அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, லக்ன தோஷம் பற்றியதாகும். ஒரு மனிதன் ஜனனம் எடுக்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு லக்கனத்தில் பிறந்துதான் ஆக வேண்டும். சராசரியாக ஒரு லக்கனத்திற்கு இரண்டு மணி நேரம் என்று நாம் எடுத்துக் கொண்டால், இருபத்துநான்கு மணி நேரத்திற்கு பனிரெண்டு லக்கனத்தை மனிதன் கடந்தாக வேண்டும்.
ஒரு சில கிழமைகளில் சில லக்னத்தில் பிறக்கும்பொழுது தோஷம் ஏற்படுகிறது, ஒரு குழந்தை ஞாயிறு அன்று மிதுன லக்கனத்திலே ஜனனம் எடுக்குமானால் அந்தக் குழந்தைக்கு லக்கன தோஷம் உண்டாகிறது. இன்னொரு குழந்தை திங்கட்கிழமையன்று ரிஷப லக்கனத்திலே பிறக்குமாயின், அதற்கும் லக்கன தோஷம் பாதிக்கின்றது. புதனன்று, மேஷம், கடகம் என்ற லக்கனத்திலே ஜனனம் செய்யும் குழந்தைகளுக்கு தோஷம் உண்டாகிறது.
வியாழனன்று துலாம், மகரம் என்ற லக்கனத்திலே குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு தோஷம் உண்டாகிறது.
வெள்ளியன்று சிம்மம், மீன லக்கனத்திலே குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு தோஷம் பற்றிக்கொள்கிறது. சனியன்று விருச்சிக அல்லது தனுசு லக்கனத்திலேயோ குழந்தைகள் பிறந்தால் லக்கன தோஷம் உண்டாகிறது.
ஒவ்வொரு கிழமை, ஒவ்வொரு லக்கனம் அதில் பிறந்தால் தோஷம் எப்படி பீடிக்கின்றது என்று கூறியுள்ளோம். இதை எழுதி நீங்கள் பலனடைய வேண்டுமென்பதற்காகவே இத்தகைய பலாபலன்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றது.
அதாவது, மேற்கூறிய, நிலைகளிலே, உதாரணமாக ஞாயிறு அன்று மிதுன லக்கனத்திலே பிறந்த குழந்தைக்கு தோஷம் உள்ளது என்று நீங்கள் அறிந்து கொண்டால், அக்குழந்தையை, அத்தோஷத்திலிருந்து காப்பாற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், லக்கனதோஷம் அடைந்த குழந்தைகளை உங்களின் குலதெய்வ ஆலயங்களுக்கு அழைத்துச்சென்று, உங்கள் குழந்தையை உங்களின் குலதெய்வத்திற்கு தத்து கொடுத்து விட வேண்டும், இப்பொழுது அக்குழந்தை உங்களின் குழந்தை அல்ல, உங்கள் குலதெய்வத்தின் குழந்தை, அக்குலதெய்வம் எப்பொழுதும் குடைபோன்றும், ஒரு கேடயம் போன்றும் இருந்து உங்கள் குழந்தையைக் காக்கும்.
இந்தக் கோயிலில் அந்தக் குழந்தைக்கு நீங்கள் அர்ச்சனை செய்ய விரும்பினாலும், அர்ச்சனையின் பொழுது குலதெய்வத்தின் பெயரை மட்டும்தான் தான் சொல்ல வேண்டும், உங்களின் குழந்தையின் நட்ச்சத்திரத்தை நீங்கள் சொல்லக்கூடாது.
இது ஒருபுறமிருக்க, உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், இந்த லக்கன தோஷப் பரிகாரப் பகுதியை நாங்கள் இன்றுதானே பார்க்கின்றோம், எங்களுக்கும் அந்த தோஷம் இருக்கிறது. நாங்கள் பெரியவர்களாக அல்லவா வளர்ந்து விட்டோம், நாங்கள் என்ன செய்வோம், எங்களால் எப்படி லக்கன தோஷ நிவர்த்தி செய்ய இயலும் என்று கேட்கும் அன்பர்களே கவலைப்படாதீர்கள்.
உங்களுக்கும் ஒரு மார்க்கம் இருக்கிறது.
உங்கள் ஊரிலே குடிகொண்டிருக்கும் பெருமாளிடம் சென்று, மனமுருக அவரிடம், என்னை உங்களின் தத்துப்பிள்ளையாக எடுத்துக் கொள்ளுங்கள் பெருமாளே" நான் இனி உங்களின் பிள்ளை, இன்றிலிருந்து உங்கள் மீதுதான் நான் அர்ச்சனை செய்வேன், என்று எழுத்து மூலமாகவோ, அல்லது வாய்வழிமூலமாகவோ அங்கே, அவரிடம் சொல்லிவிடுங்கள். இதன்மூலம் உங்களைத் தாக்க வருகின்ற நவக்கிரக கதிர்கள் விலகிவிடும். ஏனென்றால், பெருமாளின் திருமகனாக, திருமகளாக நீங்கள் மாறிவிட்டீர்கள்.
அதனால் இப்படிப்பட்ட லக்கன தோஷத்திலிருந்து விடுதலை பெறுகின்ற இந்த சூட்சுமத்தை நீங்கள் ஒரு புத்தகம் வாயிலாக பெறவேண்டுமென்று நினைத்தால் அது நிச்சயமாக சாத்தியமில்லை. அதற்காகவே உங்களின் நலனில் அக்கறை கொண்டு, உங்களின் சிரமத்தையும், துன்பத்தையும் நீக்குவதற்காகவே இப்பரிகாரமுறைகள் கண்டறிந்து வழங்கப்பட்டுள்ளது, என்றால் அது உங்கள்பால் நாங்கள் கொண்ட அன்பேயன்றி வேறொன்றுமில்லை. உடன் இறைவன் அருள் பெற்று தோஷம் நீங்கி இன்புற்று வாழ வேண்டும், என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கி
No comments:
Post a Comment