Friday, July 10, 2020

சிவவாக்கிய சித்தரின் வழிபாடு



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, பதினெட்டு சித்தர்களில் ஒருவராக விளங்கும் "சிவவாக்கிய சித்தர் அவர்களை பற்றியதாகும்.

குழந்தைகள் அன்னையின் வயிற்றிலிருந்து இப்பூவுலகத்திற்கு வரும்பொழுது குவா" என்று அழுகின்ற சப்தத்தை நாம் கேட்கிறோம். இந்த சித்தர் தன் அன்னையின் வயிற்றிலிருந்து வரும்பொழுது 'சிவசிவசிவ' என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இவருக்கு

"சிவவாக்கிய சித்தர் என்று பெயர் இவர் ஒரு முறை கங்கையிலே நாணயங்கள் வீசி எறிந்தார்.

அப்பொழுது கங்கை அன்னை மேலெழுந்து வந்து அந்நாணயங்களை பெற்றுக்கொண்டு மறைந்தாள். மறுதினம் சித்தர் பெருமான் அந்நாணயங்களைச் சென்று கேட்கும் பொழுது, அதே கங்கை அன்னை, அந்நாணயங்களை எடுத்துக் கொடுத்தார். இந்த அற்புதமான காட்சியை சித்தரின் குரு கண்டார். கண்ட மாத்திரத்திலேயே வியந்து மகிழ்ந்தார் சித்தரின் சக்தியையும் தெரிந்து கொண்டார்

குருவானவர், மலைவாசி இனத்தைச்சேர்ந்த ஒரு நரிக்குறவ இனப் பெண்ணை "சிவவாக்கிய சித்தர்கள்' மனம் முடித்து வைத்தார் இல்வாழ்க்கையை காட்டின் ஒரு பகுதியில் இனிமையாக வாழ்ந்துகொண்டிருந்தபொழுது, ஒரு சமயம், தேவை கருதி மூங்கிலை வெட்டச்சென்றார். அப்போது அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது வெட்டுப்பட்ட மூங்கிலிலிருந்து தங்கம் வெளியில் கொட்டிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த சித்தர், "எமன் வருகிறான், எமன் வருகிறார் என்று கத்திக் கொண்டே ஓடினார்

அவர் அவ்விதம் கத்திக்கொண்டு ஓடியதைக் கண்ட சக நரிக்குறவர்கள், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி அவர் விட்டுச் சென்ற தங்கத்தை எடுக்கச்சென்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மாண்டுபோயினர். அப்பொழுதுதான் சித்தர் பெருமான் 'தங்கத்தை எமன் என்று கூறியதன் ரகசியம் புரிந்தது

ஒரு முறை ஒளிபொருந்திய தோற்றத்தில் சித்தர் தமது வீட்டிலே வளர்த்து வந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அப்பொழுது வான்வெளியில் கொங்கணர்" என்றொரு சித்தர் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் அற்புதமான பேரொளி பூமியிலிருந்து வருவதை எண்ணி, பூமியை நோக்கி வர அங்கு சிவவாக்கிய சித்தர்" நிற்பதைக் கண்ட கொங்கணர், யாரிந்த மகான் என்று அருகில் செல்ல, ஒளியும், ஒலியும் சேர்ந்து பேரொளியாக மாறியது. அப்போது கொங்கணர் சித்தரின் வீட்டிலிருந்த இரும்புகளை எல்லாம் தங்கமாக மாற்றினார். அதை அவர் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விட்டார்.

மனைவி அவரிடம் அந்தத் தங்கங்களைக் காட்டினார்

உடனடியாக சிவவாக்கிய சித்தர் பதறிப்போய் அத்தனை அங்கங்களையும், எடுத்து கிணற்றில் போடுமாறு தன் மனைவியிடம் கட்டளை இட, அந்ததெய்வம் அதை எப்படி செய்வது. சித்தரிடம் வந்த சீடர்கள் தங்களுக்கும் தங்கத்தை மாற்றும் ரகசியத்தை கற்றுக்கொடுக்குமாறு வேண்டினர். சித்தர் கூறினார். "சிவத்தை அடக்குங்கள்" நீங்களே தங்கமாக மின்னுவீர்கள், தங்க மயமாக மாறுவீர்கள்"

என்று கூறி அதன் படி வழிகாட்டினார்.

இச்சித்தர் ஜோதிடத்திலே சந்திரனின் நிலையை சொல்பவராக இருக்கிறார்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே, சந்திரன் 5, 8, 12ல் மறைந்தால் அல்லது சந்திரன் பழுதுபட்டால் அவர்களுக்கு மனம் குழம்பும், தடுமாறும் தன தாயுடன் அச்சமயத்தில் கோபித்து சண்டைபோடுவார்கள். தாய்க்கும் மகளுக்கும் உறவு சரி இல்லையென்றாலும், தாய்க்கும் மகனுக்கும் உறவு சரியில்லையென்றாலும், அவர்கள் படிக்கின்ற படிப்பிலே, செய்கின்ற தொழிலிலே, குழப்பம் வருமானால் அவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான சிந்தனை வராமல்,ஜல சம்பந்தமான வியாதிகள் சந்திரனால் ஏற்படுத்தப்பட்டு இவர்களுக்கு வந்தாலும், அத்தனைக்கும் இவர் பரிகாரமாக இருக்கின்றார்.

இவரை வணங்க நீங்கள் செல்ல வேண்டிய இடம் தாம்பரத்திற்கு அருகிலுள்ள மாடம்பாக்கம் 'தேனுபுரீஸ்வரர்" கோயிலில் உள்ள "சிவவாக்கியச்சித்தர்' திங்களன்று சென்று வெள்ளைத்துணி வஸ்திரம் முதலானவற்றை சாற்றி அனைத்துப்பிரச்சினைகளையும் மனதில் நினைத்து 'ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் போற்றி, போற்றி என்ற மந்திரத்தை சொல்ல உங்களின் பிரச்சினைகள்

அனைத்தும் தீர்ந்துவிடுகிறது. நிம்மதி பெருகுகிறது, என்று இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment