Friday, July 10, 2020

மகிழ்ச்சியாக இருக்க ஆன்மிக சிந்தனைகள்

#மகிழ்ச்சியாக_இரு ! ! !_*                             ...            (சிவாய நம என சிந்திப்பவர்க்கு அபாயம் ஒருநாளுமில்லை)
தகப்பனே கொலை செய்ய 
முயற்சித்த போதும்
பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தான் . . .

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
கைகேயி 
மகிழ்ச்சியாக இருந்தாள் . . . 

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

இளம் விதவையான சமயத்திலும்
குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .  

தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பிறவிக் குருடனாக இருந்த போதிலும்
சூர்தாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

மனைவி அவமானப்படுத்திய போதிலும்
சந்த் துக்காராம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கணவன் கஷ்டப்படுத்திய போதிலும்
குணவதிபாய்  
மகிழ்ச்சியாக இருந்தாள் . . . 

இருகைகளும் வெட்டப்பட்ட போதிலும்
சாருகாதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கைகால்களை வெட்டிப் பாழுங்
கிணற்றில் தள்ளிய போதிலும்
ஜயதேவர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . . 

மஹாபாபியினிடத்தில்
வேலை செய்த போதிலும்
சஞ்சயன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதிலும்
பூந்தானம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . . 

கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்திய போதிலும்
தியாகராஜர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதிலும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
மகிழ்ச்சியாக இருந்தார் . . . 

சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த போதிலும்
கூரத்தாழ்வார்
மகிழ்ச்சியாக இருந்தார் . . . 

இவர்களால் எப்படி
மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது ? 

அதுதான் பிரம்ம ரகசியம் என்பது.....!

தன்னோடு இறைவன் சிவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!! 

இறைவன் சிவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர என்ன வழி?

தன்னை அறிந்தால்
தன் தலைவனை அறியலாம் . . .

தன்னை அறிய
தன்னை உணர்ந்த
உண்மை குருவை
நாடுவதே சிறந்த வழி...  

அதனால் இனி வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக 
கலங்காதே!

*எது எப்படி இருந்தாலும்,*
*எது எப்படி நடந்தாலும்,*
*யார் எப்படி* *நடத்தினாலும்,*
*யார் எப்படி* *மாறினாலும்,*
*எதை இழந்தாலும்,*
*யாரை இழந்தாலும்,*
*உன் இறைவன்*சிவன்* *உன்னுடன்*
*எப்போதும்* *இருக்கின்றான்*
*என்பதை முழுமையாக* 
*நம்பு....*

நீயும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,
பிறரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு.

உன் எல்லா துன்பங்களில் இருந்தும்
அப்போதே விடுதலை கிடைக்கும்.....!!! சிவ சிவ சிவ ௐ நம சிவாய. அன்பேசிவம்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment