Saturday, July 4, 2020

ராமானுஜர் சிறு குறிப்பு

ராமானுஜர் சிறு குறிப்பு

ஆளவந்தாரை பார்க்க வேண்டுமென ஆவலுடன் ஓடிவந்த ராமானுஜரோ திக்பிரமை பிடித்தவர் போலானார். சுவாமி

இதைக்காணவா என்னை அவசர அவசரமாய் வரச் சொன்னீர்கள். ரங்கநாதா

இதென்ன கொடுமை

என் சுவாமியை என்னிடமிருந்து பிரித்து கொடுமை செய்த உன்னை சேவிக்காம்பே ஊர் திரும்புவேன், என்றவராய் மயங்கி விழுந்துவிட்டார்.

அழைத்து வந்தவர் மயங்கிக் கிடக்க, சுதாரித்துக் கொண்ட பெரிய நம்பி, அவருக்கு மயக்கம் தெளிவித்தார் பின்பு ஆளவந்தாரின் அருகில் சென்ற ராமானுஜர், அவரது வலது கையில் வித்தியாசத்தைக் கண்டார்

அங்குள்ள சீடர்களை அழைத்து, ஆச்சாரியரின் கையைக் கவனித்தீர்களா?

இவரது மூன்று விரல்கள் அடங்கியிருக்கிறது.

அவருக்கு எப்போதுமே இப்படித்தான் இருக்குமா? என்றார்

சீடர்கள், இல்லையே சாதாரணமாகத்தான் அவரது கை இருக்கும்.

இப்போது தான் விரல்கள் அடங்கியுள்ளன என்றார்

ராமானுஜர், ஆளவந்தாரின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்

அழுதுகொண்டிருந்தவர்கள் கூட அழுகையை நிறுத்திவிட்டு, அவர் என்ன செய்யப் போகிறார் என கவனித்தனர்.

மடமே நிசப்தமாய் விட்டது

ஆளவந்தார் இறந்தவரைப் போன்றே தெரியவில்லை.

அவரது முகம் பிரகாசமாக இருந்தது. ராமானுஜர் அந்த முகத்தைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தது போல, அனைவருக்கும் தோன்றியது. அப்போது ராமானுஜர் சத்தமாக பேச ஆரம்பித்தார், அவர் பேசப்பேச ஒரு பேரதிசயம் அங்கு நிகழ்ந்தது.

ராமானுஜர் அப்படி என்ன தான் பேசினார்

அங்கு என்னதான் நிகழ்ந்தது? ராமானுஜர் பேச ஆரம்பிக்கிறார். நான் திருமாலின் நெறியில் வாழ்வேன். மக்களின் அறிவின்மையை போக்குவேன்

அவர்களுக்கு வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கையும் வேத மந்திரம் கூறி முத்திரையாகப் பதிப்பேன்

திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி திருமண் கொண்டு நாமம் இடுவேன். தொண்டர்களைக் கவுரவிக்க வைணவப் பெரியவர்களின் பெயர் வைப்பேன்

சீடர்களுக்கு திருமாலை வழிபட வேண்டும் என ஆணையிடுவேன்.

மந்திர உபதேசம் செய்து வைப்பேன் என்றதும், ஆளவந்தாரின் மடங்கியிருந்த ஒரு கைவிரல் விரிந்து நேராக நின்றது. ஆ. இது என்ன பேரதிசயம்.

இந்த இளைஞர் பேச ஆரம்பித்ததும், இறந்து போனவரின் கைவிரல் விரிகிறதென்றால், இதை விட என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என சீடர்களெல்லாம் விக்கித்து நின்றனர். மீண்டும் ராமானுஜர் பேசினார்.

மக்களைப் பாதுகாக்க தத்துவ ஞானம் தொகுத்து ஸ்ரீபாஷ்யம் இயற்றுவேன், என்றதும் மூடியிருந்த இன்னொரு விரல் நேரானது

விஷ்ணு புராணத்தை எழுதியருளிய பராசர் முனிவரின் பெயரை, படித்த வைணவர் ஒருவருக்கு வைப்பேன், என்றதும் மூடியிருந்த மூன்றாவது விரல் நேராக நின்றது

இந்த அதிசயம் நிகழ்ந்தது, ஆளவந்தார் போல இவரே ஒரு காலத்தில் வைணவர்களின் தலைவர் ஆவார் என அங்கிருந்தோரெல்லாம் பேசிக் கொண்டனர். பின்னர் ராமானுஜர் ஊர் திரும்பி விட்டார்

ஆனால், அவரிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு இளைஞருக்குரிய எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், ஏதோ முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார்.

பெரும்பாலான நேரத்தை திருக்கச்சி நம்பியுடன் கழித்தார். குடும்பத்தை கவனிக்காததால், அவரது மனைவி தஞ்சமாம்பாள் வருத்தமடைந்தார்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.


No comments:

Post a Comment