அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, புத்திர பாக்கியம் பற்றியதாகும்.
இந்த புத்திர பாக்கியத்தை நமது ஜனன ஜாதகத்திலே எவ்வாறு பார்க்க வேண்டுமென்றால், லக்கனத்திலிருந்து எண்ணிவர 5வது இடம் ,9 வது இடம் அவர்களுக்கு அமைகின்ற புத்திரர்களைப் பற்றி சொல்லுகின்ற இடம், 9வது இடம் அவர்களுக்கு புத்திர ஸ்தானம் அமையுமா?
அமையாதா? என்று கூறுவதாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலே ஒரு ஆண் ஜாதகமாக இருந்தாலும் சரி, பெண் ஜாதகமாக இருந்தாலும் சரி இரண்டு பேருக்கும் புத்திர பாக்கியம் இருக்கின்றதா? என்று பார்க்க இரண்டு ஜாதகங்களையும் நாம் ஆராய வேண்டும்.
அதில் 5, 9ஆம் இடங்களைப் பார்த்து பழுது இல்லாமலிருந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அப்படி இல்லாதவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் சக்தி வாய்ந்த ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
அவ்வாறான ஒரு ஸ்தலம் "தொட்டமலூர்"
இதனுடைய மூலவர் யாரென்றால், பிரம்மபுராணத்திலே 12வது அத்தியாயத்திலே இந்த ஆலயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை ஒட்டி "கண்ணா நதி" ஓடுகின்றது. இவ்வூர் முன்பு "மணலூர்" என்று அழைக்கப்பெற்று
"மேலூர்" என்று மருவி "மலூர்" என்று மாறி நான்காவது நூற்றாண்டில் மலூர் என்ற அந்த ஊர் "தொடமலூர்" என்று அழைக்கப்படலாயிற்று.
வியாசர், புரந்தர், ராகவேந்திரர் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்திருக்கின்றனர். அதாவது, இந்த ஆலயத்தில் இருக்கின்ற கிருஷ்ண பகவான் அந்தத் தொடமலூருக்கு யாரெல்லாம் நாடி வருகின்றார்களோ அவர்களுக்கு புத்திரபாக்கியத்தை அளிக்கின்றனர்.
புத்திரபாக்கிய தடை உள்ளவர்கள் இவ்வாலயம் வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து, புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டுகின்றனர். இவ்வாலயம் வந்து சென்ற ஓராண்டுக்குள் புத்திர பாக்கியம் கிடைத்துவிடும். புத்திர பாக்கியம் கிடைத்ததும் இங்கு வந்து தங்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி மரத்தொட்டில்களைக் காணிக்கையாக்குகின்றனர். இந்த தொட்டில்கள் கிருஷ்ணன் சன்னிதியின் உச்சியில் கட்டப்படுகின்றன.
பத்தாண்டுகளுக்கு மேலாய் குழந்தை இல்லாதவர்கள் கூட இங்கு வந்து புத்திர பாக்கியத்தைப் பெற்றுள்ள நிகழ்வுகளும் உள்ளன. என்றால் இந்த ஆலயத்தின் மகிமையை நாம் உணர வேண்டும்.
இவ்வாலயம் எங்குள்ளதென்றால் பெங்களூருவில் இருந்து - மைசூர் செல்லும் வழியில் 60 கி,மீ தொலைவிலே
"சென்னபட்டணா" என்ற ஊர் உள்ளது.
அவ்வூரிலிருந்து 2கி.மீ தொலைவிலுள்ளது
"தொட்டமலூர்".
இறை கருணையைப் பெற்றவர்கள் மட்டும்தான் இதுபோன்ற செய்திகளையும், தகவல்களையும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள், ஏனென்றால், எவ்வளவோ மனிதர்கள் தனக்கு அற்புதம் நடக்கும், என்னுடைய கஷ்டங்கள் தீரும் என்று அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் கதவுகள் திறக்கப்படவில்லை என்பது உண்மை.
ஆனால், சில மனிதர்களுக்கு அந்தப் பாக்கியம் இருக்கின்றது.அது ஏன் இருக்கின்றது என்றால், "சிவன் அவன் என் சிந்தையில் இருப்பதால் அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி" என்று கூறுகிறார்.
அதுபோல ஆண்டவன் கருணைக்கு பாத்திரமாக உள்ளவர்களுக்கு மட்டும்தான் எட்டுகின்றது என்று கூறி, இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment