Wednesday, July 22, 2020

எந்திரம் என்றால் என்ன? எந்தித்தர வழிபாடு என்ன?



யந்திரம்

ஓர் சக்தி வேலைசெய்வதற்கு வேண்டிய உருவஅமைப்பு யந்திரம்.
யந்திரம் இயங்குவதற்கு சக்தி தேவை.இந்த சக்தி பிராணசக்தி மூலம் கிடைக்கிறது.
பிராணசக்தி என்பது மந்திரத்தை உச்சரிப்பவர்களிடமிருந்து வருகிறது.
பிராணசக்தியை உருவாக்குபவர் தவயோகியாக,புனிதமானவராக இருக்கவேண்டும்.
பிராணசக்தி இல்லாமல் உருவாக்கப்படும் யந்திரங்கள் பலன்தராது
-
மந்திரம்,தந்திரம்,யந்திரம் என்று மூன்று இருக்கிறது.
மந்திரம் என்பது சக்தியை உருவாக்குதல்
தந்திரம் என்பது மந்திரத்தின் மூலமும் பல்வேறு பயிற்சிகளின் மூலமும் உருவான சக்தியை தன்னிடம் சேகரித்தல்.
யந்திரம் என்பது  உருவான சக்தியை தன்னிடம் சேமிக்காமல் வெளிப்பொருளில் சேமித்தல்.
உதாரணமாக சிலைகள்,தகடு,தாயத்து போன்றவை. மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரிபோல
இந்த யந்திரங்களில் உள்ள சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பலன் தரும்.
-
யந்திரத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் எவை?
-
வடிவங்கள்.
எழுத்துக்கள்.
எண்கள்.
-
யந்திரத்தின் வடிவங்கள் அதன் முக்கியத்துவம்
-
மேல் நோக்கிய முக்கோணம் - நெருப்பு தத்துவம்.
கீழ் நோக்கிய முக்கோணம் - நீர் தத்துவம்.
சதுரம் - பூமி தத்துவம்.
வட்டம் - காற்று தத்துவம்.
நட்சத்திரம் அல்லது மேல் நோக்கிய முக்கோணம் மற்றும் கீழ் நோக்கிய முக்கோணம் இணைவு - ஆகாய தத்துவம்.

தத்துவம் என்று இங்கே குறிப்பிடுவது ஐம்பூதங்களின் குறிப்பிட்ட பிராண அதிர்வை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

தாமரை இதழ் போன்ற வடிவம் - சக்தியை சுத்தமான நேர்மறை பிராணசக்தியாக மாற்றம் செய்ய. 
அவை இரண்டு வகைப்படும்.
வெளிமுகமான தாமரை இதழ் - யந்திரத்திலுள்ள சக்தியை வெளியிட.
உள்முகமான தாமரை இதழ் - யந்திரத்திற்கு வெளியே உள்ள சக்தியை யந்திரத்திற்குள் கொண்டு வர.
பிரபலமானது ஶ்ரீசக்ர யந்திரம்.ஸ்ரீ யந்திரம், சுதர்ஸ்ன யந்திரம் 
-
யந்திரத்தை கவனித்தோம் எனில் பல கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வட்டங்கள் அதில் காண முடியும்.
-
முக்கோணம் :
-
சக்தியின் மூல வடிவம் முக்கோணம். பரம்பொருளின் வடிவம் வட்டம் . அப்பரம்பொருள் ரூபமாக மாற்றம் அடையும் பொழுது எடுத்துக்கொள்ளும் வடிவம் முக்கோணம். மூன்று தன்மையை உள் அடக்கியது முக்கோணம். 
அவை படைத்தல் - காத்தல் -அழித்தல். 
அறம் - பொருள் - இன்பம், ரஜோ - தமோ - சாத்வீக குணங்கள், இட -பிங்கள -சூஷ்ம நாடிகள் என அனைத்தும் பரம்பொருள் எடுத்துக்கொண்ட சக்தி வடிவங்களாகும். இடத்திற்கு ஏற்றதுபோல இந்த முக்குணங்கள் செயல்படும். முக்கோணங்களை மேல் நோக்கிய முக்கோணம், கீழ் நோக்கிய முக்கோணம் என இரு வகை படுத்தலாம்.

மேல் நோக்கிய முக்கோணம் ஆண் தன்மையானது. கீழ்நோக்கிய முக்கோணம் பெண் தன்மையானது.

இதை சிவ மற்றும் சக்தியின் வடிவம் என கூறலாம். இவை இரண்டும் இணைந்த வடிவம் ஒர் போல காணப்படும். இவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ சக்தி வடிவங்களாகும். இந்த இரு கோணம் இணைந்தவுடன் பல முக்கோண அமைப்புகள் அதன் உள்ளே தோன்றுவதை காணலாம்.
-
எழுத்துக்கள்.
-
எழுத்துக்கள் என்பது மந்திரங்கள் உதாரணமாக சிவ மந்திரங்கள் அல்லது முருகன் மந்திரங்கள், குறிப்பாக கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தங்களுக்கு ஏற்ப மந்திரங்கள் செப்பு தகட்டில் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணமாக " நமசிவய " என்ற சிவ மந்திரத்தை எடுத்துக்கொள்வோம்.

ந - மண் தத்துவம்.
ம - நீர் தத்துவம்.
சி - நெருப்பு தத்துவம்.
வ - காற்று தத்துவம்.
ய - ஆகாய தத்துவம்.
தத்துவம் என்பது இங்கே குறிப்பிட்ட அந்த பூதத்தின் பிராண சக்தி அதிர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எண்கள்.
-
பொதுவாக கோவிலில் செம்பு தகடு பதிக்கப்படும் யந்திரங்களில் எண்கள் இடம்பெறாது.
உலகியலில் பண வரவுக்காக ஏற்படுத்தப்படும் யந்திரங்களில் நாம் எண்களை காணலாம்.
-
நவகிரக சக்திகளையும் யந்திர வடிவில் நிலைப்படுத்த முடியும். இந்த யந்திரங்கள் பார்க்கும்பொழுது சிக்கலான அமைப்பை கொண்டதாக தெரிந்தாலும், வரைவதற்கு எளிதானது. இந்தியாவில் பல கோவில்கள் ஸ்ரீ யந்திரத்தின் மைய அமைப்பை போன்று காணப்படும். உதாரணமாக திருமலை திருப்பதியில் மூலஸ்தான கோபுரம் ஸ்ரீமேரு எனும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தை போன்று கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் பல கோவில்கள் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக அமைந்துள்ளது. இந்த கோவில்களை கருட பார்வையில் பார்த்தால் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக தெரியும்.

வரை படமாக வரைந்தால் மட்டும் யந்திரம் வேலை செய்யும் என நினைக்காதீர்கள். சக்தியூட்டுதல் எனும் செயல்மூலம் யந்திரம் ஆற்றல் பெறவேண்டும். மந்திர உச்சாடனம், பூஜா விதி மற்றும் ஆற்றல் நிலைபடுத்தும் விதி மூலம் யந்திரம் மாபெரும் பிரபஞ்ச சக்தியை பெற்று செயல்பட துவங்கும்.

யந்திரம் வரைந்து அதில் சக்தியை நிலைபடுத்துவது எல்லோராலும் முடியாது. இதை சிறந்த யந்திர சாஸ்திரம் கற்றவர்களே செய்ய முடியும். 
தற்சமயம் பலர் யந்திரம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக சில கோடுகளை வரைந்து கொடுக்கிறார்கள். இதை வாங்கி உபயோகிப்பவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபத்தில் சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்கள். இதனால் எந்த பலனும் ஏற்படுவதில்லை..
-
யந்திரத்தை தாமிரம் போன்ற உலோகத்தில் வரைவது முக்கியம். மின்சாரம் கடத்தும் பொருட்களில் தாமிரம் முதல் இடத்தை பெறுகிறது. நமது ரிஷிகள் தாமிரத்தை யந்திர சாஸ்திரத்திற்கு பயன்படுத்திய காரணம் இதற்கு அற்றல் கடத்தும் திறன் அதிகமாக இருப்பதால் தான். மேலும் தங்கம் , தாமிரத்தை கட்டிலும் ஆற்றல் கடத்துவதில் சிறந்தது என்றாலும் பொருளாதார ரீதியில் பயன்படுத்த முடியாது. யந்திரம் வரையும் பொழுது சிறிது தவறு செய்தாலும் யந்திரம் முழுவதும் வீணாகிவிடும். தேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் அமைக்கும் யந்திரம் முழுமையான செயல்களை செய்யும்.
-
கோவில்களின் கருவறையில் மூல விக்ரஹம் அமைப்பதற்க்கு முன்னால் அதன் அடியில் யந்திரதை ஸ்தாபனம் செய்வார்கள். இந்த இறை சக்தியே விக்ரகம் மூலம் பக்தர்களை வந்தடைகிறது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யந்திரம் மீண்டும் மீண்டும் சக்தியூட்டம் பெறுகிறது.
-
-
இத்தகைய எந்திரங்கள் பொதுவாக 1.மூல எந்திரம், 2.பூஜா எந்திரம், 3.தாபன எந்திரம், 4.தாரண எந்திரம், 5.ரட்சா எந்திரம், 6.பிரயோக எந்திரம், 7.பிரயோகார்த்த பூசன எந்திரம், 8.சித்திப் பிரத எந்திரம், 9.முத்தொழில் சக்கரம், 10. ஐந்தொழில் சக்கரம், 11.ஐம்பூத சக்கரம், 12.ஏரொளி சக்கரம், 13. சட்கர்ம சக்கரம், 14.அஷ்டகர்ம சக்கரம், 15.அறாதாரா சக்கரம், 16.சிவ சக்கரம், 17.சிவகோணம், 18.சக்தி சக்கரம், 19.சக்திகோணம், 20.கால சக்கரம், 21.ராசி சக்கரம், 22.சர்வதோபத்ர சக்கரம், 23.கசபுட சக்கரம், 24.முக்கோண சக்கரம், 25.சதுரசிர சக்கரம், 26.ஐங்கோண சக்கரம், 27.அறுகோண சக்கரம், 28.எண்கோண சக்கரம், 29.நவகோண சக்கரம், 30.விந்துவட்ட சக்கரம், 31.ரவி சக்கரம், 32.பிறைமதி சக்கரம், 33.நாற்பத்து முக்கோண சக்கரம், 34.சம்மேளன சக்கரம், 35.திருவம்பல சிதம்பர சக்கரம், 36.பதினாறு பத சக்கரம், 37.இருபத்தைந்து பத சக்கரம், 38.முப்பத்தாறு பத சக்கரம், 39.என்பதொரு பத சக்கரம், 40.அறுபத்தி நான்கு பத சக்கரம், முதலான பல சக்கரங்களும் அதுமட்டும் அன்றி ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே சிறப்பான சக்கரங்கள் பல உள்ளன.அவை 41.வாலை சக்கரம், 42.புவனை சக்கரம், 43.திரிபுரை சக்கரம், 44.புவனாபதி சக்கரம்,45.சாம்பவி மண்டல சக்கரம், 46.வயிரவ சக்கரம், 47.நவாக்கரி சக்கரம், 48.நவகிரக சக்கரம், 49.சுதர்சன சக்கரம், 50.விஷ்ணு சக்கரம், 51.நரசிம்ம சக்கரம், 52.சரப சாளுவ சக்கரம், 53.விநாயக சக்கரம், 54.வீரபத்திர சக்கரம், 55.சண்முக சக்கரம், 56.மிருத்யுஞ்சய சக்கரம், 57.நீலகண்ட சக்கரம், 58.சண்டி சக்கரம் 59. துர்க்கை சக்கரம் 60.இராமர் சக்கரம் 61.சீதா சக்கரம் 62.லக்ஷ்மி சக்கரம், 63.அனுமார் சக்கரம், 64.ஸ்ரீ சக்கரம்  முதலிய பல சக்கரங்களும் உள்ளன 
-
கோவிலில் கடவுளின் சிலைக்கு அடியில் செப்புத் தகடு வைப்பது ஏன்?
-
முன் காலத்தில் இருந்த யோகிகள், மகான்கள், ஆன்மிகவாதிகள் தாங்கள் உணர்ந்த ஆன்மீக சக்தி அதிர்வை பொது மக்களுக்கும் பயன்படும் விதம் ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தினர். அதுவே அதிக அளவு பிராண சக்தியை தன்னகத்தே கொண்டுள்ள கோவில்கள்.

பழமையான பண்டைய கோவில்கள் என்பது எப்பொழுதும் ஆன்மீக சக்தி மையங்களாகவே இருந்தது. அந்த நேரத்தில் வழிபாடுகள் என்பது பெரும்பான்மையாக இல்லாமல் இருந்தது பின்னர் பக்தி மார்க்கம் மிகுந்த அளவில் மக்களிடம் பிரபலம் அடைந்தபோது வழிபாடுகள் பெருமளவில் கோவிலில் நடைபெற ஆரம்பித்தது.

இன்றளவும் எழுதாத விதியாக நாம் கோவிலுக்கு சென்றால் சிறிது நேரம் அமர்ந்து அந்த கோவிலில் உள்ள சக்தி அதிர்வுகளை நாம் உள்வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று கூறியது நடைமுறையில் உள்ளது.

தனி ஒரு மனிதன் யோகா, தியானம் போன்று தன் கைகளில் முத்திரைகள் வைத்து அவனுடைய பிராண சக்தியை அதிகரிக்க முடியும்.

பொதுமக்களுக்கும் இது போன்ற பிராணசக்தியை அவர்களுக்கும் யோகா, தியானம் போன்ற வகைகள் தெரியாத போதும் பலன் அடையும் வகையில் பண்டைய யோகிகள், முனிவர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்படுத்திய ஒரு அமைப்பே கோவிலாகும்.

உலகத்தில் பல இடங்களில் ஆன்மீகம் பரவலாக நடந்தாலும் நம் நாட்டில் காலம்காலமாக தொன்றுதொட்டு பல நபர்கள் பல தலைமுறை தலைமுறையாக ஒரே நோக்கமாக ஆன்மீகத்தில் இருந்துள்ளனர். இது போல உலகத்தில் வேறு எங்கும் நடைபெறவில்லை. அதன் காரணமாக இங்கே பலருக்கு உயர்வான பிராணசக்தியை நிலைநிறுத்தி வைக்கும் கோவில் கட்டும் தொழில்நுட்பம் தெரிந்துள்ளது.
முறையாக பிராணசக்தியை நிலைநிறுத்திய கோவில்களில் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் இருப்பது அதிசயத்தக்க ஒன்றாகும்.
-
இது நிகழ்வதற்கு உறுதுனையாக இருப்பது யந்திர சாஸ்திரம் மூலமாக சக்தியை நிலை நிறுத்தி வைக்கும் தொழில்நுட்பம் தான்.
நவீன அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் பெரும்பான்மையாக 100 லிருந்து 150 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மந்திரம் என்பது குறிப்பிட்ட பிராணசக்தி அதிர்வுள்ள எழுத்துக்கள்.
தந்திரம்  தொழில்நுட்பம்.
-
செப்புத் தகடு வைப்பது ஏன் ?

உதாரணமாக யந்திரத்தை ஒரு துணியில் வரைந்தோம் என்றால் வெளியே எதிர்மறை சக்தி அதிர்வு இருக்குமானால் துணியும் எதிர்மறை சக்தியால் பாதிப்படையும். 
ஆனால் செம்பாலான ஒரு யந்திரம் இதைப் போன்ற எதிர்மறை பிராணசக்தி அதிர்வால் பாதிப்படையாது.

செம்பு என்பது ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை குறிக்கும் உலோகம்.
பஞ்சலோகம் என்பது குறிப்பிடப்பட்ட ஐந்து உலோகங்களால் உருவானது.
ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு பஞ்ச பூதத்தை குறிக்கும்.

மேலும்,

நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி எதையும் செம்பு உலோகம் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டது.

செம்பு மூலம் நேர்மறை சக்தியை தக்க வைத்தல் சிறந்த உதாரணம்.
நமக்கு நன்கு தெரிந்தது என்னவென்றால் நமது பல வீடுகளில் பெரியவர்கள் காசி, ராமேஸ்வரம் சென்று வந்த பின் வீட்டு பூஜை அறையில் இருக்கும் செம்பு தண்ணீர்.

எவ்வளவு காலமானாலும் அவை கெட்டுப் போகாமல் இருக்கும். தண்ணீரில் நுண்ணிய கிருமிகள் வராமலும் வேறு எந்த வழியிலும் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.

செம்பு மூலம் எதிர்மறை சக்தியை தக்க வைத்தல் உதாரணம்.
பூத சுத்தி [ பூஞ்ச பூதங்களை சுத்தி செய்தல், யோக கிரியை.] நான் செய்யும் பொழுது ஐந்து சிறிய அளவிலான செம்பு பாத்திரங்களில் உடம்பில் உள்ள எதிர்மறை சக்தியை அந்த பாத்திரங்களில் யோக கிரியைகள் வழியாக மாற்றி பின்னர் சில மந்திரங்கள் மூலமாக எதிர்மறையான சக்தியை நேர்மறை சக்தியாக மாற்றவதுண்டு.

No comments:

Post a Comment