காகபுஜண்டர் சித்தர் தியானச்செய்யுள்
காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய மகா
ஞானியே
யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும் காக்கை ஸ்வாமியே
மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய் காக புஜண்ட சுவாமியே
சித்தர் வரலாறு:
தமிழ் நாட்டில் திருச்சியில் பிறந்த இந்த தவப்பெருமாள் உருவத்தில் கருமையாக இருப்பினும், எங்கும், எதிலும் உண்மை காணும் தன்மை உடையவராய் உலகெங்கும் பவனி வந்தார்
"மாசில்லா மனமே மகேசனின் மாளிகை
என்று தன் ஞானப்பாடல்களில் சித்தர் தத்துவத்தை சிறப்புறச் சொல்லியிருக்கிறார்.
பிரளய காலத்தில் ஆலிலையில் சயனித்திருந்த கிருஷ்ண பரமாத்மா சுதர்சன சக்கரத்தின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த பொழுது, அவ்வழியே சென்ற காக புஜண்டஸ்வாமி சர்வ சாதாரணமாக அதை கட்டுப்படுத்தி சென்றாராம்
அது மட்டுமல்ல ஈரேழு உலகமும் பிரளயத்தில் ஸ்தம்பித்த சமயத்திலும் காக்கை ரூபமாக காகபுஜண்டஸ்வாமி மட்டும் உயிரோடு இருந்தார்
காகபுஜண்டர் சித்தர், பல யுகங்கள் அழிந்து பின்பு சிருஷ்டி உருவானதை, மலைமேல் ஒரு கல்லாக நின்று, தான் பார்த்ததாகக் கூறுகின்றார். இராமதேவர் சுவாமிகள் இவர் வரலாற்றை நேரிலே கேட்டிருக்கின்றார். மொத்தத்தில் காகபுஜண்டர் ஸ்வாமிகள், பிரளயத்திற்கே பார்வையாளனாக இருந்திருக்கின்றார், இவரை வணங்க நாம் தாம்பரம் மாடம்பாக்கம் "தேனுபுரீஸ்வரர் ஆலயத்திற்கு' அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு" வியாழனன்று மஞ்சள் வஸ்திரம், நிலோத்பலம், நீலசங்கு, தவனம் மரு ஆகிய புஷ்பங்களில் ஏதாவது ஒரு புஷ்பத்தால் பின் வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்
பதினாறு போற்றிகள்
மகா ருத்ரன் போற்றி
சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி
ஸ்ரீம், ஹ்ரீம், லம், நமஹ. ஸ்வம், பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
அசுரர்களை அழிப்பவரே போற்றி
தேவர்களைக் காப்பவரே போற்றி
ஸ்ரீராமரை பூசிப்பவரே போற்றி அன்னப்பிரியரே போற்றி
மானஸா தேவியை வணங்குபவரே போற்றி
சிவசக்தி ஐக்கியத்தைத் தரிசிப்பவரே போற்றி
மகானுகளுக்கெல்லாம் மகானே போற்றி
மனிதர்களை வணங்கும் தெய்வமே போற்றி நோய்களுக்கு மருந்தே போற்றி
கோடி லிங்கங்கள் பூஜிப்பவரே போற்றி
பாவத்தைப் போக்குபவரே போற்றி
நாரதகானப் பிரியரே போற்றி
ஸ்ரீ ராமர் பாதத்தை தரிசனம் செய்த ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு, பின்வரும் மூல மந்திரம் "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் லம், நமஹ,ஸர்வம், ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி!" என்று 108 முறை ஜெபிக்க வேண்டும் பின்பு, நிவேதனமாக வறுத்த கடலை, தண்ணீர் ஆகியவற்றை வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூற வேண்டும்.(பச்சை வேர்க்கடலையை வாணலியில் வறுத்து மூக்கையும், தோலையும் நீக்க வேண்டும்). நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்
இவரை வணங்குவதால் பெறும் நன்மைகள்
நமது ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பாதிக்கப்பட்டிருந்தால் குரு மறைவு ஸ்தானத்திலே இருந்தால் குரு நீச்சம் பெற்றிருந்தால் குரு பகை பெற்றிருந்தால் ல் மறைந்திருந்தால் அவருக்கு குரு தோஷம் ஏற்படும்
பணப்பிரச்சினை, புத்திரக்கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினை, இவை அனைத்தையும் தீர்க்கக்கூடிய வரும்
வியாபாரத்தில் பணநஷ்டம், சமாளிக்க முடியாத நிலை அகன்று லஷ்மிகடாட்சத்தை பெற செய்பவர், வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் இவரை வணங்குவதால் நமக்கு நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலையும் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையையும் அதனால் ஏற்படும் வழக்குகளும் அகலும்.
ஆகவே, இப்பேற்பட்ட சித்தரை வணங்கி நற்பலன்களைப் பெற வேண்டுமென்று கூறி, அப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.
No comments:
Post a Comment