அன்பர்களே ,இன்று நாம் காணவிருக்கும் சித்தர்,கதிர்காமர் சித்தர். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் நூறாண்டுகளுக்கு முன்பு சீர்காழிக்கு வந்தவர். இளம் வயதில் வீட்டை விட்டு வெளியே வந்த இச்சித்தர் வட இந்தியாவில் ஆன்மீகத்தை நாடி ஆன்மீக யாத்திரை புரிந்து ஈழ நாட்டிற்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற முருகனின் தலமான கதிர்காமத்தில் தவமிருக்க முருகனின் அருளாசி பெற்றதோடு மட்டுமின்றி, நேரிடை தரிசனத்தையும் பெற்றவர்
இவரின் பூர்வீகம் பற்றி முழுமையாக எத்தகவலும் தெரியவில்லை . 65 ஆண்டு கால கடுந்தவத்தின் பயனாக "கதிர்காமர் என்ற பெயரை பெற்றார். பின்பு தமிழ்நாட்டில் சீர்காழிக்கு வந்தார்
சீர்காழிக்கு பல பெருமைகள் உண்டு
நாகை மாவட்டத்து ஊர்களில் புகழ்பெற்றது சீர்காழி. அன்னை உமாதேவி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய திருத்தலம் (பிரம்ம புரீஸ்வரர் திருக்கோயில்) இதுவாகும்
சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உப்பாறு கரையிலே ஓர் குடிசையிலே எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கின்றார்
தினமும் ஒரு வேளை உணவில் மூன்று பிடி மட்டுமே உண்டு தனது தவ வாழ்க்கையை மேற்கொண்ட இவர், முருகனின் நேரிடை அருளைப் பெற்றவர் என்பதால், 1925 ஆம் ஆண்டு முருகனுக்கு ஆலயம் அமைத்து அந்த சன்னிதியிலே ஜல எந்திர பிரதிஷ்டை செய்திருக்கின்றார். ஜல எந்திரம் என்பது ஜலத்தின் மேல் தங்கத்தட்டில் எந்திரம் ஒன்று சுழலும் வகையிலே அமைக்கப்படுவதாகும். இவர் நீரிலும் தனது ஞான சக்திகளை பிரயோகிப்பவர்
பெண்மணி ஒருவர் குடிக்கு அடிமையான தன் கணவனை இவரிடம் அழைத்து வர அவரின் துயர் துடைத்தார். "ஜெய் சீதாராம்"
அப்பனே, அப்பனே என்பது இவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகளாகும்
அன்னதானம் அளிப்பதில் நாட்டம் கொண்டவர். தன்னை நாடி வரும் மக்களின் துயர் துடைப்பார்.மூலிகை, மற்றும் சித்த மருந்துகளின் மூலம் மக்களின் பல நோய்களை குணமளித்திருக்கின்றார்
தனது இறுதி காலத்தை முன்னமே உணர்ந்த கதிர்காம சித்தர் தான் குறிப்பிட்ட இடத்தில் சமாதி வைக்க வேண்டி, 1962-ஆம் ஆண்டு 19-ஆம் தேதி கார்த்திகை மகம் நட்சத்திரம் அன்று இரவு 10 மணிக்கு மஹா சமாதி அடைந்தார். இவரது ஜீவ சமாதி சீர்காழியின் தெற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் மயிலாடுதுறை சாலையிலே உப்பனாற்று வடக்கரை பாலத்திலே அமைந்துள்ளது. இங்கு சென்று வேண்டும் பக்தர்களுக்கு நோய் நொடி குணமாகி அவர்களது வாழ்விலே பல்வேறு அதிசயங்களும் அற்புதங்களும் நடக்குமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்
No comments:
Post a Comment