இந்த உண்மையை தெரிந்து கொண்டால் எதை நினைத்தும் சஞ்சலப்படமாட்டீர்கள்!
நாம் இறந்த பின்னர் என்ன நடக்கும், நாம் ஏன் எதையாவது நினைத்து கவலைப்பட வேண்டும், மன சஞ்சலப்பட வேண்டும்? நம் கவலைகளிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
நம் வாழ்வில் ஏற்றத்தாழ்வு, அவமானம் புகழ், வெற்றி தோல்வி என பல நல்லது கெட்ட விஷயங்கள் வந்து இருக்கும். இவற்றில் பல விஷயங்கள் கடந்து போயிருக்கும். அதில் சில நம் மனதைக் காயப்படுத்தி இருக்கும். அதிலும் சில நம் வாழ்வில் தொடர்ச்சியாக சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கும்.
மனதை சஞ்சலப்படுத்தக் கூடிய விஷயங்களிலிருந்து விடுபடவும். வாழ்வில் நம்பிக்கையுடன் முன்னேற அல்லது நம் மனதை பலப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை நாம் நினைத்துக் கொள்வது நல்லது.
நம் வறுமை குறித்தும், நம் மரணத்தைக் குறித்தும் மரண நேரத்தில் சஞ்சலப்பட தேவையில்லை. ஏனெனில் இந்த உலகம் யார் இறந்து போனாலும் அந்த உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்போவதில்லை. உற்றார் உறவினர் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார். அவர்கள் உன் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டி, புதிய ஆடையை அணிவிப்பார்.
உன் உடலை உன் வீட்டில் இருந்து வெளியேற்றுவர். சுடுகாடு எனும் புது இடத்திற்கு எடுத்துச் செல்வர். அதோடு உன்னுடன் வருபவர்கள் உன் உடலை புதைக்க அல்லது எரிக்கக் குறியாக இருப்பார்கள்.
நீ பயன்படுத்திய ஆடை, பொருட்கள், செருப்பு உள்ளிட்டவற்றை வீட்டை விட்டு வெளியில் வீசுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
அதுமட்டுமல்லாமல் உன் பிரிவால் இந்த உலகம் கவலைப்படப்போவதில்லை. உன் மறைவால் உலக பொருளாதாரம் தடைப்படப்போவதில்லை. நீ ஏதேனும் உத்தியோகத்தில் இருந்தால், அதை வேறு ஒருவர் நிரப்புவார். அதுவும் மிக மகிழ்ச்சியாக. உன் சொத்து உன் வாரிசுக்குப் போய்விடும். நீ எவ்வளவு சொத்து சுகத்தை சம்பாதித்து வைத்தாலும் அது உன்னுடன் வரப்போவதில்லை.
நீ மறைந்ததும் முதலில் மறைப்போவது உன் பெயர் தான். நீ வாங்கிய பட்டம், புகழ், பெயர் எல்லாம் மறைந்து விடும்.
உன் மனைவி மக்கள் சில நாட்கள் கவலைப் படுவர் அடுத்து குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உன் நண்பர்களும் சில நாட்களின் உன்னை மறந்து விடுவார்கள்.
இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் :
இந்த உலகில் இறைவன் கொடுத்த உடம்பை வாங்கி வந்த நாம் இருக்கும் வரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவருக்கு தான தர்மங்கள் செய்யுங்கள். தினமும் கடவுளை தியானிப்பதும்,கோயிலுக்குச் செல்லுதல், வேதங்கள் பாராயணம் செய்தல், தியானம் செய்வதென இருக்க வேண்டும். ஆத்மா வேறு உடல் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இறந்த பின்னர் கடவுளை அடைவதற்கான வழியை தேட வேண்டும்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube, Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.
No comments:
Post a Comment