Saturday, July 25, 2020

விபூதியின் மகிமை

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் அர்த்தம் இருக்கிறது .அது போல் ஆன்மீகத்தில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு சம்பிராதயமும் ஏன் செய்கிறார்கள் ? என்பதை 

தெரிந்து செய்தால் நாம் சீக்கிரமாக கடவுள் அருகில் செல்ல முடியும் .



 விபூதி


 .விபூதிக்கு திருநீறு என்ற பெயர் உண்டு .விபூதி சைவர்களது புனித அடையாள சின்னம் ."எவராக இருந்தாலும் இந்த உடல் ஒரு நாள் மரணத்திற்கு பிறகு, இறுதியில் தீயில்  வெந்து பிடி சாம்பலாக போகிறது "என்ற தத்துவத்தை உணர்த்துகிறது .ஆகையால் ,தூய்மையான அறநெறியில்இறை சிந்தனையோடு வாழ வேண்டும்.


பசுவின் சாணத்திலிருந்து சுட்டு தயாரிக்கப்படுவது திருநீறு .விபூதி அணியாமல் செய்யும் சிவபூஜை ,
ஜெபம்,பிதுர் கர்மம் ,தேவர்களின் யாகம் முழுமை அடையாது .


ஸ்ரீ மகா லக்ஷ்மிக்கு உகந்தது விபூதி . திரு என்றால் மகா லக்ஷ்மி .விபூதியை திருநீறு என்று  அழைக்கிறார்கள் .

விபூதியை எந்த திசை பார்த்து பூச  வேண்டும் ?


'நீரில்லா நெற்றி பாழ் 'என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

சைவர் திருநீறும் ,வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில்  அணிதல் வேண்டும் .

வடக்கு  திசை ,கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் ,மூன்று விரல்களால் (நடு விரல் ,
மோதிர விரல் ,ஆள் காட்டி விரல் )பூச  வேண்டும் . விபூதி நிலத்தில் சிந்துவது பாவம்.
 பூசும் போது திருசிற்றம்பலம் ,சிவாய நம  அல்லது சிவ சிவ என்றும் உதடு பிரியாமல் மனம் ஒன்றி சொல்ல வேண்டும் .


திருமணமாகாத பெண்கள் விபூதி பிரசாதத்தை கழுத்தில் பூச வேண்டும்.இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும் .

எப்போது விபூதி பூசலாம் ?


        காலை, மாலை ,பூசைக்கு முன்னும் ,பின்னும் ,ஆலயம் செல்வதற்கு முன் ,இரவில்
உறங்க போவதற்கு முன் ,விபூதி தரிக்க வேண்டும் .

மூன்று படுக்கை வசக் கோடு  பூசுவதை "திரிபுண்டரம் "எனப்படும் .



இன்னும் விபூதியின் மகிமையை அறிய  ஒரு
சின்ன கதை இதோ!

'பர்னாதன்' என்ற சிவபக்தன் இருந்தான் .உணவு,தண்ணீர்  மறந்து சிவனை நினைத்து ,கடும்
தவம் இருந்தான் .ஒரு நாள் ,அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது.தவத்தை கலைத்துகண் திறந்து பார்த்தான் .அவனைச்  சுற்றிசிங்கங்களும்,புலிகளும் ,பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன .
பறவைகள் பழங்களை பறித்து கொண்டு வந்து ,அவன் முன் வைத்தது. பசி தீர சாப்பிட்டான்.மீண்டும் தவம் செய்ய துவங்கினான் . பலவருடங்கள் கடந்தோடியது.தவம் முடிந்து ,சிவ வழிபாட்டை தொடங்கினான்.
ஒரு நாள்,தர்பை புல்லை அறுக்கும் போது  அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.
அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான்.ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.

சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின்
கையைப் பிடித்து பார்த்தார்.என்ன ஆச்சரியம் !ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது.வந்தது தாய்மானவர் என்பதை அவன் அறிந்தான் .



ரத்தத்தை நிறுத்தியது யார்?என்பதை அறிவேன் .சுவாமி !'உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் 'என்று பர்னாதன் வேண்டினான்.ஈசனும் காட்சி கொடுத்தார்.
"உனக்காகவே சாம்பல்லை உருவாக்கினேன் .அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என அழைக்கப்படட்டும் ".உன் நல் தவத்தால் விபூதி உருவானது 


.அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இதை பூசுபவர்களை  துஷ்ட சக்தி நெருங்காது .விபூதி என் ரூபம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார்.



               விபூதி பிள்ளையார்



இங்கே இருக்குற படம் மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலில் அமைத்துள்ள விபூதி பிள்ளையார் . இந்த  பிள்ளையாருக்கு நம் கையால்  விபூதி அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் .இவரை வணங்கினால் ,வாழும்  காலத்தில்பொருளும் ,பிறவா நிலையும் கிடைக்கும் என்பது
பக்தர்களது நம்பிக்கை .நீங்களும் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போனால்  பிள்ளையாரை தரிசனம் பண்ணுங்கள் .

விபூதியால் என்ன நன்மை ? என்று ராமன் அகத்தியரிடம் கேட்டார்.



பகை ,தீராத வியாதி ,மனநல பாதிப்பு ,செய் வினை பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பூசினால்
அனைத்தும் விலகும் என்று உபதேசம் செய்தார்.


இனிமேல்,  விபூதி பூசும் போது அதன் பொருள் அறிந்து பூசுவீர்கள் !என்று நினைக்கிறேன். என்
பதிவு நிறைய பேர்களுக்கு ஆன்மீகச்  சிந்தனையை தூண்டும் என எண்ணி ,இந்த பதிவை முடிக்கிறேன்.

சர்வமும் சிவமயம் !  சகலமும் சிவனருள் !நடப்பதெல்லாம் ஈசன் செயல்!

No comments:

Post a Comment