உங்களுக்காக
ஸ்ரீ சட்டைமுனி ஸ்வாமி தியானச்செய்யுள்
சித்த வேட்கை கொண்டு சிவனுடன் கலந்த சிங்களச்சிலரே அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற
அற்புத மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே
சித்தர் வரலாறு:
சிங்கள நாட்டில் பிறந்த இந்த பெருமான்.
தாய் தந்தையரோடு பிழைப்பதற்காக தமிழ் நாட்டிற்கு வந்தார்
விவசாயக்கூலியாக இருந்த சித்தர், வேலையில்லா நாட்களில் கோயில்களில் தட்டை ஏந்தி யாசகம் பெற்று தாய் தந்தைக்கு உதவி செய்து வந்தார்
திருமணம் நடைபெற்றும் நம் பெருமானுக்கு இல்லறத்தில் மனம் லயிக்கவில்லை . ஒரு நாள் கோயில் வாசலில் நின்றிருந்த பொழுது, சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரின் அபூர்வ சக்தி இவரை ஆட்கொள்ள வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் அவருடன் கிளம்பிவிட்டார்
தம் குருவிடம் ஞானோபதேசம்" பெற்ற சட்டைமுனி ஸ்வாமி போகரின் சீடரான, சித்தர் மார்க்கத்தில் இணைந்தார். பின்பு அகஸ்தியரிடமும் ஞானம் பெற்றார்
தான் பெற்ற ஞானத்தை மனிதகுலம் முழுவதற்கும் உபதேசித்தார். பொதுவாக சித்தர்கள் தமது சாதனைகளை பரிபாஷையிலேயே எழுதுவது வழக்கம்.
இவர் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக எழுதியதால், இவருடைய "தீட்சாவிதி" என்ற நூலை
*திருமூலர்" கிழித்திருக்கின்றார். பின்னர் இவரது நூல்கள் சிவபெருமானின் அருளோடு குகையில் வைத்து பாதுகாக்கப்பட்ட இருக்கிறது.
கால்நடையாக அரங்கனை தரிசிக்க விரும்பிய சட்டை முனி சித்தர், கோவில் அடைவதற்குள் அர்த்த சாமபூஜை முடிந்து கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. ஏமாற்றம் அடைந்த சித்தர் அரங்கா, அரங்கா, அரங்கா என்று மும்முறை கதற, கதவுகள் தாமாகத் திறந்து கொண்டு மேளதாளங்கள் ஒலிக்க கோவில் மணி முழங்க அரங்கன் காட்சி தந்தார். அதுமட்டுமல்ல, தன்னுடைய அணிகலன்களை சட்டைமுனி சித்தர்கள் அணிவித்து மகிழ்ந்தார்
இவர் நவக்கிரகத்தில் கேது பகவான் பிரதிபலிப்பவர் ஆதலால், இவரை வழிபட்டால், சித்தப்பிரமை கோளாறு மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை அகலும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும், நல்ல முறையில் பரீட்சை எழுதும் மனநிலை தோன்றும். உடல் கோளாறுகள் மனக்கோளாறுகள் அகன்று தெளிவு ஏற்படும், கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய திருமணத்தடைகள் மற்றும் களத்திர தோஷம் நீங்கும் திருமணம் நல்ல முறையில் நடக்கும், தீயபழக்கம் அகலும், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்,
ஒரு வெள்ளிக்கிழமையன்று இவரை தாம்பரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் அருகிலுள்ள 'சித்தர் பீடத்திற்கு" பலவர்ண வஸ்திரம், ஜாதிப்பூ அல்லது விருட்சப்பூ அல்லது வில்வம் கொண்டும், பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்
பதினாறு போற்றிகள்
திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி ஸ்ரீசக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி
தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி
ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி அக்னி பகவான் பூசிப்பவரே போற்றி வருண பகவானை வணங்குபவரே போற்றி நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி ஸ்ரீஸ்கந்த வணங்குபவரே போற்றி
கவலைகளை அகற்றுபவரே போற்றி நோய்களை அழிப்பவரே போற்றி
வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி
காம குரோதத்தை அழிப்பவரே போற்றி
சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி
ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
ராமநாமப் பிரியரே போற்றி
எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி போற்றி
இவ்வாறு பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சித்த பின்பு, பின்வரும் மூல மந்திரம் "ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்
பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன்கதளி (செவ்வாழை) வைத்து படைத்து உங்களின் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்டி, நிறைவாக தீபாராதனை செய்து வழிபடும் பொழுது நற்பேறுகளையும், பலன்களையும் பெறுவீர்கள் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube, Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.
No comments:
Post a Comment