தியானச்செய்யுள்
மண்ணை இனிக்க வைத்த பிண்ணாக்கு ஈசரே பொன்னை மக்கள் முன்னே கொண்டு வந்த
பொற் சீலரே
உன்னை துணையென்று வந்த எமக்கு கண்ணை திறந்து அருள்வாய் சென்னிமலை சித்தர்,
சித்தர் வரலாறு
இடையர் குலத்தில் பிறந்த இந்த அருட்செம்மல், பிளவுபட்ட இரட்டை நாக்கை உடையதால் "பிண்ணாக்கீசர்' என்ற காரணப்பெயர் பெற்றார்
அத்திமர பொந்தோன்றைத் தன் இருப்பிடமாக ஆக்கிக்கொண்ட பிண்ணாக்கீசர் முன்னிலையில்
"பாம்பாட்டி சித்தர்" ஒரு முறை தோன்றி ஞானத்தை உபதேசித்தார். அன்றிலிருந்து நம் பெருமானிடத்தில் சித்துக்கள் விளையாடத் துவங்கின
நோய் தீர்க்கும் தன்வந்திரி யாக இவர் விளங்கியிருக்கின்றார். மண்ணையே மருந்தாகக் கொடுத்து, தீராத வியாதிகளுக்கெல்லாம் விடை கொடுத்திருக்கின்றார்.
இவர் பாடல்கள் பதிணென் சித்தர் கோவையில் காணப்படுகின்றது.
இறுதியில் அத்திமரத்தினுள்ளே
சிவபெருமானை தரிசித்து, அதன் உள்ளேயே ஐக்கியமாகி விட்டார் பட்டுக்கிடந்த அந்த மரம் இவர் சித்திக்குப்பின் பச்சை பச்சையாய் துளிர்த்து செழித்தது
பிண்ணாக்கீசர் ஜீவசமாதி அடைந்த அம்மரத்தை மக்கள் வழிபட துவங்கினர்.
இன்றும் நோய் வந்தவர் அந்த மரத்திற்கு காப்புக்கட்டி பூஜை செய்து பின் அதன் இலைச்சருகை கசாயம் வைத்துக்குடித்தால், நோய் உடனே குணமாகும்
இச்சித்தர் பெருமான் நவக்கிரகங்களில் சுக்கிர கிரகத்தை பிரதிபலிப்பவர். இவரை முறையாக வழிபட்டால் ஜாதகத்திலுள்ள சுக்கிர கிரகதோஷம் அகலும். சுக்கிர கிரகத்தினால் ஏற்படக்கூடிய களத்திர தோஷம்,திருமண தடை நீங்கி, திருமணம் இனிதே நடக்கும்
கணவன், மனைவி இடையே உள்ள ஊடல் பூசல் நீங்கி ஒற்றுமை பெருகும் பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அகலும். மாமியார் மருமகன், மருமகள்-மாமியார் பிரச்சினைகள் நீங்கும். உடலில் மர்மஸ்தானத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்
மகாலட்சுமியின் அருள் பொங்கும்
இந்தச் சித்தர் பெருமானை வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் மாடம்பாக்கம் 'தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின்' அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு வெள்ளை வஸ்திரம், மல்லிகை, அல்லி, தாமரை புஷ்பங்கள் ஆகியவற்றைக் கொண்டும். பின் பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்
பதினாறு போற்றிகள்
சகடப்பிரியரே போற்றி
தெய்வநாமங்களை ஜெபிப்பவரே போற்றி
பைரவரை பூஜிப்பவரே போற்றி
கஷ்டங்களைப் போக்குபவரே போற்றி
சிவனே போற்றி லட்சுமி கடாட்சம் அளிப்பவரே போற்றி நவரத்தின மேனி உடையவரே போற்றி
வாழைக்காட்டில் வசிப்பவரே போற்றி
மானஸாதேவியை வணகுபவரே போற்றி
எதிரிகளை அழிப்பவரே போற்றி
சஞ்சாரம் செய்பவரே போற்றி
மூலிகைகளை முடியில் தரிப்பவரே போற்றி பூலோகத்தில் வசிப்பவரே போற்றி
ஓம் வம் பீஜாட்ஷரம் உடையவரே போற்றி
தரிசிப்பவரே போற்றி
கும்ப முனியை தேவலோக நாதத்தில் ப்ரியம் உள்ள ஸ்ரீ சென்னிமலை சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி
இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு, பின்வரும் மூலமந்திரத்தை "ஓம் வம் ஸ்ரீ சென்னிமலை சித்தர் ஸ்வாமியே போற்றி" 108 முறை ஜெபிக்க வேண்டும்.
பின்பு, நிவேதனமாக "கர்ஜீரகக்காய் தீர்த்தம்" வைக்க வேண்டும் (கர்ஜீரகக்காயைத் தட்டி உள்ளே இருக்கும் விதையை நீக்கி வேகவைத்து சாறு எடுத்து வடிகட்டி தேன் கலக்க வேண்டும்) அதன்பின்பு, உங்கள் பிரார்த்தனையை மனமுருகிக் கூறி வேண்டி தீபாராதனை செய்ய உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.
No comments:
Post a Comment