Wednesday, July 15, 2020

சுந்தரகாண்ட பாராயணம் என்றால் என்ன?

*சுந்தர காண்டம் படி என்பதற்கு அர்த்தம் தெரியுமா?** 🙏🌹🌈
 
சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று  சொல்லுவார்கள். அப்படி என்றால் எல்லோரும் சுந்தர காண்டம் படித்தால் போதுமே. எல்லா துன்பங்களும் விலகி விடுமே. வேறு ஒன்றும் செய்ய வேண்டாமே !

அப்படி அல்ல.

சுந்தர காண்டம்  படிப்பது,  நாம் முயற்சி செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும். (Motivation ).

சும்மா உக்காந்து கொண்டு "ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று உறைந்து போய் விடாமல், முயன்று துன்பங்களைப் போக்க சுந்தர காண்டத்தில் அனுமன் பட்ட கஷ்டங்களை பார் படி அதை பார்க்கும் படிக்கும் போது நமது துன்பம் ஒன்றுமில்லை. என்று தெரியவரும் எப்படியெனில்

எதிர் காலம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.

சீதையைத் தேடிப்  போகிறான். முன் பின் தெரியாத ஊர். 

இராவணன் பெரிய அரக்கன். மாயாவி. எங்கே சீதையை மறைத்து வைத்திருப்பான் என்று தெரியாது. 

அந்த ஊரில் யாரிடமாவாது போய் கேட்க முடியுமா ? தானே கண்டு பிடிக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நடுவில் பெரிய கடல். பெரிய தடை.

தனி ஆளாகப் போகிறான். ஒரு துணையும் கிடையாது. வழி தெரியாது. ஊர் தெரியாது. பயங்கரமான எதிரி.

கிட்டத்தட்ட நம் நிலை மாதிரியே இருக்கிறது  அல்லவா.

கவலையில், துன்பத்தில் இருக்கும்எல்லோருக்கும் நிலை இதுதான்.

என்ன செய்ய வேண்டும் தெரியாது. எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஆயிரம் தடைகள் வேறு.

அனுமன் என்ன செய்தான் என்று ஒரு உதாரணம் தருகிறது  இராமாயணம். அதில் இருந்து  நம்பிக்கையும், உற்சாகமும் பெற.

அனுமன் பலசாலி, அறிவாளி...நாம் அப்படி இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

அவன் சமாளிக்க வேண்டிய சவால்களும்  அப்படித்தானே.அனுமனுக்கு கடலைக் கடக்க வேண்டும். உங்களால அப்படியா? அது முடியுமா ?

அவரவர் திறமை, வலிமையை பொறுத்து அவர்களின் சவால்களும் அமைகிறது.

உங்களாலும் முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள். செயல் படத் தொடங்குங்கள்.

அப்படி செய், இப்படிச் செய் என்று சொன்னால் "வந்துட்டானுக, அறிவுரை சொல்ல " என்று அலுத்துக்  கொள்வோம்.

அனுமன் என்ற  ஒருவன் இப்படிச் செய்தான் என்று கூறுவதன்  மூலம்,நீங்களும்  முயன்றால் வெற்றி பெறலாம் என்று சொல்லாமல் சொல்கிறது சுந்தரகாண்டம் 

அனுமனின் வழியில் மலை ஒன்று குறிக்கிடுகிறது. அவனைத் தடுத்து, இங்கு இளைப்பாறி விட்டு போ  என்கிறது.

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் முன்னேறுகிறான் வாலில் தீ வைக்கப்படுகிறது நம்பிக்கையுடன் ஶ்ரீராமனை துதிக்கிறான் அது பனிபோல் குளிர்ந்து அவனை தீண்டவில்லை அது போல் ஆழமான நம்பிக்கையை உன் செயலில் உனது இஷ்டதெய்வத்தின் மீது வை அவன் உனது நம்பிக்கையை உண்மையாக்கி உனது கஷ்டங்களை நிர்மூலமாக்குவான்.

சுருங்க சொல்லி (அதாவது கண்டேன் சீதையை என்பது போல) அதிகமாக பணி செய்தது போல் உனது பேச்சை குறைத்து கடமையை செய் இறைவன் துணை வருவான் என்றும்

அவ்வாறு நம்பிக்கையுடன் பயணித்து சீதையை கண்டது போல் நீயும் நம்பிக்கையுடன் உனது கடமையை செய்தால் முடிவில் ஜெயம் கிட்டும் என நமக்கு உணர்த்தவே சுந்தரகாண்டம் படி என்றுகூறுகிறார்கள் 

அதில் ஹனுமான் பெற்ற கஷ்டத்தில் இலட்சத்தில் ஒரு பங்கு கூட உனது கஷ்டம் இல்லை 

ஒரு வானரமே நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியுமானால் உன்னால் ஏன் முடியாது என்ற உண்மையை உனக்கு உணர்த்தி உன்னையும் அதுபோல செயல்படு வெற்றிதான் என உணர்த்த சுந்தரகாண்டம் படி என்கிறார்கள் 

புரிந்துகொள்ளுங்கள் 

சுந்தரகாண்டம் படிப்பது மட்டும் பலன்தராது 

உங்களது காரியத்தை வேண்டுதலை நோக்கி உங்களது முயற்சி அதனை முடித்துதரும் அந்த ஆண்டவனின் துணை என அவன் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கை இவை அனைத்தும் சேர்ந்து கண்டிப்பாக உங்களுக்கு வெற்றியை அனுமனுக்கு தந்தது போல் தரும்

முயற்சி திருவினையாக்கும் என்பதே சுந்தரகாண்டம் நமக்கு உணர்த்தும் பாடம்.🙏🌹🌈
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment