Friday, June 12, 2020

ருது ஆகாத பெண்கள் ருதுவாக பரிகாரம்

இன்று நாம் காணவிருப்பது, ருது தன்மையை அடையாமல், இருக்கின்ற அமைப்பை உடைய பெண்கள், அவர்களின் பெற்றோர்கள் பெரும் கவலைக்கு உள்ளாகிறார்கள். ஏக்கத்திற்கு ஆளாகிறார்கள்

ஒரு பெண் தாய்மை அடைய வேண்டுமென்றால் அவள் கர்ப்பம் தரிப்பர் குரிய தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்தகுதியைப் பெற அப்பெண் உரிய நேரத்திலே ருதுவாக (பூப்பெய்திய) வேண்டும். இந்த "ருது ஜாதகங்கள் கிராமப்புறங்களிலே மிகவும் பிரச்சித்திப்பெற்றவையாக இருக்கின்றன

அப்படிப்பட்ட, சிலருக்கு அந்த வயதுக்குரிய ருதுவாகாத தன்மையிலிருந்து பெற்றோர்களை கலங்கடித்துவிடுகிறது.

தான் பெற்ற பெண் ருதுவாக மாட்டாளா

அதற்கான ஜாதகத்தை நாம் உருவாக்க முடியாதா? அதன் மூலம் அவளுக்கு மணம் முடித்து மகிழ மாட்டோமா.? என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு நாம் கூறப்போவது ஒரு அருமையான பரிகாரம்,

நம் முன்னோர்கள், பல விதமான கோயில்களை உருவாக்கி இருக்கிறார்கள்

அதில் சொல்லப்படாத பரிகாரங்கள் இல்லை. அந்த பரிகார சாஸ்திரத்தை பார்க்கும்பொழுதுதான் நமக்கு வியப்பே வருகிறது. இப்படிப்பட்ட மக்கள் இவ்வகையில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது கருணையுள்ளம் படைத்த நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச்சென்ற பரிகாரத்தைத்தான் அடுத்து பார்க்கப் போகின்றோம்

தஞ்சை" மாவட்டத்திலுள்ளது "குடவாசல்"

என்ற ஊர். அவ்வூரின் மேற்குப்பகுதியில் 8 கி.மீ தொலைவில் "ஆண்டாங்கோயில்

இத்திருக்கோயிலிலே

"சொர்ணாம்பிகை அம்மன்" என்ற அம்மன் இருக்கிறார்

இந்த அம்மனை, அ கோயிலுக்குச் சென்று

"வழிபாடு" செய்யும்பொழுது, ருதுவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய வயதில் வந்துவிடும். அதன் மூலம் திருமண வாழ்வை நோக்கி அவர்கள் சந்தோஷம் வானில் சிறகடித்து பறப்பார்கள்

கடவுள் பெண்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கும் பேருணர்வு "தாய்மை

என்ற உணர்வு, அது பெண்களுக்கான ஆனந்த உணர்வும்கூட. மனிதனை சிருஷ்டிப்பவர் கடவுள். அதுபோன்றே தன்னுயிரையும் எண்ணாது ஓருயிரை சிருஷ்டிக்கும் பெண்ணும் அதே கடவுளின் நிலையை பெறுகிறாள். அதனால்தான் இந்த பூமியில் தாயை கண் கண்ட தெய்வம் என்று சித்தர்களும் முனிவர்களும், முன்னோர்களும் மகான்களும் போற்றி புகழ்ந்திருக்கிறார்கள் என்றால் அது தாய்மையின் பெருமை. ஒரு பெண்ணுக்கு

தாய்மை நிலை" ஏற்பட்டால்தான் அவளின் வாழ்க்கை முழுமை அடைகிறது

ருதுவாகாத பெண்பிள்ளை மனதளவில் வளராமல், உடலளவில் வளர்வதால் அக்குடும்பத்தில் துயரமும் வளர்ந்துகொண்டு போகிறது

அந்நிலையை மாற்றவே மேற்குறிப்பட்ட

"ஆண்டாங்கோயில்" சொர்ணாம்பிகை அம்மனை தரிசித்து வழிபட வேண்டுமென்று உபதேசிக்கப்படுகிறது

அவ்வாறு வணங்கும்பொழுது பெண் ருதுவாவது நிச்சயம், அந்த அற்புதத்தை நிகழ்த்துவது அன்னை

"சொர்ணாம்பிகை யின்" தனித்தன்மை என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment