தேவையற்ற தீய எண்ணங்களை தவிர்ப்பது எப்படி? அதுவாக வருகிறது
என்ன செய்வது என்று தெரியவில்லை.. நண்பரே
Simple.
வருவதற்கு காரணம் கருமையத்தில் ஏற்கனவே உள்ள பதிவுகளின் வெளிப்பாடுதான்
பொதுவாக தேவையற்ற எண்ணங்கள் Ego, Jealous, Lust, Fear (தன்முனைப்பு பொறாமை, காமம், பயம்) அடிப்படையில்தான் வரும்
ஒரு தீய எண்ணம் மனதில் வருகிறது என்றால், உடனே ஆராய வேண்டும் எந்த பதட்டமும் இல்லாமல் இயல்பாக
ஏன் வருகிறது
நம்பக்கத்தில் என்ன தவறு
இந்த எண்ணம் செயலாக மாறினால் என்னென்ன தேவையற்ற விளைவுகள் வரும்
ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்
இந்த தீய எண்ணம் தோன்றினால், இன்னின்ன தேவையற்ற விளைவுகள் ஏற்படும் என்ற நம் முடிவை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும்
அடுத்த முறை அந்த தீய எண்ணம் வரும் போது, இந்த விளக்க முடிச்சும் சேர்ந்தே வரும்
அந்த எண்ணத்தை செயல்படுத்தாமல் செய்து விடும்
இப்படி எந்த தீய எண்ணம் வந்தால் ஆராய்ந்து, விளைவுகளை புரிந்து கொண்டால் நாளாவட்டத்தில் தீய எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்து நல்ல எண்ணங்கள் துளிர் விட ஆரம்பிக்கும்
நல்ல எண்ணங்கள் நம்முள் மலர மலர நம்மை சுற்றி நல்ல Aura உருவாகி நல்லோர் தொடர்புகள் பெருகும். வாழ்வும் சிறக்கும்.
பார்ப்பதற்கு எளிமையாக தோன்றும்
இந்த பயிற்சி நம் வாழ்வையே திசை திருப்பி விடும்
இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று நண்பர் கேட்டார்
இதில் என்ன பிரச்னை என்றால், இங்கு நீங்களே டாக்டர், நீங்களே நோயாளி.
உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள வேண்டியதுதான்
அற்புதம்... என்றார் நண்பர்
இந்த நற்சிந்தனை அருட்தந்தையின் அனுபவ சிந்தனை.
இறையே குருவே சரணம் சரணம்
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube, Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.
No comments:
Post a Comment