Sunday, July 5, 2020

வாகன விபத்தை தவிர்க்க அனுமன் வழிபாடு

*அனுமரை எப்படி வழிபடலாம்? வாகன விபத்து நேராமல் இருக்க கட்டாயம் இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!*



அனுமருக்கு பிரத்தியேகமாக திலகம் ஒன்று இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் அந்த திலகம் மிகவும் விசேஷமானது. ஒரு முறை சீதாபிராட்டியிடம் ஆசி வாங்க சென்ற அனுமாருக்கு, சீதாபிராட்டி செய்து கொண்டிருப்பது விசித்திரமாக இருந்தது. அப்போது அவர் தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொண்டிருந்தார். அனுமர் சீதாபிராட்டியிடம், இச்செயலின் காரணம் என்ன? என்று கேட்க, சீதாப் பிராட்டியும் அதற்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது, ‘நான் நெற்றியில் செந்தூரம் இடுவது, என் ஸ்ரீராமர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காக வேண்டியே ஆகும்’ என்று கூறினார். உடனே அனுமனும் சிறிதும் தாமதிக்காமல் செந்தூரத்தை எடுத்து தன் உடல் முழுவதும் பூசிக் கொண்டார். ஸ்ரீராமரின் மேல் கொண்ட பிரியத்தை விட, அனுமன் கொண்ட பிரியம் உயர்ந்ததாக இருந்தது.

இந்த காரணத்தினாலேயே அனுமனுக்கு செந்தூரம் பிரசித்தி பெற்றதாக விளங்கியது. இன்றளவிலும் அனுமார் கோயில்களில் செந்தூரம் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. தினமும் செந்தூரம் நெற்றியில் வைத்து கொள்வதன் மூலம் பயமறியா தைரியத்தை நம்மால் உணர முடியும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

உண்மையில் செந்தூரம் தினமும் அணிந்து கொள்பவர்களுக்கு எந்தத் தீங்கும் நேர்வதில்லை. அவர்கள் மிகவும் தைரியசாலிகளாகவும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள். அவர்களுடைய உள்ளம் மிகவும் தெளிவுடனும் இருக்கும். அனுமாரை தினமும் வழிபட முடியாவிட்டாலும் சனிக்கிழமைகளில் கட்டாயம் வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

வாகன விபத்துக்களில் இருந்தும், துர்மரணங்கள் நிகழாமல் இருக்கவும் ஹனுமனை தினமும் நினைத்து வழிபடலாம். ஒரு சிவப்பு வண்ண முக்கோண கொடியை எடுத்துக் கொண்டு அதில் ‘ராம’ என்ற பெயரை எழுதி வாகனங்களில் மாட்டிக் கொண்டால் அனாவசியமான விபத்துக்கள் தவிர்க்கப்படும். உங்களுக்கு இருக்கும் கெட்ட நேரத்தை கூட, நல்ல நேரமாக இந்த மந்திரம் மாற்றித் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘ராம’ என்ற மந்திரத்தை கொண்ட வாகனங்கள் எப்போதும் விபத்திலிருந்து பாதுகாக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த கொடியை வீட்டிலும் வைக்கலாம். வீட்டில் வைப்பதால் செல்வ வளம் அதிகரிக்கும். பணம் கொழிக்கும் இல்லமாக உங்கள் இல்லம் மாறும். நீங்கள் தொடங்கும் புதிய தொழில் மற்றும் வியாபாரம் வளர இந்த கொடியை தொழில் செய்யும் இடங்களில் அல்லது வியாபார தளத்திலும் வைக்கலாம்.

சனிக்கிழமைகளில் அனுமாருக்கு செந்தூரம் இட்டால் நல்ல பலன் தரும். செந்தூரத்தை மல்லிகை எண்ணெயுடன் கலந்து திலகம் செய்து அனுமனுக்கு இட்டால் ‘மாங்கல்ய தோஷம்’ நீங்கும் என்பது ஐதீகம். மேலும் மனம் ஒருநிலைபடுவதற்கு இந்த திலகத்தை பயன்படுத்தலாம். மிகவும் சக்தி வாய்ந்த செந்தூரத் திலகம் மனதை சீராக்க வல்லது. சனிக்கிழமை போன்றே செவ்வாய்க்கிழமையும் அனுமனுக்கு உகந்த கிழமையாக இருக்கிறது செவ்வாய்க்கிழமை தோறும் அனுமாருக்கு துளசி மாலை சாற்றி, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம், லட்டு போன்ற நைவேத்தியத்தை படைத்து வழிபடுவதன் மூலம் அனுமனின் அருளையும், ஸ்ரீராமரின் அருளையும் நிச்சயம் பெற முடியும்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment