இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்தின் 1-ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படகூடிய சாதக பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்.
இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர் நோயினால் எப்போதும் அவதிப்படுவர் நீரையும், நெருப்பையும், கண்டு பயம் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் பெற்றிருப்பார். உறவினர்கள் அன்பு இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய கோபத்திற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். வார்த்தையில் தெளிவு இருக்காது . சோம்பல்தனம் அதிகமாக இருக்கும்
பரிகாரம்
தினமும் பூஜையின் போது சுப்பிரமணிய யந்திரத்தையும், சிவ அஷ்டகத்தையும் சொல்லி வருதல் வேண்டும்
சனிபகவானுக்கு நீலோத்தம பூவால் அர்ச்சனை செய்வது சிறந்த பலனாகும்
ஆண்டுக்கொருமுறை திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வழிபட்டு அர்ச்சனை செய்து அந்த விபூதி, குங்கும பிரசாதத்தை தினமும் நெற்றியில் வைத்து கொள்வது சிறந்த தோஷ பரிகாரமாகும்
சனிபகவானுக்கு சனி கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவது உகந்தது
No comments:
Post a Comment