Tuesday, June 16, 2020

தீராத நோய்கள் தீர பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது ஒரு மனிதன் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் அதைத்தீர்க்க மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்

முதலிலே அடிக்கடி நோய்வாய்ப்படும் மனிதனின் ஜோதிட நிலையைப் பார்ப்போம். லக்கனத்திலிருந்து எண்ணிவர ஆறாவது இடம் தான் நமது நோயைக்காட்டுகின்ற இடமாக இருக்கின்றது. இதை ரோகஸ்தானம் என்று கூறுகிறார்கள். ஒருவருடைய ஜாதகத்திலே, ஆறாம் ஆதி பலவீனமாக இருந்தால், நீச்சமாக இருந்தால் வலுவின்றி இருந்தால், அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார்.

எப்படிப்பட்ட நோய்களைப்படுவார் என்பதை ஜாதகம் விரிவாகவும் விளக்கமாகவும், அழகாகவும் தெளிவாகவும், அருமையாகவும் சொல்லுகின்றது. ஆறாவது இடத்திலே சூரியன் இருக்கப்பெற்றவர்கள், உஷ்ண சம்மந்த வியாதி, ஆறாவது இடத்திலே சந்திரன் இருக்கப்பெற்றவர்கள் ஜல சம்பந்தப்பட்ட வியாதி, ஆறாவது இடத்திலே இருக்கும் கிரகம்தான் ஒரு மனிதனின் ஆரோக்கியநிலை, நோய்நிலை பற்றி சொல்கிறது

லக்கினாதிபதி வலிமை குன்றி, ரோகாதிபதி அதாவது ஆறாம் ஆதி என்று சொல்லப்படுகின்ற நோயை உண்டாக்குகின்ற கிரகம். வலிமையாக இருந்தால் சந்திரன் மறைவிடங்கள் என்று சொல்லப்பட்ட மூன்று, ஆறு, எட்டு பனிரெண்டில் இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி நோய் வரும். இந்த நோயிலிருந்து மீள பரிகாரம் என்ன

"தன்வந்திரி" என்ற அற்புதமான கடவுள் நம்முடைய இந்து மத சமயத்தில் காணப்படுகிறார். அந்த தன்வந்திரி காயத்ரி சொல்லி ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டு அதில் தூய நீரைப் பாய்ச்சி பின்பு தன்வந்திரி மந்திரத்தை உச்சாடனம் செய்து அந்நீரை நீங்கள் குடிக்க எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் கட்டுக்குள் அடங்கும்.

ஒருவருடைய ஜாதகத்திலே

"ஔடத காரகன்" என்று சொல்லப்படுகின்ற புதன், நல்ல நிலையில் இருந்தால், எந்த நோயாக இருந்தாலும், அது எப்படிப்பட்ட தாக்கம் கொடுத்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு, "காக்கும் கடவுள் விஷ்ணுவின்" திருவடியை நாம் நாட வேண்டும். அடி பணிய வேண்டும்

"நாராயணீயம்" என்று சொல்லப்படும் மந்திரப் பாடல்களை நீங்கள் பாட வேண்டும். யோக நரசிம்மர் என்று சொல்லப்படுபவரை, நீங்கள் வணங்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் கடைபிடித்து செய்யும்பொழுது, அற்புதமான பலன்களை நீங்கள் பெறலாம், என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

இது உறுதி. மிருகங்களெல்லாம் கடவுளை வணங்குகின்ற இந்த கலியுகத்திலே, நாம் ஏன் வணங்கக்கூடாது. வேலூர் மாவட்டத்தில், "நாராயணபுரம்"

என்றழைக்கப்படுகின்ற இடத்திலே பஞ்சாங்கம் படிக்கும் திறனற்ற, அதன் தன்மையறியாத ஒரு காட்டு யானை வருடத்திற்கு ஒருமுறை பிள்ளையார் சதுர்த்தி அன்று வந்து, சிவபெருமானை வணங்கி, மேன்மை பெறுகிறது என்றால் நாம் ஏன் பெற முடியாது, என்பதை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்

மிருகங்கள், அதனுடைய பக்தி பலத்தக் காட்டி, சக்தி பலத்தைக் கூட்டி, மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால், நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது

எனவே, அன்பர்களே, சொல்லுகின்ற பரிகாரங்களை, சரியான முறையிலே நீங்கள் செய்தால், நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள், சந்தோஷமாக இருப்பீர்கள் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment