Sunday, July 12, 2020

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

பூஜை அறை எப்படி அமைக்கவேண்டும்.,
-----------------------------------------------------------------
நம் இல்லத்தில் முக்கியமாக அமைக்க வேண்டியது பூஜை அறை அதை எப்படி அமைக்க வேண்ய்டும் என்பதை பார்ப்போம்...,

*ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது தென் மேற்கில்,அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். 

*கீழ்வீட்டிலும்,மாடியிலும் ஒரே குடும்பத்தவர் வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

*பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்.

*பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

*தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.

*பூஜை அறையில் காலஞ்சென்ற முன்னோர்களின் புகைப் படங்களை எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது.

*பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

*இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அலமாரிக ளை பூஜை அறையாக பயன்படுத்தினால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை கதவு அல்லது திரைச்சீலையால மூடி வைக்க வேண்டும். 

*பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

*ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.

*பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment