அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, துர்மரணம் அடைந்தவர்களுக்கு, அகால மரணம் அடைந்தவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய முறையான பரிகாரம் பற்றியதாகும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையை நாம் எடுத்துக்கொண்டால், அவன் இளம் பருவத்திலேயே இறந்து விடுவது, மத்திய வயதிலே இறந்து விடுவது, வயோதிக காலத்தில் இறந்து விடுவது, இதற்கு இடையிலே வருகின்ற ஆபத்தான இயற்கைக்கு மாறான மரணங்கள்தான் துர்மரணங்கள், அகால மரணங்கள் என்று கூறப்படுகின்றன.
முந்தையப்பிறவியிலே ஒருவர் செய்த கடும் பாவங்கள், தோஷங்கள், அவர் பெற்ற சாபங்கள் இந்தப்பிறவியில் துர்மரணங்கள் என்ற முறையிலே சந்தித்து அவர்களின் குடும்பத்தினரையும், சுற்றத்தாரையும் அதிர்ச்சியிலும், ஆறாத துன்பத்திலும் வாட வைக்கின்றனர் என்றால் இது ஜோதிட சாஸ்திரத்திற்கு கட்டப்பட்டதாகும்.
மனிதன் அவன் விரும்பியோ, விரும்பாத சூழ்நிலையிலோ இந்த திடீர் மரணம், அகால மரணம், துர்மரணம் அடையும்பொழுது நம் கண்ணுக்கு எட்டாத நிகழ்ச்சி அங்கே நிகழ்ந்து விடுகிறது.
மரணம் அடைந்தவுடன் அந்த உயிர் மேல் நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது.
அப்பொழுது அவனுக்கு புண்ணிய லோகத்தை எட்டுகின்ற உடல் அவனுக்கு கிடைக்கின்றது. இயற்கையிலேயே மரணம் அடைந்தவர்களுக்கு சூட்சும உடல் கிடைத்து அவர்கள் வெளிச்சத்தை நோக்கி செல்லுகிறார்கள்.
இந்த துர்மரணங்களை அடைந்தவர்கள், திடீர் என்று அது ஏற்பட்டதால் அவர்களுக்கு அந்த உடலிலே நல் உலகம் செல்ல சூட்சும சரீரம் கிடைக்கவில்லை . அதனால், அவர்கள் கொடிய பசியாலும், தாகத்தாலும் துன்பப்படுவார்கள். ஆதலால், அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடனடியாக ராமேஸ்வரத்திற்குச் சென்று திளஹோமம் ஒன்றைச் செய்து, அவர்களுக்கு சூட்சும சரீரம் கிடைக்கும்படி செய்து, அந்த வேண்டுதலை வைத்து இங்கே அலைந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு வெளிச்சத்திற்கு செல்லுகின்ற மார்க்கத்தை காண்பிக்கிறார்கள்.
பின்பு, அந்த உடலுக்கு சூட்சும சரீரம் கிடைத்து வெளிச்சத்தின் மூலம், புண்ணிய லோகத்திற்கு அந்த ஆத்மா செல்லுகின்றது. அதன்பின்பு பித்ருக்களுக்கு திதி கொடுப்பது போன்று, தர்ப்பணம் கொடுப்பது போன்று வருடம்தோறும் நாம் செய்து வர வேண்டும், அந்த ஆத்மா சாந்தியடையும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment