரகசியம் இதுவே என கூறி முடித்தார்

குருதேவா அரும் பெரும் ரகசியம் உங்களால் இன்று தெரிந்து கொண்டேன் மேலான இந்தவழியை விட்டு இனிநான் விலக மாட்டேன் என சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார்

ஸ்ரீ பாம்பாட்டி சித்தரை வணங்குவதால் நாக தோஷம் அகலும், மாயை அகன்று மனத்தெளிவு உண்டாகும். நிழல் நிஜமாகவும், நிஜம் நிழல் போன்றும் நிலை மாறும். கணவன் மனைவியிடையே உள்ள தாம்பத்திய பிரச்சினைகள் அகலும் போதைப்பொருட்கள், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் அகலும்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப்பயணங்கள் உண்டாகும்

ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோஷம் நீங்கி நல்ல இடத்திலே திருமணம் நடக்கும் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் பெருகும் வீண் பயம் அகன்று மன பலம் கூடும்

பொதுவாக ராகு கரும்பாம்பு' என்று சித்தர்கள் வருணிக்கப்படுகிறது

அவரை சனி அன்று 9-10 1 ராகுகாலத்திலே நீல நிற வஸ்திரம், அல்லி,தாமரை, தாழம்பூ சம்பங்கி ஆகிய புஷ்பங்களால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்

பதினாறு போற்றிகள்

ஸ்ரீ நாகாபராப் டாடய பியான பாங்குபவரே போற்றி ஆயகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி சர்ப்பரட்சகரே போற்றி முருகனின் பிரியரே போற்றி பசும்பாலில் பிரியம் பாடவாரே போற்றி மூன்று வர்சாங்கள் கொண்ட போற்றி வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி

ஸ்ரீ ஆதிசேஷன் வணங்குபவரே போற்றி விசைத்தினை முறிப்பவரே போற்றி நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி இந்துக்களின் உருவம் உடையவரே போற்றி பணியார பகவானின் நண்பரே போற்றி ஓம் வமி தாட்சரத்தில் வசிப்பவரே போற்றி சிவனுக்கு ஆபரணமாக இருப்பவரே போற்றி நந்திதேவரின் நண்பரே போற்றி ஸ்ரீ பாற்கடலில் வாரம் செய்யும் சித்தர் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி போற்றி

இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு, சித்தரின் மூல மந்திரம் "ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் போற்றி போற்றி என்ற இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை சொல்லிவர வேண்டும், பின்பு நிவேதனமாக சர்க்கரை சேர்க்காத பச்சைப் பாலையும், வாழைப் பழங்களையும் வைக்க வேண்டும்

இந்த முறையான வழிபாட்டால் உங்கள் ஜாதகத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அது தீர்க்கக் கூடியதாக இருக்கும் இவரை வணங்க நீங்கள் தாம்பரம், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயம் அருகிலுள்ள "சித்தர் பீடத்தில்

வணங்கி உத்தரவு பெற்று மகிழ்வான வாழ்க்கையை வாழலாம், என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு

No comments:

Post a Comment