கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்
ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள் சுடும் வெய்யிலில் கடுவெளியில் ஏனிந்த வாழ்க்கை என ஏகாந்தமாய் எக்களித்த சடைமுடி சுவாமியே விடைதெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும் எம்மை கைப்பிடித்து கரைசேர்ப்பாய் கடுவெளி நாதரே
சித்தர் வரலாறு
இந்தச் சித்தர் பெருமானின் ஊர் சோழ நாட்டில் உள்ள கடுவெளியாதலால், ஊர் காரணமாக இப்பெயர் பெற்றார். கடுவெளி சித்தரை "கழுவெளி சித்தர் என்பாருமுண்டு.அவர், சீர்பெற்று பிரபஞ்சம் சுத்தவெளி என்று கண்டார்
இவருடைய பாடல்கள் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற அளவிற்கு, இவரின் வரலாறு யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் ஆகிவிட்டது. இருப்பினும் இவரது பாடல்கள் தேனினும் இனிய சுவை கொண்டுள்ளன. அதிலும்
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு
என்ற பாடல் மிகவும் பிரபலமானது. சித்தர் அவர்கள் சித்தி அடைந்த திருத்தலம் காஞ்சிபுரம் ஆகும். ஜனன ஜாதகத்தில் யாருக்கெல்லாம் சூரிய கிரகத்தால் தோஷம் உள்ளதோ அது அகலும், இவரை வணங்க தாம்பரம், மாடம்பாக்கம்
"தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில்"
அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ரோஜாப்பூவண்ண வஸ்திரம்.தும்பைப்பூ வில்வதளம், குருத்தப்பூ ஆகிய புஷ்பங்களை கொண்டும், பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்
பதினாறு போற்றிகள்
வனத்தில் வசிப்பவரே போற்றி
விநாயகப்பிரியரே போற்றி
துக்கத்தை போக்குபவரே போற்றி
ஞானவழி காட்டுபவரே போற்றி
அண்டங்களுக்கெல்லாம் சென்று பூஜிப்பவரே போற்றி சஞ்சாரம் பிரியரே போற்றி
ஓம் லபம் ருணம் நசி பீஜாட்சரம் உடையவரே போற்றி ஸ்ரீ சிவஸ்வாமியே போற்றி
ஜடாமுடி உடையவரே போற்றி
மருந்துகளில் ப்ரியம் உள்ளவரே போற்றி
வாளா சித்தரே போற்றி ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி
காவி வஸ்திரம் தரிப்பவரே
வில்வ பிரியரே போற்றி
இன்மொழி பேசுபவரே போற்றி
வெட்ட வெளியில் சஞ்சாரம் செய்யும் ஸ்ரீ கடுவெளி சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி
இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு பின்வரும் மூலமந்திரத்தை ஓம் லபம் ருணம் நசீம் ஸ்ரீ கடுவெளி சித்தர் ஸ்வாமியே போற்றி" என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்
அதன்பின் நிவேதனமாக கடுக்காய் தீர்த்தம் வைக்க வேண்டும். (கடுக்காயைத் தட்டி ஊற வைத்து கசக்கி வடிகட்டி தேன்கலந்து வைக்க வேண்டும்) பின்னர் அவரை மனமுருக பிரார்த்தித்து, நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்
ஸ்ரீ கடுவெளி சித்தரை வணங்குவதால், சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் அகலும், முன்வினைக் கோளாறு, பித்ரு சாபம் நீங்கி, நமக்கு நிம்மதி கிடைக்கும்
தந்தை மகன், தந்தை-மகள் சம்பந்தப்பட்ட தகராறுகள் நீங்கும். பித்ருராஜிய சொத்துத்தகராறுகள் நீங்கி வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். திறமை இருந்தும் புகழ் கிடைக்காத நிலை அகலும், இருதய சம்பந்தப்பட்ட கோளாறுகள், உஷ்ண சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். உலகம் முழுவதும் பேரும், புகழும் கிடைக்கும்
நம்
கிடைக்காத நிலை அகலும், இருதய சம்பந்தப்பட்ட கோளாறுகள், உஷ்ண சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். உலகம் முழுவதும் பேரும், புகழும் கிடைக்கும் பட்டணத்துச் சித்தரை எவ்வாறு வணங்கினோமோ அதுபோன்று கடுவெளி சித்தரையும் வணங்க சூரியனால் ஏற்படுகின்ற தோஷங்கள் காணாமற்போய் விடுகின்றது. என்றால் அது அவரின் முக்கிய சிறப்பாகும் அதாவது ஒரு கிரகத்திற்கு இரண்டு சித்தர்கள் வீதம் மாடம்பாக்கத்திலே 18 சித்தர்கள் காட்சியளிக்கின்றார்கள் அவர்களை வணங்கி நீங்கள் நலம் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறன்.Watch daily rasi palan and parigaramum palangalum at www.drsrikumarjothidam.com for appointment call 9962081424 and whatsapp no 9176828958.
No comments:
Post a Comment