திருக்கழுக்குன்றம்:-பட்சிதரிசனம் -தெரியாத தகவல்கள்.
திருக்கழுக்குன்றம் பட்சி தரிசனம் பற்றி கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. மூன்று குடும்பத்தினர் வாரிசுகளுக்கு பட்சிக்கு உணவு ஊட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது.பட்சிக்கு உணவு கொடுக்கும் வீடியோவில் வருபவர் பெயர் திரு.ஜம்பு தேசிகர். அடுத்த குடும்பத்தினர் -சுந்தரமூர்த்தி தேசிகர் அவரின் தந்தை சுந்தர மூர்த்தி தேசிகர் -அவருக்கு தந்தை சண்முக தேசிகர்.அடுத்த குடும்பத்தினர்- ராமலிங்க தேசிகர். அவரின் தந்தை சிவராம தேசிகர். அவருக்கு தந்தை வேதாசலம் தேசிகர். பெரும்பாலான படங்களில் திரு.ராமலிங்க தேசிகர் மற்றும் சுந்தர மூர்த்தி தேசிகர் படமே இடம்பெற்றிருக்கும். பட்சிக்கு உணவு கொடுப்பவர் தினமும் எழுந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி கழுகுகளுக்கு உணவு சமைப்பார்கள். சர்க்கரைப்பொங்கலுக்கு முக்காப்படி அரிசி.முக்காவீசம் வெல்லம்.கால்படி நெய்.பத்துபலம் முந்திரி சேர்த்து சமைப்பார்கள். தினமும் இதே அளவுதான். விடுமுறை நாட்களிலும்.கூட்டம் அதிகம் வரும் நாட்களிலும் இந்த அளவு மாறது. காலை 11 மணி அளவில் சமைத்த சர்க்கரைப்பொங்கலை பித்தளை தவலையில் எடுத்துகொண்டு மலைக்கு செல்வார்கள். அங்கு வேதகிரீஸ்வரரை வலம் வந்து பின் நேரே பட்சி பாறைக்கு சென்று அமர்வார்கள்.சர்க்கரை பொங்கலை வேதகிரீஸ்வரருக்கு படைப்பதில்லை. பட்சி பாறையானது ஒருவர் மட்டுமே அமர முடியும். பின்னர் தாம்பளத்தில் கிண்ணம் மூலம் ஒலி எழுப்புவர். பட்சி வட்டமிட ஆரம்பிக்கும். கூடியிருக்கும் மக்கள் பின்டிராப் சைலன்டில் இருப்பார்கள். வட்டமிட்ட கழுகு பின்னர் பாறையில் வந்து அமர்ந்து நடந்து வரும். தேசிகர் சர்க்கரை பொங்கலை ஒரு கிண்ணத்திலும் நெய் ஒரு கிண்ணத்திலும் வைத்திருப்பார். கையிலும் பொங்கலை வைத்திருப்பார். பொங்கலை கழுகு சாப்பிட்டுவிட்டு அலகால் நெய் கிண்ணத்தில் அலசியபின் பறந்து சென்றுவிடும். நிறைய நேரங்களில் இரண்டு கழுகுகளும் வரும் எப்போதாவது ஒரு கழுகு மட்டும் வரும். கழுகு சாப்பிட்ட மீதி பொங்கலை தவலையில் கலந்து பக்தர்களுக்கு வினியோகிப்பார்கள். சுமார் 60 வருடங்களுக்கு முன் கழுகு உணவு உண்டபின்னர் பாங்கா என்கின்ற இசைக்கருவி மூலம் ஒலி எழுப்பப்படும். அதன்பின்னரே ஊரில் உள்ளவர்கள் உணவு உண்பர்.1991 ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு முன்னர் கழுகு வந்திருந்தது. அதன்பின்னர் வருவதில்லை. ஐந்து ஆண்டுகள் கழுகு வரும் என தேசிகர் மலை மீது சென்று காத்திருந்தார். இருப்பினும் கழுகு வரவேயில்லை. சென்ற கழுகுகள் மீண்டும் வர இறைவனை வேண்டுவோம்...
நமதுஊர்.. நமதுபெருமை..
வாழ்கவளமுடன்
No comments:
Post a Comment