Friday, July 24, 2020

அடுத்த பிறவியின் ரகசியம்

நீங்கள் செய்யும் தவறுக்கு அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் தெரியுமா? - அழிவில்லா கர்மா

நாம் தற்போது செய்யும் பாவங்களை யாரும் அறிந்திருக்கவில்லை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். நாம் செய்யும் நல்லது கெட்டவற்றை மேலே உள்ளவன் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான். நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே கர்மாவானது செயல்படுகிறது. அவ்வாறு நாம் பாவம் செய்தால் அந்த கர்மாவானது எவ்வாறு செயல்படுகிறது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

கர்மாவின் சட்டங்கள்

1. உங்களின் தற்போதைய வாழ்க்கையில் செய்யும் நல்லவை மற்றும் பாவங்கள் உங்களின் அடுத்த பிறவியைத் தீர்மானிக்கிறது சில நேரங்களில் கர்மாவின் சட்டங்கள் நம்மை மிகவும் கடுமையாக தாக்குவதாய் இருக்கும், அவை அதன் அறிவுக் கூர்மைக்கு உட்பட்டு இருக்கின்றன. இந்துப் புராணங்களில் கர்மா எவ்வாறு செயல்படுகிறது மற்றும் பாதிக்கிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளன.
2. கர்மா அடுத்த பிறவியைப் பாதிக்கிறது நம்முடைய தற்போதைய வாழ்க்கையில் கர்மாவின் பலன்கள் செயல்பட வேண்டும் என்று நாம் எவ்வளவு விரும்பினாலும், அது அவ்வாறு செயல்படாது. நம்முடைய இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் நல்லது மற்றும் கெட்டதைப் பொறுத்து இந்த வாழ்நாளிலேயே அதற்கான நேர்மறையான பலன்களையும் எதிர்மறையான முடிவுகளையும் அனுபவித்துவிட வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் அது எப்போதும் நடக்காது. இன்று நாம் செய்யும் எல்லாமே அடுத்த பிறவிக்கான சேமிப்பு கணக்கு தான். அந்த சேமிப்புக்கு வட்டியும் முதலுமாய் அடுத்த பிறவியில் அனுபவிப்போம். அதுவே கர்மா.

3. பண்டைய நூல்கள் இந்து மதத்தின் பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நமது வாழ்வானது தற்போதைய வாழ்க்கையில் நமது கர்மாவினால் முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்பது மட்டுமல்லாமல், நமது கடந்த கால வாழ்க்கையில் இருந்தும் என்னென்ன செய்திருந்தோம் என்பதைக் கண்காணிக்கப்பதாகவும் அமைகிறது.
4. பிறக்கும் முறை பிறக்கும் முறை என்றால் மனிதனாகிய நாம் பிறப்பதற்குத் தயாராவதற்கு முன்பு நம்முடைய முந்தைய பிறப்பின் வாழ்க்கையில் நாம் செய்த நல்லது மற்றும் கெட்டவற்றைக் கணக்கிட்டு அதன் வினைகளாக இந்த கர்மாவானது செயல்படுகிறது. அந்த கர்மா தான் அடுத்த பிறவியில் ஒருவர் எப்படி பிறக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.

5. நல்ல கர்மா மற்றும் கெட்ட கர்மா நமது தற்போதைய வாழ்க்கை கடந்த கால கர்மாவின் நிழல்களின் கீழ் தொடர்ந்து இயங்குகிறது. இந்த வாழ்க்கையில் நாம் தொடர்ந்து கெட்டதைச் செய்தும், தீங்குகள் பெரிதாக நிகழாமல் நாம் இன்னும் மகிழ்ச்சியான கட்டங்களை அனுபவிக்கிறோம் என்றால் அது நம் முந்தைய வாழ்க்கையில் செய்த நல்ல செயல்களின் பயனாக நமக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல கர்மாவின் விளைவாக இருக்கலாம். தற்போது செய்யும் தீய வினைகளுக்கு அடுத்தப் பிறவியில் கொடிய வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும்.

6. முனிவர் வியாசர் பண்டைய முனிவர் மகரிஷி வேத வியாசர் மனிதர்களுக்கு உயரிய அறிவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேதங்களையும் புராணங்களையும் இயற்றி அருளினார். அவருடைய போதனைகள் நமக்கு எப்போதும் அறிவொளி அளித்த வண்ணம் உள்ளன. இன்று நாம் பிறப்பு மற்றும் அவதாரங்களைப் பற்றிய அறிவைப் பெற்று ஆராய்வதற்கு அவரே காரணம்.

உயிரினங்கள் பிறக்கும் விதி கர்மா

7. 84000 மறுபிறப்புகள் ஒரு ஆத்மா மனிதனாகப் பிறப்பதற்கு 84000 பிறப்புகளைச் சிறிய செல்களின் மூலமாக பூச்சிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வழியாக பிறக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக அறியப்படுகிறது.
8. இந்து மதத்தில் பிறப்பின் வகைகள் ஒரு ஆன்மா மனிதனாக பிறந்த பிறகு அவர்களின் நல்ல கர்மா மற்றும் தீய பாவங்களின் அடிப்படையில் தன்னுடைய அடுத்த பிறப்பானது தீர்மானிக்கப்படுகிறது என்று முனிவர் வியாசர் விளக்குகிறார். இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் தான் நீங்கள் ஒரு பூச்சியாகவோ, விலங்காகவோ அல்லது மனிதனாகவோ மறுபிறவி எடுக்கும் முறை தீர்மானிக்கப்படுகிறது.

9. கருட புராணம் கருட புராணத்தில் ஒரு ஆத்மா மனிதனாகப் பிறக்க அனுமதிக்கப்பட்டவுடன் கருப்பையில் தங்கி இருக்கும் ஒன்பது மாதங்களும் இந்த கர்மாவின் அருளை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து கடவுளுக்கு சேவை செய்வதாக அந்த ஆன்மா உறுதியளிக்கிறது. ஆனால் பிறந்த பிறகு மனிதன் மறந்து பாவங்களைச் செய்கிறான்.

10. உலகில் குற்றங்கள் கொள்ளை, மோசடி, துரோகம், கொலை மற்றும் ஒருவரை காயப்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றங்களைப் பற்றி முனிவர் வியாசர் விளக்குகிறார். ஆன்மாவின் தலையெழுத்து இந்த பாவங்களைப் பொறுத்து அமைகிறது. எந்த பாவம் எந்த பிறப்பில் பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

11. பாவம் 1 ஒரு பெண்ணுடன் வலுக்கட்டாயமாக உறவை மேற்கொள்ளும் எவரும் நரகத்தில் பயங்கரமான தண்டனைகளின் விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த பிறவியில் அவர்கள் ஓநாயாகவும், பின்னர் அதற்கு அடுத்த பிறவியில் குள்ளநரியாகவும், பின்னர் அதற்கு அடுத்த பிறவியில் கழுகாகவும், அதற்கு அடுத்த பிறவியில் பாம்பாகவும் இறுதியாக ஒரு ஹெரான் கொக்காகவும் பிறந்து துன்பங்களை அனுபவிப்பர்.

புராணங்களில் மன்னிக்க முடியாத பாவங்கள்

பாவம் 2
குடும்பத்தில் உள்ள பெரியவர்களையோ அல்லது வெளி உலகில் உள்ள பெரியவர்களையோ அவமதிப்பதும் அவர்களை சங்கடப்படுத்துவதும் மற்றும் பொது வெளியில் அவர்களை தாழ்த்துவதுமாக செய்பவர்கள் அடுத்த பிறவியில் காகமாகப் பிறப்பார்கள். குறைந்தது 10 ஆண்டுகளாவது இந்த பிறப்பில் அவர்கள் வாழ வேண்டியிருக்கும்.

பாவம் 3
தங்கத்தைத் திருடுவது புராணங்களில் மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. ஒரு நபர் அந்த பாவத்தைச் செய்தால் அதன் கடுமையான விளைவை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்பவர் தனது அடுத்த பிறவியில் ஒரு பூச்சியாக பிறப்பார் என்று முனிவர் வியாசர் கூறுகிறார். மேலும் வெள்ளியைத் திருடும் ஒருவர் அடுத்த பிறவியில் புறாவாகப் பிறப்பார்.

பாவம் 4
ஒருவர் திருடுவதோ மற்றவரின் துணிகளைப் பறிப்பதோ அல்லது ஒருவரைத் சீர்குலைப்பதோ செய்பவராக இருந்தால் அந்த பாவங்கள் கடுமையான தண்டனைக்களுக்குக் காரணமாகின்றன. அவர்கள் அடுத்த பிறவியில் கிளியாகப் பிறப்பார்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் கூண்டு வழியாக வாழும் கூண்டு கிளியாகவே வாழ வேண்டியிருக்கும்.

பாவம் 5
ஒருவரின் வாழ்வைப் பறிப்பது மற்றும் ஒருவரைக் கொலை செய்வது மிக கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த நபர் அவரின் அடுத்த பிறவியில் கழுதையாகப் பிறப்பார் என்று முனிவர் வியாசர் கூறுகிறார். அந்த விலங்கு தன் வாழ்நாள் முழுவதும் அதன் உரிமையாளரின் சுமைகளைத் தாங்கி, இரவும் பகலும் அதிக எடையைச் சுமந்து வாழ வேண்டியிருக்கும்.🙏

No comments:

Post a Comment