Saturday, July 11, 2020

குதம்பை சித்தரின் வழிபாடு

ஸ்ரீ குதம்பைச் சித்தர் தியானச்செய்யுள்

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்

நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே

இந்தச் சித்தரை வணங்குவதால் கேது மகாதசை என்று நம் ஜாதகத்தில் வருகின்ற ஒரு காலகட்டத்தில் ஏழு வருடங்கள் இவரின் தசை நடக்கும்பொழுது, 80 சதம் எந்த மனிதனும் துன்பப்படுகின்ற அமைப்பை உடையவனாக இருப்பான் அப்பொழுது இவரை வணங்குவதால் கேதுவால் வருகின்ற தீமைகளை நாம் கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக வாழலாம்

சித்தர் வரலாறு

யாதவ குலத்தில் அவதரித்த இந்தப்பெருமான் ஆண்குழந்தையாகப் பிறப்பினும், பெண் குழந்தை போன்று பேரழகுடன் விளங்கியதால், நம் சித்தரின் தாய் இவருக்கு காதுகளில் குதம்பை என்ற காதணியை இட்டு நித்தமும் அது சித்தரின் காதுகளில் அசைந்தாடும் அழகைக் கண்டு அசந்து போவார்களாம்

சித்தருக்கு பதினாறு வயது ஆகும் தருவாயில், திடீரென்று ஒரு மகான் குதம்பை பெருமான் முன் வந்து நின்றார்

வந்தவரை வணங்கி வாய் பொத்தி நின்றார். குதம்பைச்சித்தர்,

அருபெரும் உபதேசங்களை மகானிடமிருந்து பெற்ற நம் சித்தர்"என்ன கைமாறு செய்வேன்' என்று உருகி இருக்கின்றார். அதற்கு மகான் முற்பிறவியில் உன் தவம் கைகூடுவதற்கு முன்பு கால தேவனிடம் நீ சென்று விட்டாய் அந்தத் தவத்திற்கு உண்டான பயனைத்தான் இப்பொழுது தந்திருக்கின்றேன் என்று கூறினார் தான் பெற்ற இறை உபதேசத்தை அனுபவத்தில் கண்டுவர யாரிடமும் சொல்லாமல் நடுநிசியில் ஒரு நாள் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு காட்டிற்குச் சென்றார்

ஒரு அத்தி மரப் பொந்திலே அமர்ந்து தன் அனுபவங்களை எல்லாம், அமரத்துவம் பெற்ற பாடல்கள் புனைந்தார் கிடைத்ததற்கரிய இந்த இறைசக்தியை பெற்ற பாடல்கள் இன்றும் மங்காப் புகழோடு மணக்கின்றது. இவரது தத்துவப்பாடல்கள் பாமரர்களாலும் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி உள்ளன.

இவர் சித்தி அடைந்த திருத்தலம் மயிலாடுதுறை ஆகும்

ஸ்ரீகுதம்பைச் சித்தர் வணங்க நாம் தாம்பரம் மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலுள்ள சித்தர் பீடத்தில் வெள்ளிக்கிழமையன்று பலவர்ண வஸ்திரம், வில்வம், பச்சிலைகள், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை கொண்டும், பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

சிவனை பூசிப்பவரே போற்றி

ஹடயோகப் பிரியரே போற்றி

சூலாயுதம் உடையவரே போற்றி மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி ஞானவரம் கொடுப்பவரே போற்றி

ஜோதி சொரூபனே போற்றி

சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி

விபூதி அலங்காரப்பிரியரே போற்றி

நாட்டியப்பிரியரே போற்றி இதய சுத்தம் உள்ளவரே போற்றி

நாக பந்தனம் செய்பவரே போற்றி

அபயம் அளிக்கும் தேவரே போற்றி இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி ஊனமுற்றவரை காப்பாற்றுபவரே ஓம் என்ற பீஜாட்சரம் வாழ்பவரே போற்றி எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை

சித்த சுவாமியே போற்றி

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, பின்வரும் மூல மந்திரத்தை "ஓம் ஸ்ரீ குதம்பைச் சித்தரே போற்றி" என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்

அதன்பின்பு நிவேதனமாக பால், பழம் தண்ணீர் வைக்க வேண்டும். பின்னர் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டும் நிறைவாக தீபாராதனை காட்டவும்

நவக்கிரகத்தில் கேது பகவான் பிரதிபலிக்கும் குதம்பைச்சித்தர் மனப்பூர்வமாக வணங்குவதால், சித்தபிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை அகலும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும் சரியாகப் படித்தாலும் தேர்வெழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும்

மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும்.கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய திருமணத்தடை, மற்றும் களத்திர தோஷம் நீங்கி திருமணம் நாள் முறையில் நடக்கும். போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல் புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும் ஆன்மீகப்பாதையில் உள்ள முன்னேற்றத்தடை அகலும்

ஆகவே, அன்பர்களே அவரை வணங்கி அருள்பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment