Tuesday, June 30, 2020

வாகன விபத்தை தவிர்க்க பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது.

வாகனவிபத்துக்கள் நீங்க மேற்கொள்ளும் பரிகாரமுறைகள் குறித்ததாகும்.

அன்பர்களே, நாம் எவ்வளவுதான் பொறுமையுடனும், பொறுப்புடனும், கவனமாகவும் பார்த்து வாகனங்களை இயக்கினாலும், ஒரு சிலர் தங்களின் அதீத அவசரத்தாலும், அதிக வேகத்தாலும், பிற வாகனஓட்டிகளை பற்றிய உணர்வு சிறிதுமில்லாமல் எதிர்பாராத விபத்துக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

அதற்கு முக்கிய காரணம் நமது ஜாதக அமைப்பாகும். நமது ஜாதகத்திலே நமக்கு பாதகமான சில நிகழ்வுகள் நடக்கின்றன.

அதனால் நாம் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதாவது ஒருவருடைய ஜனனஜாதகத்தில் 6வது இடத்திலே செவ்வாய் இருக்கப்பெற்றவர்கள், 6வது இடத்திலே குரு இருக்கப்பெற்றவர்களோ, கோச்சார ரீதியாக பார்க்கும்பொழுது, 6வது இடத்திலே குரு இருக்கப்பெற்றவர் செவ்வாய் வருகின்ற நேரத்தில் இந்த விபத்துக்கள் ஏராளமாக ஏற்படுகிறது.

6 வது இடத்தை ரணம்,ருணம், சத்ரு என்று அழைக்கிறார்கள். ரணம் என்றால் காயம், விபத்தின் மூலமாக ஒரு மனிதன் காயப்படுகிறான். எப்பொழுதும், அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி அதை வெளியில் எடுக்கும்பொழுது நம் முன்னோர்களை நினைக்க வேண்டும். நம் தாய், தந்தையரை நினைக்க வேண்டும், நமக்கு மிகவும் பிடித்த கடவுளை நினைக்க வேண்டும். அவ்வாறு நினைத்து வாகனங்களை எடுக்கும் பொழுது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் என்ற நிலையில் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

இந்த விபத்தில் இருந்து பரிபூரணமாக தப்பிக்க மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் போன்ற செவ்வாயின் சாரம் உள்ள நட்சத்திரங்களில், வள்ளி,தெய்வானையுடன் உள்ள முருகப்பெருமானை ரோஜா மலர் கொண்டு, அன்றைய தினத்திலே சென்று ஆலய வழிபாடு செய்ய, அந்தச் செவ்வாய் அதிபதியான முருகன் கருணையால், விபத்து நேராத வண்ணம், விபத்து ஆபத்து நேராத வண்ணமாக அந்த முருகனின் கருணை உள்ளம் உங்களை காப்பாற்றுகிறேன்.

அதுபோல, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்று சொல்லப்படுகின்ற குருவின் நட்சத்திரத்திலே வியாழனன்று சிவ வழிபாடு அல்லது தட்ஷிணாமூர்த்தியின் வழிபாடு செய்துவர, குரு 6ல் இருந்து கோச்சாரம் நடத்துகின்ற அந்த சூழ்நிலையிலும் அல்லது 6 லிருந்து தசை நடத்துகின்ற அந்த சூழ்நிலையிலும் உங்களை இந்த பிரார்த்தனை, இந்த பரிகாரம் நிச்சயமாக காப்பாற்றும் விபத்து என்று சொல்லியவுடன் நீங்கள் நடுநடுங்க வேண்டாம். ஏனென்றால் நவக்கிரகங்களின் கட்டளைப்படிதான் விபத்து நடக்கிறது. இந்த விபத்து நடக்கும் காலகட்டம் நமக்கு பாதகமாக இருக்கிறது.

இதில் எள்ளளவும் சந்தேகமில்லை .

ஆனால், இறைவனின் ஆணைப்படி இவை நடக்க இருப்பதால் நீங்கள் Dr.ஸ்ரீகுமார் அவர்கள் கூறிய அந்த தினத்திலே, கூறிய நட்ச்சத்திரத்திலே அந்தக்கிழமையிலே சென்று வழிபாடு செய்யும்பொழுது நிச்சயமாக இதுபோன்ற விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம்.

மேலும் யார்யாருக்கெல்லாம் ராகு தசை நடப்பிலிருக்கின்றதோ அந்தக்காலகட்டத்தில் இரு, அல்லது நான்கு சக்கரவாகனங்களை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை பயன்படுத்த வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். இயலாதவர்கள் பேருந்து அல்லது ரயில் மூலம் பயணம் மேற்கொள்ளலாம். ராகுவின் அதிபதியான துர்கையை வழிபட பலன் கிடைக்கும்.

என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment