Thursday, July 9, 2020

கறிவேப்பிலையின் ஆன்மீக ரகசியம்

🌿 #கறிவேப்பிலை இல்லாத #பிரசாதம்.


நாம் 🌿 கறிவேப்பிலையை சர்வ சாதாரணமாக சாப்பாட்டிலிருந்து எடுத்து தனியே வைத்து விடுகிறோம். ஆனால் இந்த கறிவேப்பிலைதான் ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் தனித்தனியாக திருமலையிலும், திருச்சானூரிலும் பிரித்து வைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடியவில்லை அல்லவா?


ஆகாச ராஜன் தன் மகளான #பத்மாவதி தாயாரை ஏழுமலையானுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த திருமண நிகழ்ச்சி சித்தூர் மாவட்டம் #நாராயணவனத்தில் முக்கோடி தேவர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் #திருமாலும் #பத்மாவதி தாயாரும் #திருமலை நோக்கிச் சென்றனர். அங்கு #ஸ்ரீனிவாச #மங்காபுரம் என்னும் ஊரில் #கல்யாண #வெங்கடேஸ்வர #பெருமாள் சிறிது காலம் தங்கினார்.


இந்த நிலையில் பத்மாவதி தாயார் தனது தாய் வீட்டு சீதனத்தில் உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பெருமாளுக்கு கொடுத்து உள்ளதாகவும், ஏதேனும் குறைகள் இருந்தால் கூறும்படியாகவும் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமால் #கறிவேப்பிலை தவிர அனைத்து பொருட்களும் சீதனமாக வந்திருப்பதாகக் கூறினார்.


இதனால் பத்மாவதி தனது தாய் வீட்டிற்கு சென்று 🌿 கறிவேப்பிலை எடுத்து வருவதாக திருமாலிடம் தெரிவித்தார். அதற்கு திருமால் சூரிய உதயத்திற்கு முன் திரும்பி வருமாறும் இல்லையேல் தான் தனியாக திருமலை சென்று விடுவதாகவும் கூறினார்.


தாய் வீட்டிற்குச் சென்ற பத்மாவதித்தாயார் கருவேப்பிலை எடுத்து வருமுன் சூரிய உதயம் தொடங்கிவிட்டது.


#சூரிய #உதயத்தைக் கண்ட #பத்மாவதி #தாயார் #திருச்சானூர் அருகே தனியேநின்று விட்டார். பத்மாவதி சூரிய உதயத்திற்குள் வராததால் #ஸ்ரீனிவாசனும் தன்னந்தனியே #திருமலைக்குச் சென்று தங்கி விட்டார். இதன் காரணமாக இன்றுவரை #ஏழுமலையானின் #நைவேத்தியத்தில் #கறிவேப்பிலை சேர்ப்பதில்லை.

Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment