சித்தர்கள் நம்மிடம் விரும்பி எதிர்பார்ப்பது தினமும் கோயிலுக்குச் செல்வதும்! ஆண்டுக்கு மூன்று முறையாவது தர்ப்பணம் செய்வதும் மட்டுமே!!
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை , புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை என்று மூன்று முக்கியமான அமாவாசை நாட்கள் வருகின்றன.
இதில் ஏதாவது ஒரு அமாவாசை அன்று மட்டுமாவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் போதும் என்ற சூழ்நிலை வந்துவிட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது ஒரு முக்கிய கடமையாக வைத்திருந்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.
500 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை ஒரு முதல் கடமையாக நம்முடைய முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.
இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலமாக நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து நமக்கு ஆசீர்வாதம் அளிப்பார்கள் .
அதன் மூலமாக நமக்கு இதுவரை இருந்து வந்த கடன் சீக்கிரம் தீர்ந்து விடும் நோய் வெகு விரைவில் குணமாகிவிடும் வறுமை நம்மைவிட்டு படிப்படியாக அதேநேரம் நிரந்தரமாக விலகிச் சென்றுவிடும்.
ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் கடந்த 12 ஆண்டுகளாக விடுபட்டதற்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.
தை மாதம் முதல் நாள் அன்று நாம் செய்யும் தர்ப்பணம் கடந்து 1500 தலைமுறையாக நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட புண்ணியம் நம்மை வந்து சேரும் என்று சித்தர் பெருமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அன்னதானம் செய்தால் போதுமானது. அவ்வாறு செய்யப்படும் அன்னதானத்தை பித்ரு தற்பணம் ஆக நம்முடைய முன்னோர்களை பித்ருக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பரசுராமன் மகரிஷியின் அருள் தவத்தால் நமக்கு இந்த எளிமையான வரம் கிடைத்திருக்கிறது.
பிதுர் முக்தித் தலங்கள் என்று போற்றப்படும் ஆலயங்கள் ஏராளமாக நம்முடைய ஆன்மீக தமிழ்நாட்டில் இருக்கின்றன. அங்கு தற்பணம் செய்வதன் மூலமாக நம்முடைய பித்ருக்கள் பித்ரு தெய்வ நிலையை அடைவார்கள்.
வடக்கே காசி, பிரயாகை என்ற அலகாபாத்,கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ,திரி யுக் நாரா யன், அமர்நாத் போன்றவை பித்ரு என்ற பிதுர் முக்தித் தலங்கள் ஆகும்.
ஆந்திர மாநிலத்தில் மந்த்ராலயம் , ஸ்ரீசைலம் போன்றவை முக்கிய தலங்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள பித்ரு முக்தி தலங்கள் பட்டியல்:-
சென்னை அருகில் அரசர் கோயில், திருவள்ளூர் ,விரிஞ்சிபுரம், காவேரிப்பாக்கம்
திருவண்ணாமலை, விருத்தாசலம்
செங்கல்பட்டு அருகில் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், முக்கூடல் என்ற பழையசீவரம்
திருவாரூர் அருகில் திருவிடைமருதூர் திருவாரூர், குருவி ராமேஸ்வரம் , கேக்கரை
மன்னார்குடி அருகில் திருக்கொள்ளிக்காடு ,இடும்பாவனம், ஆவிக்கோட்டை
தஞ்சாவூர் அருகே பாபநாசம், திருவையாறு, திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, ஸ்ரீவாஞ்சியம் ,திருவிடைமருதூர்
திருச்சி அருகே ஸ்ரீரங்கம், திரிவேணி சங்கமம் ,பூவாளூர், நத்தம் ,திருமாந்துறை ,அன்பில்
கரூர் அருகில் நெரூர்
கடலூர் அருகே திருவஹீந்திபுரம்
புதுக்கோட்டை அருகே காஞ்சாத்து மலை, வேங்கட குளம் ,நெடுங்குடி, மணமேல்குடி தேனிமலை
ஆவுடையார் கோயில் அருகே திருப்புனவாசல், தீர்த்தாண்டதானம், முத்து குடா, மீமிசல் ,பொன்பேத்தி
கும்பகோணம் அருகே சேஷம்பாடி, நரிக்குடி, கஞ்சனூர் ,கஞ்சனூர் அருகிலுள்ள திரையை லோக்கி, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, கும்பகோணம் ஊருக்கு உள்ளே அமைந்திருக்கும் மகாமகக் குளம்
மதுரைக்கு அருகே திருக்கோளக்குடி, திருபுவனம்
ராமேஸ்வரம், தனுஷ்கோடி ,அக்கா மடம், தங்கச்சிமடம் ,கோடியக்கரை, வேதாரண்யம் ,கன்னியாகுமரி
போன்றவை பிதுர் முக்தித் தலங்கள் ஆகும்.
No comments:
Post a Comment