கபிலர் சித்தர் தியானச்செய்யுள்
பரமேஸ்வரன் மேல் பால் பொழிந்த காமதேனு ஸ்வாமியே இடைக்காட்டு பெருமானின்
இன்னலைத் தீர்த்த மின்னல் ஒளியே லிங்க பூஜையில் லயித்த சங்ககால சித்தரே
எம் சங்கடங்கள் தீர
உங்கள் சந்தனப்பாதம் பணிந்தோம் காப்பீர் கபிலர் ஸ்வாமியே
சித்தர் வரலாறு
லிங்க வடிவில் இருந்த இறையனார் சிவபெருமானை இடது கையில் வைத்து பூஜித்ததால், சாபம் பெற்ற கபிலர் மாடயம்பதியில் (மாடம்பாக்கம்) பசுமாடாக அவதரித்தார்.
உடலில் உள்ள பால் முழுவதையும் தினசரி புற்றினுள் வீற்றிருக்கும் சிவபெருமான் மீது பசுவாக இருக்கும் கபிலர் பெருமான் பொழிந்து வரலானார்
எல்லா பசுக்களும் பால் கறக்கும் பொழுது ஒரு பசு மாடு மற்றும் கறவை இல்லாது இருப்பது கண்ட இடையன், அப்பசு எங்கு செல்கின்றது என்று கவனிக்க துவங்கினான்
இந்த பசு மாடு புற்றின் மேல் பால் பொழிவதைக் கண்ட இடையன் பிரம்பால் பசுமாட்டை ஓங்கி அடிக்கலானான், வலி பொறுக்காத பசு மாடு ஓடிவந்து புற்றிற்கு அருகில் மோதி, மோதி அழுதது
உள்ளிருந்த சிவபெருமான் பதறி வெளிவந்து பசுமாட்டை கட்டியணைத்து,கபிலர் மீண்டும் சாப விமோசனம் அளித்தார்
அத்தகைய மேன்மைமிகு மாடயம்பதி திருத்தலத்தில் பின்பு "தேனுபுரீஸ்வரர்' சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஆன்மீகத்தலத்தில்தான் நம் சித்தர் பீடமும்' உலகின் ஆட்சிபீடமாக அரங்கேறி உள்ளது
இவரை வணங்குவதால் சனிதோறும் முழுமையாகக் கட்டுப்படும். சனி தோஷத்திற்கு பயப்படாத மனிதர்களே இல்லை. சனீஸ்வரன் கண்டுதான் பலரும் நடுநடுங்கிப் போகின்றனர்.
ஜாதகத்திலுள்ள சனி தோஷத்தை நீக்கி நன்மை கிடைக்க கபிலர் சித்தரை வணங்க வேண்டும்
அவரை வணங்குவதால் ஜாதகத்திலுள்ள தோஷம் நீங்கி நன்மை கிடைக்கும்.ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டகச்சனியால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். படிப்பிலே உள்ள மந்த நிலை மாறும். எதிலும் வெற்றி கிடைக்கும். உடல் நோய்கள் குணமாகும் வேலைக்காரர்களால் ஏற்படும் பிரச்சினை அகலும். பிரம்ம ஹஸ்தி தோஷம் நீங்கும்
புத்திர பாக்கியம் கிடைக்கும்
ஒரு சனிக்கிழமை அன்று தாம்பரம் மாடம்பாக்கம் "தேனுபுரீஸ்வரர் ஆலயத்திற்கு" முக அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு' கருநீல வஸ்திரம், சலவிதமான புஷ்பங்களுடன் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும் பதினாறு போற்றிகள்
ஸ்ரீ விஷ்ணு பிரியரே போற்றி
ஸ்ரீ சுதர்சன சக்ரத்தை உடையவரே போற்றி
ஸ்ரீ சங்கு பூஜிப்பவரே போற்றி
அனாதைகளை காப்பவரே போற்றி
ஒளிபொருந்தியவரே போற்றி
புண்ணியத்தை அளிப்பவரே போற்றி
த்ரிகால ஞானியே போற்றி!
ஓம் ராம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி கௌஸ்துப மணிமாலை அணிபவரே போற்றி
பீதாம்பரம் தரிப்பவரே போற்றி லட்சுமிப்ரியரே போற்றி
அலங்காரப்பிரியர் போற்றி
ஸ்ரீ சுதர்சன சக்ரத்தை பூஜிப்பவரே போற்றி!
எதிரிகளை அழிப்பவரே போற்றி தீர்க்க சித்தரே போற்றி
ஸ்ரீ விஷ்ணு அம்சம் உள்ள ஸ்ரீ கபிலர் சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி
இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு பின்வரும் மூலமந்திரத்தை "ஓம் ராம் ஸ்ரீ கபிலர் சித்தர் ஸ்வாமியே போற்றி" என்று 108 முறை ஜெபிக்க வேண்டும் பின்பு, நிவேதனமாக வாழைப்பழம், துளசி தீர்த்தம், வெண்பொங்கல் வைக்க வேண்டும். (துளசியை சிறிதளவு நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும் வெண்பொங்கல் மிளகு,சீரகத்துடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும்) பின்பு, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்டி, நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்கின்றோம்
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube, Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.
No comments:
Post a Comment