Tuesday, July 14, 2020

கந்தர் சஷ்டி கவசம் உருவான விதம்

கந்த சஷ்டி கவசம் எப்படி உருவாயிற்று?

அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்.

திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாக முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருக பெருமான் காட்சி தந்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடலென்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீருமென சொல்றார்

காரணம் கோவிலில் அந்நேரம் பாலதேவராயர் மட்டுமின்றி இன்னும் ஏக்பட்ட நோயாளிகள் இருந்தனர்

வயிற்றில் வலி, மார்வலி.,, என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்

தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, நெஞ்சு கூடும் ஒரு எலும்புருக்கி நோய், மூலம், தொடை புண் , கணுக்கால் வலி.. என பல

இது போல பேய் , பில்லி சூன்யம் என பாதிக்கபட்டு வந்திருக்கும் கூட்டம் ஒன்று, சித்தபிரம்மை பிடித்த கூட்டம் ஒன்று

வறுமை கூடிய கூட்டமொன்று, இன்னும் நோய் பிணி வறுமையில் வாடி நிற்கும் பெரும் கூட்டமொன்று அங்கிருந்த மக்களின் குரலாக முருகனிடம் எல்லா பிணிகளுக்கும், நோய்க்கும் போக்குமாறு  முருகன் சொன்னபடி பொது நலத்தோடு பாடுகிறார் அம்மாமனிதன். தேவராயருக்கு வந்தது வயிற்றுவலி ஆனால் அவர் மற்ற எல்லோர் பிணிதீரவும் சேர்த்தே பாடினார்

அப்பாடலே நாம் இன்று துதிக்கும் கந்த சஷ்டி கவசம். பிணிகள் பலவற்றில் இருந்து நம்மை காக்கும் கவசம் "கந்த சஷ்டி கவசம்" 

சஷ்டி என்றால் ஆறு கவசம் என்றால் பாதுகாப்பு

நோய் பில்லி சூன்யம் வறுமை வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அமைந்தது

அழுகையும் , கதறலும் மிக்க பக்தர்கள் கூட்டத்தின் நடுநின்று அனைவருக்காகவும் உயர்ந்த நோக்கில்  பாட துவங்குகிறார் தேவராயர்..

அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது,  பக்தி திளைப்பில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார்.  கந்த சஷ்டி கவசம் முழுமையானது

அக்காலத்தில் நோய்கள் பரவும் நேரம் இல்லம் தோறும், ஆலயம் தோறும் மக்கள் பாடுவார்களாம்.

நல்லவர்கள் பெருகி நின்ற காலம் அது.

ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது

"பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க..

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனை பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது

இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது

ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்

உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல்.

சில வரிகள் அர்த்தமின்றி வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக பாடலின் சில இடங்களில் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது

அக்கால புலவர்கள் ஞானமிக்க சித்தர்களாவும் விளங்கினர். நல்ல அதிர்வு அதாவது தெய்வீக & நேர்மறை சிந்தனை தரும் சமஸ்கிருத சொற்களுக்கு நிகரான‌  தமிழ் வார்த்தைகளை வைத்திருக்கலாம்.

உணவே மருந்து என்றும் சொன்னார்கள். கொரோனா வுக்கு முன்பு வரை நம்மில் எத்தனை பேர் அதை மதித்தோம்??

கோயில் சிலைகளை கடத்தி விற்கும் கலிகாலத்தில் நின்று புலமையும் பக்தியும் செழித்தோங்கிய காலத்து படைப்பை ஆராய்வது..!! முதல்ல நமக்கு அதுக்கான தகுதியும் மொழி அறிவும் இருக்கா ??

தேவராயரும் அங்ஙனமே நல்லதிர்வு தரும் வார்த்தைகளை சஷ்டி யில் பயன்படுத்தியிருக்கிறார்

உதாரணமா, சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரிப்பு மூலம் நம் உடல் பெறமுடியும்

ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்

ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே.

குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான்

முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்

முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment