Friday, July 31, 2020

வாழ்க்கையில் பக்குவம் என்றால் என்ன?

*பக்குவம்* என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!

கவியரசு கண்ணதாசன்

🌼
கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼
கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼
இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼
ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼
இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼
வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼
பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼
நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼
இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼
நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼
கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼
காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼
எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

🌼
எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼
பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

🌼
ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼
பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼
மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼
`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

🌼
இதுதான் அந்தப் பழமொழி.

🌼
பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼
ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼
இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼
பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼
ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼
நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

🌼
`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼
`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

🌼
அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

🌼
அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

🌼
இனி விஷயத்திற்கு வருகிறேன்.

🌼
`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼
உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼
தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼
அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼
இன்றைய பக்குவம் இருபது ஆண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼
வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼
ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼
சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼
முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼
இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼
மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼
இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼
சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼
அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

🌼
மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼
எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼
ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼
ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼
விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼
தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼
`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼
அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

🌼
`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

🌼
எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”
என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.
நல்லது.

🌼
`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

🌼
எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

🌼
ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

🌼
“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

🌼
ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

🌼
பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

🌼
நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

🌼
காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

🌼
நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

🌼
ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

🌼
சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

🌼
ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

🌼
ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

🌼
ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

🌼
அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

🌼
வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

🌼
ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர,
அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

🌼
பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

🌼
“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

🌼
“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

🌼
அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது
அவனுக்குத் தெரியுமா?

🌼
அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

🌼
ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

🌼
`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

🌼
`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

🌼
எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

🌼
மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

🌼
நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

🌼
இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

🌼
காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼
செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼
கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼
என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக்
கண்டுபிடிப்பேன்.

🌼
என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼
தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

🌷
பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள் ...!

கவியரசர் கண்ணதாசன்...

சனி மகா பிரதோஷ வழிபாடு மற்றும் பலன்கள்

*🔯சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்




*🔯மங்களம் அருளும் மஹா(சனி) பிரதோஷ வழிபாடு.*

 சகல  சௌபாக்கியத்தையும் தரும் சனி பிரதோஷம்…!

✨ பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

✨ எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்

11-ஆம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12-ஆம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும்.

 எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். 

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், 
இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும்,

 மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

✨ சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

 இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

✨ சனி பிரதோஷத்தை முறையாக வழிபட நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி காலக்கட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

✨ பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். 

பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

(பக்தி Whatsapp Telegram 9442705560)

✨ ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.

✨ சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

*🔯மகா சனி பிரதோஷ பலன்கள் :*

✨ பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

✨ பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.

✨ சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

✨ பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

✨ பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

✨ பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்…

*🔯சிவப்புராணம் பாடல் வரிகள்*

108 சிவபெருமான் போற்றி
இடரினும் தளரினும் பாடல் வரிகள்

வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்

1008 திருலிங்கேஸ்வரர்கள்

துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம்
திருச்சிற்றம்பலம்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Thursday, July 30, 2020

நட்பை பற்றி இறை தத்துவம்

நண்பர்கள் தினம் ஸ்பெஷல் !

இறைவனுடைனான நமது நட்பு
~~~~~~~~~~~~~~~~~

நட்பு என்பது என்ன?
எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்காமல் நம் நண்பருக்கு உதவுவதும், அவர் துன்பத்தில் இருக்கும் போது ஓடி வந்து அவருக்கு ஆறுதல் கூறுவதும் அவர் வளர்ச்சி கண்டு நாம் பேரின்பம் கொள்வதுமே நட்பு எனப்படும்.

இறைவனுடன் நாம் நட்பு கொண்டால் தான் இத்தகைய நன்மைகள் கிடைக்கும். இறைவன் நமக்கு மிகச் சிறந்த நண்பன். இத்தகைய பெரிய உலகத்தையே நாம் அனுபவிக்க வழங்கிய அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை. மாறாக அவன் நமக்கு வழங்குவது ஏராளம்.
இறைவன் நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டால் நமது வாழ்க்கை வளமாக மாறும்.

அர்ச்சுனன் கண்ணன் நட்பு :

அர்ச்சுனன் கண்ணனை தனக்காக நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். கண்ணன்நல்ல நண்பன். நல்ல நண்பன் என்ன செய்வான்? தன்னுடைய நண்பன் செருக்குக் கொள்ளும்போது அவனைக் கண்டித்து திருத்துவான். கண்ணன் அர்ச்சுனனை அப்படித் திருத்தினான். அர்ச்சுனன் மனம் தளரும் போதெல்லாம் அவனுக்கு நல்ல ஆறுதல் வழங்கியவன் கண்ணன். இறைவனாகிய கண்ணனை நண்பனாக பெற்றதால் அர்ச்சுனன் பெற்ற நன்மைகள் கணக்கற்றவை. 

சுந்தரர் சிவபெருமான் நட்பு:

அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானை தன் தோழராகவே எண்ணினார். அதனால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கப்பட்டார். அவர் பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சுந்தரர் தன் மனைவி பரவையார் மீது கொண்ட ஊடல் காரணத்தால், தன் நண்பனுக்காக பரவையாரிடமே தன் ஊடலை தீர்க்க தூதுவனாக அனுப்பினார், நண்பனுக்காக இறைவனே பரவையாரிடம் தூதுவனாகச் சென்று ஊடலை தீர்த்து வைத்தார். இத்துடன் இல்லாது சுந்தரர் வேண்டும் போதெல்லாம் பொன்னும் பொருளும் கொடுத்து இடர்களைந்தார். இந்து சைவ சமய மார்க்கத்தில் அவர் இறைவனிடம் கொண்டது சகமார்க்கம் என்பதாகும்.

நண்பன் என்பவன் நிஜத்தைத் தொடரும்நிழலைப் போன்றவன். நட்புக்கு கரும்பை உவமையாக சொல்கிறது நாலடியார்என்னும் நீதி நூல்,
கரும்பை நுனியிலிருந்து தின்றுபடிப்படியாக அதன் அடிப்பகுதியை சுவைப்பது போன்றதாகும். இது போன்றுதான் பெரியோர்களின் நட்பு.

இறைவனிடம் நாம் கொள்ளும் அன்பு என்னும் நட்பு அளவிடர்கரியது. நாம் வழங்கும் அன்பையே உணர்வான். இறைவன் அன்பே வடிவானவன். இதனால் வள்ளலார், இறைவனை ” அன்பெனும் பிடிக்குள் அகப்படும்மலையே என்றார்.
திருமந்திரம் தந்த திருமூலரும் ” அன்பே சிவம் ” என்றார்.

ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட நட்பு :

ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட காதல் எனும் நட்பு. ஆண்டாள் இறைவனுக்கு அனுதினமும் முதலில் தான் அணிந்து அழகு பார்த் பின்புதான் இறைவனுக்கு சார்த்தினார்.

கண்ணப்ப நாயனார் காளத்தி நாதர் நட்பு:

கல்லும் கரையுமாறு கனி தமிழில் திருவாசம் பாடிய மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனாரை வியந்த பாராட்டுகிறார், அவர் இறைவர்பால் நட்புக்கு ஈடு இணை இல்லை அவர் அளவிற்கு அன்பு செலுத்துவர் யாரும் இல்லை என்கிறார். அன்பில் உச்சியில் கண்ணப்பர் நிற்கின்றார், இதனை அவர் ” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் ” என்ற வரியில் பாராட்டுகின்றார். கண்ணப்ப நாயனாரை சமயக்குரவர் நால்வரும் நக்கீரர் முதலிய பெரும் புலவர்களும் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கண்ணப்பர் தான் வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தை முதலில் தான் உண்டு, அது சுவையாக இருந்தால் மட்டுமே அதனை இறைவனுக்கு படைப்பார், தன்கு என்ன சாப்பிடப் பிடிக்குமோ அதனையே இறைவனுக்கு நிவேதனம் செய்தார் கண்ணப்பர், இவர் அன்புருவாகி இறைவன் மீது எல்லையற்ற அன்பைச் செலுத்தி ஆறு நாள் தொண்டு செய்து முக்தி பெற்றார்.

குகன் இராமபிரான் நட்பு :

கங்கைக் கரையில் வாழ்ந்தவன் குகன். உயர்ந்த அன்புக் கருவூலமாக விளங்கினான். இராமபிரானிடம் அன்பு செலுத்தியவர்கள் பலர். அனுமன், சுக்ரீவன், விபிஷணன், ஜடாயு,சபரி, சரபங்கர் பாரத்துவாசர் முதலியோர் ஸ்ரீராமரை நேசித்தார்கள்.
ஆனால் சிறுபயன்கூட கருதாமல் நேசித்தவன் குகன், நிஷ்காம்ய பக்தி செய்தவன், நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன். என்று குகனை சுக்ரீவன் வியந்து பாராட்டுமளவுக்கு சிறந்தவன் குகன். இராமனுக்கு சிறந்த நண்பனாக குகன் விளங்கினான். ஆசாரம், கல்வி, தகுதி முதலியஒன்றினாலும் உயர்வு இல்லாத வேடர் தலைவன் குகன். எனினும், அவனை தன் தம்பி என்று கூறி தழுவிக் கொண்டார் ஸ்ரீராமர். இவர்களுடைய நட்பை கம்பர் தன் பாடலில் ” பொய்யில் உள்ளத்தன்” என்றும், இலட்சுமணன் இராமபிரானிடம் குகனைப் பற்றி கூறுங்கால், ” சுற்றமுந் தானும் உள்ளந் தூயவன் தாயின்நல்லான் ” என்று குறிப்பிடுகின்றார்.
இத்தகைவர்களிடமெல்லாம் அன்பு கொள்ள ஒரு தகுதி வேண்டும். இங்கே நட்பு என்பது மேலானது. பொருத்தமானது, அவசியமானதும் கூட, வாழ்க்கையில் எத்தனையோ உறவு முறைகள் இருந்தும், அத்தனையும் கடந்து நிற்பது நட்பு மட்டுமே.
ஒருவர் தன் தாயிடம் சில விஷயங்களையும் தன் சகோதரிகளிடம் சில விஷயங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும், அவர்களிடம் தனிப்பட்ட சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருவர் நண்பரிடத்தில் மட்டும் தான் அனைத்து விசயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் இது நட்பின் தனிச் சிறப்பாகும்.
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்னும பழமொழி கூட நட்பின் சிறப்பை விளக்க எழுந்ததேயாகும்.
“நல்ல நண்பனைப் பெறாதவன்
அந்தஇடத்தை காலியாகவே
வைத்திருக்கிறான் என்பது பெரியோர்களின் ஆழமான கருத்து”

நட்பு என்பது எல்லாவற்றையும் கடந்தது.
எந்தவித பிணைப்பும் இல்லாதது.
இணைப்பது.
நட்பு, நிர்ப்பந்தத்திற்குள் உங்களைத் தள்ளாது.

கண்ணன் எல்லோரிடமும் அன்பு பூண்டொழிகினான். ஆனால் அர்ச்சுனனையும் குசேலரையும் மட்டுமே நண்பர்கள் என்றான். இதற்கு என்ன காரணம்?
நாம் அனைவரிடமும் பழக முடியும். பேச முடியும், ஆனால் ஓரிருவரை மட்டுமே நண்பராக கொள்ளமுடியும். அதுவும் தன்மேல் அளவு கடந்த அன்பு கொண்டோரிடம் மட்டுமே நாம் நட்பு கொள்ள முடியும். வள்ளலார் இறைவனிடம் வேண்டும் போது, நண்பர்கள் எப்படி இருக்க வேண்டு மென்பதற்கு ” உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலாவாமை வேண்டும் ” என்கிறார்.

கண்ணன் மேல் அளவு கடந்த பக்தியும நட்பும் கொண்டவன் அர்ச்சுனன். கண்ணனிடம் ஆலோசனை கேட்காமல் எந்த செயலையும் செய்வதில்லை.
அர்ச்சுனன் மனம் தளர்ந்தபோதெல்லாம் அவனுக்கு ஆறுதல் கூறி, அவனை மீண்டும் நல்ல நிலைக்கு உயர்த்தினான் கண்ணன்.

குசேலர் கண்ணன் நட்பு:

குசேலர் ஓர் ஏழைப் பிராமணர். கண்ணன் அவருடைய பாலிய இளம் உயிர் தோழன். இருவரும் ஒரு சாலை மாணவரகள். கண்ணன் குசேலரை அளவு கடந்து நேசித்தான். குசேலரும் அப்படியே.
குசேலர் கண்ணனை காண ஆடம்பர பொருள்கள் ஏதும் கொண்டு வரவில்லை. பாவம் ஏழை பிராமணரிடம் அதெல்லாம் ஏது? அவரே வறுமையின் கொடுமையால் வாடியவர் ஆயிற்றே.
வறுமையின் கொடுமை தங்காமல் அவருடைய மனைவி அவருடைய பால்ய நண்பனான கண்ணனைக் கண்டு வரும்படி ஏதாவது பொருள் பெற்று வரும்படி அவலை மட்டுமே அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். தன்னுடைய நீண்டநாள் நண்பரான கண்ணனை பார்க்க வெறும் அவலை மட்டுமே கொண்டு போகிறோமே என்று கலங்கினார் குசேலர். எனினும் தன்னுடைய நண்பன் கண்ணன் தான் என்ன கொண்டு வந்திருக்கிறோம் என்று பார்க்காமல், தன்னுடைய நட்பை மிகவும் போற்றுவான் என்ற மனவுறுதியில் குசேலர் கண்ணனைக் காணச் சென்றார். குசேலரைக் கண்ட கண்ணன் தாய் பசுவைக் கண்ட கன்றுபோல துள்ளினான். தன் இருக்கையை விட்டு எழுந்து விரைந்து சென்று குசேலரை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
குசேலரிடம் நலம் விசாரித்தான் கண்ணன். அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தான்.குசேலர் உறங்கும் போது இந்த கால்கள் எத்தனை மலைகளைக் கடந்து வந்தனவோ என்று மனம் உருகி அந்தக் கால்களை இதமாக பிடித்து விடுகிறான் கண்ணன்.
எத்தனை ஆழமான நட்பு கண்ணனுக்கும் குசேலருக்கும் இருந்த நட்பு!.

” முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு ” என்கிறார் வள்ளுவர்

இந்த நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் தான் கண்ணனும் அர்ச்சுனனும், கண்ணனும் குசேலரும்.
அனைத்து உறவுகளின் கதாபாத்திரத்தையும் நிறைவு செய்தான் கண்ணன்.

நண்பன் என்ற சொல் அன்பனாக மாறுகிறது. எல்லா உறவுகளுமே பின் விளைவை ஏற்படுத்தும், ஆனால் நட்பு அப்படியன்று.
மனித வாழ்க்கையில் உள்ள உறவுகள் அனைத்தும் இறுதியில் கடனாக மாறும் நட்பு அப்படியல்ல. என்றுமே இளமை குன்றாமல் இருக்கும்.

நெல்லின் உமியானது நீக்கி விட்டு, மீண்டும் அரிசியை அந்த உமியில் போட்டால் முன்பிருந்த உறுதி அந்த நெல்லுக்கு இருக்காது.
அது போல்,, நெருங்கி பழகிய இருவர், ஒரு நாளும் பிரியக் கூடாது. பிரிந்து மீண்டும் இணைந்தால் பழைய நட்பின் உறுதி இருக்காது.
நட்பாக இருப்பதற்கு வயதும் இனமும் பொருளாதாரமும் கல்வியறிவும் ஜாதியும் மதமும் ஓத்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. இவை ஒன்று கூட இல்லாமல் இருந்தால் தான் நட்பு.

அப்பர் பெருமான் வயதென்ன?
ஞான சம்பந்தர் வயதென்ன?
ஒருவர் முதியவர், இன்னொருவர் இளையவர், இவர்களுடைய நட்புக்கு வயது ஒரு தடையாக இருந்ததில்லை. இருவரும் இணைந்தே பல சிவத்தலங்கள் சென்று பதிகங்கள் பாடினர்.
நட்பு வட்டம் மயமானது.

ஆன்மிகத்தில் கண்ணன் கடவுள். அர்ச்சுனன் மனிதன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவருடைய நட்புத்தான் எல்லா புராண இதிகாச, வேத, உபநிடத, சாஸ்திர சம்பிரதாய உறவுகளின்உயர்வாக ஆழமாக போற்றப்படுகிறது.

இறைவன் தன்னை அனபர்களுக்கு முன் எளிமையாக்கிக் கொள்ள பெரிதும் விரும்புகிறான்.
இறைவனை நோக்கி பக்தன் ஓர் அடி எடுத்து வைத்தால் பக்தனை நோக்கி இறைவன் பத்தடி எடுத்து வைப்பான்.
தன்னுடையஅன்பர்கள் செய்யும் செயலை இறைவன் பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறான். அன்புதான் அவனுக்கு முக்கியம்.
சாக்கிய நாயனார் மனதில் அன்பு கொண்டு சிவபெருமானுக்கு கல்லால் அர்ச்சனை செய்தார். அது சிவபெருமானுக்கு பூ மாலையாக ஆனது.

மன்மதன் மனதில் அன்பில்லாமல் மலரையே அம்பாக சிவபெருமான் மேல் எய்தான். அந்த மலர் சிவபெருமானை எரிச்சலூட்டியது.
உடனே அவர் தன் நெற்றிக் கண்ணால் எரித்தார்.
சிவலிங்கத்தில் இரத்தம் வடிவதைக் கண்ட கண்ணப்பர் தன்னுடைய காலை சிவலிங்கத்தின் மீது வைத்து தன்னுடைய கண்ணை தோண்டி அந்த சிவலிங்கத்தில் பொருத்தினார்.
கண்ணப்பர் அன்பினால் செய்த இச்செயல் சிவபெருமான் விரும்பி ஏற்புடையதாயிற்று
தன் மனைவி பரவையார் தன்னிடம்கொண்ட ஊடலை தவிர்ப்பதற்கு சிவபெருமானையே தூதாக அனுப்பினார் சுந்தரர். சிவபெருமானும் பரவையாரிடம் நண்பனுக்காக தூது சென்று பிணக்கை நீக்கினார்.
எனவே, அன்பர்களுக்கு எளிமையானவன் இறைவன்.
மகாபாரதப் போரில் கண்ணன்அர்ச்சுனனுக்கு தேர்ஓட்டும் சாரதியாக பணி செய்தான். இது அர்ச்சுனின் மேல் கொண்ட நட்பின் சிறப்பு, நட்பு மட்டுமே இது போன்று பணியாளராக இதைச் செய்யும்.

கடவுளை நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்
” உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரும் “.🙏🌹🌈

இறைவன் மறைவு இல்லாதவர்



உலகத்தில் உள்ள இந்தப் பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?  
....
வருவது என்பதன் பொருள் என்ன என்பது தான் இதற்கு விடை. 
சூன்யத்திலிருந்து ஏதாவது ஒன்றை  உண்டாக்க முடியும் என்பது இதன்  பொருளானால், இது முடியாத காரியம், இந்தப் படைப்பை, இந்த வெளிப் பாட்டை சூன்யத்திலிருந்து தோற்று வித்திருக்க முடியாது. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் தோன்றாது. 
-
இதோ ஒரு கண்ணாடி இருக்கிறது, இதைத் துண்டுதுண்டாக உடைத்து, பொடியாக்கி, ரசாயணப் பொருட்களின் உதவியால் ஏறக் குறைய அழித்து விடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அது சூன்யமாகி விடுமா? 
கண்டிப்பாக இல்லை. முன்பிருந்த உருவம் போய்விடும்.என்றாலும் அந்தப் பொருளின் துகள்கள் இருக்கவே இருக்கும். இந்தத் துகள்கள் ஒரு வேளை நாம் புலன்களால் அறிய முடியாத அளவுக்கு நுட்பமாகி விடலாம். என்றாலும் அவை இருக்கத் தான் செய்கின்றன. இருக்கும் அந்த அணுக்களைக் கொண்டு  வேறொரு கண்ணாடியை ஒரு வேளை  செய்யவும் முடியலாம். ஒரு பொருளின் விஷயத்தில் இது உண்மையானால், எல்லாவற்றின் விஷயத்திலும் உண்மையாகத் தான் இருக்க வேண்டும்.
-
 சூன்யத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது. அதுபோல் இருக்கும்  எதையுமே இல்லாமல் செய்யவும் முடியாது. அது மிக மிக நுட்பமாக மாறலாம். மீண்டும் தூலப் பொருளாகவும் மாறலாம். 
-
கடல் நீர் நீராவியாகி மேலே சென்று மழைத் துளியாகிறது. அது காற்றின் வழியாக மிதந்து மலையை நோக்கிச் செல்கிறது. பிறகு  நீராக மாறி, பூமிக்கு வந்து, பல நூறு மைல் ஓடிச் சென்று மீண்டும் தாய்க் கடலை அடைகிறது. விதை மரத்தை உண்டுபண்ணுகிறது. பின்னர்  விதையை விட்டு விட்டு  மரம் அழிகிறது. இந்த விதை திரும்ப மரமாகிறது. மறுபடியும் விதை உண்டாகிறது. இப்படியே இந்த வட்டம் சுழல்கிறது. 
-
எல்லாமே சில விதைகள், சில கருத்துக்கள், சில நுட்பமான அணுக்கள் இவற்றில் தொடங்குவது போலுள்ளது. பின்னர் பருமை பெற்று வளர்கிறது.மறுபடியும் படிப்படியாக  நுண்மை  பெற்றுப் பழைய கருஉருவில்  ஒடுங்கி விடுகின்றன. பிரபஞ்சம் முழுவதும் இப்படியே தான் நடைபெறுகிறது.
-
 இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே உருகுவது போல், படிப்படியாகக் கரைந்து, நுட்பத்தன்மை பெற்று, முடிவில் முற்றிலும் மறைந்தே விடுகின்ற ஒரு காலம் வருகிறது. ஆனால் அப்போதும் அது மிக மிக நுட்பமான ஜடப் பொருளாக  இருக்கவே செய்கிறது. 
-
இந்தப் பூமி குளிர்ந்து கொண்டே வருகிறது. நாளா வட்டத்தில் இது மிகக் குளிர்ந்துவிடும். பிறகு இது  துண்டு துண்டாக உடைந்து, தூள் தூளாகி, நுட்பமாகி அதி நுட்பமாகி மீண்டும் ஆகாசமாகி விடும் என்று நவீன விஞ்ஞானமும் வான இயலும் கூறுகின்றன என்றாலும் இந்த நுட்பமான அணுக்கள் எல்லாம் இருக்கவே செய்கின்றன. இந்த அணுக்கள் சேர்ந்து உண்டாகின்ற  பொருளிலிருந்தே மீண்டும் பிரபஞ்சம் வெளிப் படுகிறது. அது மீண்டும் மறையும். மீண்டும் வேறொன்று வெளிப் படும்.
-
உருவம் அழிவதும், திரும்ப மேலெழுந்து உருவம் பெறுவதும் போல் ஓயாமல் நடந்து கொண்டே இருக்கும். காரியம் காரணம் ஆவதையும், மீண்டும்  காரணம் காரியம் ஆவதையும் வடமொழியில் ஸ்ங்கோசம் ( சுருங்குதல்), விகாஸம்( விரிதல்) என்பர். 
-
பிரபஞ்சம் முழுவதுமே ஆகாச நிலைக்குச் சுருங்குகிறது. பிறகு பழைய நிலைக்கு விரிகிறது. இக்கால விஞ்ஞான மொழியில் சொல்வதானால், பிரபஞ்சம் ஒடுங்குகிறது. பின்னர் பரிணமிக்கிறது, 
-
தாழ்ந்த நிலை உயிர்கள் மெதுவாக படிப்படியாக வளர்ந்து உயர்நிலை  உயிராவதே பரிமாணம் என்று நாம் கேள்விப் படுகிறோம். இது உண்மை தான். ஆனால் இத்தகைய பரிணாமம் ஒவ்வொன்றிற்கு முன்னரும் ஓர் ஒடுக்கம் இருக்கவே  செய்தது.
-
அதேபோல உலகிலுள்ள  சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒன்று தான் .
 சக்தியின்  மிகக் குறைந்த அளவைக் கூட நம்மால் அழிக்கவும் முடியாது. கூட்டவும் முடியாது. சக்தியின்  மொத்த அளவு எப்போதும் ஒரு போலவே இருக்கும்.
ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சக்தியை அழிக்க முடியாது. 
-
இந்தப் பிரபஞ்சம் முன்னால் ஒடுங்கிய பிரபஞ்சத்தின் பரிணாம விரிவே. மீண்டும் இது நுட்பமாகி, மிக நுட்பமாகி ஒடுங்கிவிடும். அதிலிருந்து மீண்டும் புதிய யுகம் தோன்றும். பிரபஞ்சமே இப்படித்தான் நடை பெறுகிறது.
-
 சூன்யத்திலிருந்து  ஏதோ ஒன்று படைக்கப் பட்டது என்ற பொருளில் படைப்பு என்பது எதுவுமே  ஏற்படவில்லை என்பதைக் காண்கிறோம். படைப்பு என்பதை விட வெளிப் பாடு என்பது தான் தகுந்த சொல்லாக இருக்கும். பிரபஞ்சம் என்பது வெளிப்பாடு. அதை வெளிப்படுத்தியவர் இறைவன். பிரபஞ்சம் அவர் மூச்சின் வழியே வெளி வருவது போல் உள்ளது. திரும்பவும் அது அவருள்ளேயே ஒடுங்குகிறது. திரும்பவும் அவர் அதை வெளிப் படுத்துகிறார்.
-
 வேதங்களில் அழகான உவமையால் இதனை விளக்கி யிருக்கிறார்கள் . எல்லையற்றவனாகிய இறைவன் பிரபஞ்சத்தை மூச்சாக வெளி விடுகிறான். திரும்பவும் மூச்சாக அதை உள்ளே இழுத்துக் கொள்கிறான். நாம் ஒரு சிறு தூசியை நம்  மூச்சால் உள்ளே இழுத்து வெளியே விடுவது போன்றது இது.
-
 இதெல்லாம் சரி தான். ஆனால், முதன் முதலாக ப் படைப்பு எப்படி எங்கே இருந்தது? என்ற கேள்வி எழலாம். 
முதலில்  என்பதன் பொருள் என்ன, என்பது தான் பதில். 
முதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. 
காலத்திற்கு ஒரு தொடக்கத்தைக் குறிப்பிட்டால், காலம் என்ற கருத்தே அழிந்து விடும், 
காலம் தொடங்கிய எல்லை ஒன்றை நிறுவ முயலும் போது, அந்த எல்லைக்கும்  அப்பால்  உள்ள காலத்தை நினைத்தாக வேண்டும். அதே போல் இடம் தொடங்கிய எல்லையை நினைக்க எண்ணினால், அந்த எல்லைக்கும் அப்பால் உள்ள இடத்தை நினைக்க வேண்டும். காலமும் இடமும் எல்லையற்றவை. 
எனவே  இவற்றிற்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. 
-
இறைவன் ஐந்தே நிமிடத்தில் பிரபஞ்சத்தைப் படைத்து முடித்து விட்டுப் பிறகு உறங்கப் போய்விட்டார். அப்போது முதல் உறங்கிக்கொண்டே இருக்கிறார் என்ற கருத்து தவறானது.  அலைகள் தொடர்ச்சியாக எழுவதும் விழுவதுமாக உள்ளன. இறைவன் முடிவற்ற இந்த நிகழ்ச்சியை இயக்கி வருகிறார்.
 எப்படிப் பிரபஞ்சத்திற்குத் தொடக்கமும் முடிவும் இல்லையோ, அப்படியே இறைவனும் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். 
-
தூல உருவிலோ நுண்ணுருவிலோ பிரபஞ்சப் படைப்பு இல்லாத காலம் ஒன்று உண்டு என்று  நாம் சொன்னால், அப்போது கடவுளும் இல்லை என்று ஆகிவிடும். ஏனெனில் கடவுளை நாம் பிரபஞ்ச சாட்சி என்றல்லவா சொல்கிறோம்? 
-
பிரபஞ்சம் எப்படி முடிவற்றதோ, அப்படியே இறைவனும் முடிவற்றவர் .
-
-

Wednesday, July 29, 2020

சித்த தரிசனத்தை கொடுக்கும் பூஜைகள்

சித்தர்கள் நம்மிடம் விரும்பி எதிர்பார்ப்பது தினமும் கோயிலுக்குச் செல்வதும்! ஆண்டுக்கு மூன்று முறையாவது தர்ப்பணம் செய்வதும் மட்டுமே!!

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை , புரட்டாசி அமாவாசை,  தை அமாவாசை என்று மூன்று முக்கியமான அமாவாசை நாட்கள் வருகின்றன.

 இதில் ஏதாவது ஒரு அமாவாசை அன்று மட்டுமாவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் போதும் என்ற சூழ்நிலை வந்துவிட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது ஒரு  முக்கிய கடமையாக வைத்திருந்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை ஒரு முதல் கடமையாக நம்முடைய முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.



 இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலமாக நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து நமக்கு ஆசீர்வாதம் அளிப்பார்கள் .

அதன் மூலமாக நமக்கு இதுவரை இருந்து வந்த கடன் சீக்கிரம் தீர்ந்து விடும் நோய் வெகு விரைவில் குணமாகிவிடும் வறுமை நம்மைவிட்டு படிப்படியாக அதேநேரம் நிரந்தரமாக விலகிச் சென்றுவிடும்.

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் கடந்த 12 ஆண்டுகளாக விடுபட்டதற்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.

தை மாதம் முதல் நாள் அன்று நாம் செய்யும் தர்ப்பணம் கடந்து 1500 தலைமுறையாக நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட புண்ணியம் நம்மை வந்து சேரும் என்று சித்தர் பெருமக்கள் தெரிவிக்கின்றார்கள். 

இந்த நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அன்னதானம் செய்தால் போதுமானது. அவ்வாறு செய்யப்படும் அன்னதானத்தை  பித்ரு தற்பணம் ஆக நம்முடைய முன்னோர்களை பித்ருக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். 

பரசுராமன் மகரிஷியின் அருள் தவத்தால் நமக்கு இந்த எளிமையான வரம் கிடைத்திருக்கிறது.

பிதுர் முக்தித் தலங்கள் என்று போற்றப்படும் ஆலயங்கள் ஏராளமாக நம்முடைய ஆன்மீக தமிழ்நாட்டில் இருக்கின்றன. அங்கு தற்பணம் செய்வதன் மூலமாக நம்முடைய பித்ருக்கள் பித்ரு  தெய்வ  நிலையை அடைவார்கள்.

வடக்கே காசி, பிரயாகை என்ற அலகாபாத்,கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ,திரி யுக் நாரா யன், அமர்நாத் போன்றவை பித்ரு என்ற பிதுர் முக்தித் தலங்கள் ஆகும்.

ஆந்திர மாநிலத்தில் மந்த்ராலயம் , ஸ்ரீசைலம் போன்றவை முக்கிய தலங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள பித்ரு முக்தி தலங்கள் பட்டியல்:-

சென்னை அருகில் அரசர் கோயில், திருவள்ளூர் ,விரிஞ்சிபுரம், காவேரிப்பாக்கம்

திருவண்ணாமலை, விருத்தாசலம்

செங்கல்பட்டு அருகில் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், முக்கூடல் என்ற பழையசீவரம்

திருவாரூர் அருகில் திருவிடைமருதூர் திருவாரூர், குருவி ராமேஸ்வரம் , கேக்கரை

மன்னார்குடி அருகில் திருக்கொள்ளிக்காடு ,இடும்பாவனம், ஆவிக்கோட்டை 

தஞ்சாவூர் அருகே பாபநாசம், திருவையாறு, திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, ஸ்ரீவாஞ்சியம் ,திருவிடைமருதூர் 

திருச்சி அருகே ஸ்ரீரங்கம், திரிவேணி சங்கமம் ,பூவாளூர், நத்தம் ,திருமாந்துறை ,அன்பில்

கரூர் அருகில் நெரூர்

கடலூர் அருகே திருவஹீந்திபுரம்

புதுக்கோட்டை அருகே காஞ்சாத்து மலை, வேங்கட குளம் ,நெடுங்குடி, மணமேல்குடி  தேனிமலை

ஆவுடையார் கோயில் அருகே திருப்புனவாசல், தீர்த்தாண்டதானம், முத்து குடா, மீமிசல் ,பொன்பேத்தி

கும்பகோணம் அருகே சேஷம்பாடி, நரிக்குடி, கஞ்சனூர் ,கஞ்சனூர் அருகிலுள்ள திரையை லோக்கி, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, கும்பகோணம் ஊருக்கு உள்ளே அமைந்திருக்கும் மகாமகக் குளம்

மதுரைக்கு அருகே திருக்கோளக்குடி, திருபுவனம்

ராமேஸ்வரம், தனுஷ்கோடி ,அக்கா மடம், தங்கச்சிமடம் ,கோடியக்கரை, வேதாரண்யம் ,கன்னியாகுமரி

போன்றவை பிதுர் முக்தித் தலங்கள் ஆகும்.

மாந்தி அல்லது குளிகன் பிறந்த வரலாறு

மாந்தியின் (குளிகன்)கதை

இராவணனின் மனைவியான மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அச்சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என இருக்க இலங்கை வேந்தன் தனது குலகுருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்து யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் வேண்டுகோள் விடுத்து அதற்கு வழிமுறைகளையும் அவரிடம் கோரினான். அதற்கு சுக்கிராச்சாரியார், "கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்.." என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து, ஒன்றாக அடைத்துவிட்டான் இராவணன்.
ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள். வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டு அது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். "இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்'' என்றார். சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். சனீஸ்வரன்- ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது. குளிகன் ( மாந்தன் எனவும் அழைப்பர் ) பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது. அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்.

இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை, "காரிய விருத்தி நேரம்" என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது. குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான். குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம். இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது. இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது. குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கும். ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. ஆக..தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்.

படத்தில் இடதுபுறம் உள்ளவர் மாந்தன்; வலதுபுறம் அக்னிமாதா; இவர்களுடன் தமது இருகால்களையும் தொங்கவிட்ட வண்ணம் வலக்கையில் மலரேந்தி இடக்கையை மேடைமீது ஊன்றி அமர்ந்துள்ளவர் இவர்களின் அன்னை ஜேஷ்டா எனும் தவ்வைத்தாய். அன்னையின் இடக்கையருகே அவரது காகக்கொடி ! பெரும்பாலான இடங்களில் வழிபாடின்றி தனித்து வெளியே ஒதுக்கி விடப்பட்டிருக்கும் மூத்ததேவிக்கு இங்கு தனிச்சன்னதி அமைத்து வழிபாடு நடக்கிறது. காணப்படும் தலம் :- பகைவிடை ஈசுவரம் எனும் சுந்தரேசுவரர் திருக்கோவில், மேலப்பழுவூர், அரியலூர் மாவட்டம்.

Tuesday, July 28, 2020

சித்தர்களின் ஜீவசமாதி

*சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (108)*

1. திருமூலர் - சிதம்பரம்.

2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.

3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் - திருப்பதி, திருமலை

6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் - கும்பகோணம்.

14. உரோமரிசி - திருக்கயிலை

15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.

22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் - அழகர் மலை

24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.

26. காசிபர் - ருத்ரகிரி

27. வரதர் - தென்மலை

28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.

29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி - ஆரூர்

35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.

36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் - திருவொற்றியூர

41. வள்ளலார் - வடலூர்.

42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45. ராகவேந்திரர் - மந்திராலயம்.

46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் - காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் - பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.

62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.

64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.
🌹🦚🙏🏻MPK🙏🏻🦚🌹

நாக சதுர்த்தி வரலாறு

நாக சதுர்த்தி பற்றிய

பகிர்வுகள

நாக வழிபாடு என்பது

குப்த காலத்தில் இருந்தே

இருக்கிறது. மனிதரில்

ஜாதக அமைப்பில்

தாக்கத்தை ஏற்படுத்துவது

நவகிரகங்கள். இதில்

ராகு கேது கிரகங்கள் நாக

நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் பிறந்த குழந்தைகள் பனமுற்றதாகவும் நோயால் அவதிப்படுவது குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை

அனுபவித்து வருவது.

நாக தேவதைாள்

துன்பங்களிருந்து மீளவும்

நல்ல பலன்களை பெறவும்

நாக தேவதைகளை மனம்

உருகி வழிபட வேண்டும்,

நாக தேவதைகளின்

அருளால் தோங்கங்கள்

விலகி நல்ல பலன்கள்

பெரும் என்பது அதிகம்

பாம்புகளின் தலைவன்

விளங்கிய தட்சகன் என்ற

கொடிய நாகத்தான் பரிசுத்த

என்ற மன்னன் படிக்கப்பட்டு

பிறந்தான்

தந்தையின் இறப்புக்கு

காராணமான பாம்பு

இனத்தையே அழிக்க மறுதி

செய்து சாப்பயக்கும் என்ற

வேள்வியை நடத்தினான்

பா பாம்புகள் தான்

நடத்திய யாகத்தில் இருந்த போலித்தியின் விழுந்து மாண்டான், அராபத்கரான்ற முனிவர் ளே போறேன் யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு பாட நிவர்த்தி கொடுத்தார் எவ்வாறு சாப நியர்ந்தி

தொடுத்த நாள் நாக

சதுர்த்தி தினமாகும். எனவே

நாக விரதம் ஆடி மாத

சதுர்த்தியில் கொண்டாடும்

வழக்கம் தோன்றியது.

முதல் முதலில்

இந்த விரத்த்தை

தொடங்குபவர்கள் ஆடி

மாதத்தில் நாகசதுர்த்தி

விரைந்து தொடங்க

வேண்டும்..

நாகர் சிலைக்கு நிரான்

அபிஷேகம் செய்வார்கள்,

பின்னர் பால் அபிஷேகம்

செய்வார்கள். பின்

மஞ்சள் சிக்குங்குமம்

பயப்பார்கள் நாக சதுர்த்தி

வழிபாடு செய்தால்

ராஜ் கேது தோட்டங்கள்

பாகும் என்பது இங்கு,

அதில் உள்ள ராகு மற்றும்

கேது பகவான் களுக்கு

அரசாணை செய்து

வழிபடுவது மிகுந்த

பாளைத்தரும். |

ஆடி மாதம் வளர்பிறை

பாதுர்த்தியின் |

நாக சதுர்த்தியின்,

மறு நாகா பயாமியாக

கருட பஞ்சமியில்

கொண்டாடப்படுகிறது.

நாக சதுர்த்தி அன்று நாட

தேவதைக்குப் பூஜை

செய்து புற்றுக்குப் பால்

கட்டி, புற்று மண்ணைப்

பிரசாதமாக இட்டுக்

கொள்வார்கள்.

அன்றைய தினம் ஒன்பது

நாக தேவதைகளான

அனந்தன், வாசுகி,

கிஷான், அப்ருன், மகரி

அடி கத பயான்

கார்க்கோடகன், நாதன்

பதியம் ஆகியோர்களின்

நாமத்தைச் சொல்லி

கொண்டே புற்றுக்குப் பால்

பரிப் பூஜிப்பது நல்லது

அருவிய டான புற்று

கோயிலுக்குச் சென்று

பால் மற்றும் முட்டைகள்

வழங்கி வழிபட்டால்

அர்ப்ப தோசங்கள் யாவும்

நீங்கும்

நாக சதுர்த்தி

அனுஷ்டிக்க படுவதற்கு

பாகம் |

ஆடி.அல்லது ஆயண

மாதப் பார்பிறை நான்காம்

நாளாகிய சதுர்த்தியில்

ஐந்தாம் நாளாகிய

பஞ்சமியிலும் நாக சதுர்த்தி

பெருகின்றன.

பாவான அனந்தன் என்னும்

நாசமா இருந்து பசியைக்

காத்துக் கொண்டிருவிழார்.

அவருக்கு உதவியாக

தட்சகன், வாசுகி

கார்க்கோடகன் முதலான

நாகங்களும் பாதாள

லோகத்தில் வருகின்றனர்

கஸ்யபருக்கு கத்ரு

என்பவளிடம் தோன்றியவர்

நாகூர். நாய் சொல்லைக்

கேளாத்தான், நெருப்பில்

இருந்து இறந்து போகும்போது

தாயே சபித்துவிட்டார்.

அந்தச் பாபந்தால் பல

சர்ப்பங்கள் குரூப்பில்

மாண்டு போயின

அஸ்திகர் மல விஜயா

சர்ப்பயாகம் நிறுத்தி

சாயத்தை அகற்றினார்

அதுவே இந்த பஞ்சமி,

அப்பொழுது நாகங்களை

வழிபட்டால் நலம்

உண்டாகும்

புத்திர பேறு உண்டாக நான

பிரதிஷ்டை செய்யும்போது

சாஸ்திரம் கூறுகிறது

அல்யாறு பிறந்தவர்களுக்கு

நாயராஜன், நாகசாமி,

நாகப்பன் நாகலட்சுமி எனப்

பெயர் கட்டப்படுவதை



ஒரு பெண்ணுக்கு

இரண்டு சகோதரர்கள்

இருந்தனர். அவர்கள்

வயலில் வேலை செய்து

கொண்டிருக்கும் போது

நாகப்பாம்பு கடித்து

இறந்து விட்டார்

அவர்கள் உயிர்பித்து

தரும்படி அந்தப் பெண்

நாகராஜனை வேண்டி

நோன்பு செய்தால் அவரது

வேண்டுகோளுக்காக

அவளது காதர்களை

நாகராஜன் உயிர்ப்பித்த

கருதுகிறார்கள். அதுவே

நாக சதுர்த்தி

விரதம் மதுவானால் சரி

அன்றைய தினம் பாம்புப்

புற்றில் பால் வார்த்து.

Monday, July 27, 2020

கருடன் மற்றும் பல்லி பெற்ற சாபம்.

#அனுமனுக்கு_உதவிய_கருடனும், #பல்லியும்_பெற்ற_சாபம்...

சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு. காசிக்கு ஐந்து அதிசயங்களைச் சொல்வார்கள். காசியில்....

●கருடன் பறப்பதில்லை,
●பல்லி ஒலிப்பதில்லை,
●மாடு முட்டுவதில்லை,
●பூக்கள் மணப்பதில்லை,
●எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை..

இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக்காமைக்கும், பல்லி ஒலிக்காமைக்கும் காரணமானவர் பைரவர்தான். காசி நகரைச் சுற்றி 45 மைல் பரப்பளவில் கருடன் பறப்பதில்லை என்கிறார்கள்.

□ இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்ய நினைத்தார் இராமபிரான். காசிக்குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக்குக் கட்டளையிட்டார். 

அனுமன் காசிக்குச் சென்றார். அங்கு எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்தன. அந்த லிங்கங்களில் எந்த லிங்கம் சுயம்பு லிங்கம் என்று புரியாமல் தடுமாறினார் அனுமன். அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய நினைத்தார் மகா விஷ்ணு. விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து வந்தது. ஒருகுறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது. பல்லியும் அதே நேரத்தில் நல்லுரை சொல்வது போல ஒலித்தது. இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன், அந்த லிங்கம்தான் சுயம்பு லிங்கம் என்று உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.

காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின் எட்டு திசைகளிலிருந்து காவல் செய்வதாக ஐதீகம்.சிவலிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர், “என்னுடைய அனுமதியில்லாமல் காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெயர்த்துச் செல்லலாம்?” என்று கேட்டார்.

அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், “என் தெய்வமான இராமபிரானின் உத்தரவு. அதனால் லிங்கத்தை எடுத்துக் கொண்டு செல்கிறேன்” என்று சொன்னார். அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர் அனுமனுடன் சண்டையிட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்தப் போர் அமைந்தது. அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் கவலையில் ஆழ்ந்தார்கள். 

அவர்களுள் சிலர் காசி நகரைநோக்கி விரைந்தார்கள். கால பைரவரை வணங்கினார்கள். “சுவாமி! உலக நன்மைக்காக இந்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு தென்னாடு போக அனுமனுக்கு அனுமதி தரவேண்டும். ஸ்ரீஇராமபிரான் இந்த லிங்கத்துக்குப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத்திருக்கிறார். எனவே அனுமனை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
தேவர்களின்வேண்டுகோளுக்கு இணங்கினார் பைரவர். மனசாந்தி அடைந்தார். சிவலிங்கத்தை  கொண்டு போக அனுமதித்தார்.

அனுமனுக்குச்சரியான லிங்கத்தை அடையாளம் காட்டியது கருடனும் பல்லியும். அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் இனிமேல் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும்; காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர். 

பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை என்கிறார்கள்.

சனியின் வலிமையான பரிகாரம்.

#சனி_பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்...

#ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். 

சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். 

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. 

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது , மிக நல்லது. 

Sunday, July 26, 2020

சதுரகிரி மலையின் ரகசியம்

#சதுரகிரி_மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும். 

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும். 

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார். 

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் ” கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும். 

உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.. 

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்
சித்தர்களின்குரல்...

நாக தோஷம் போக்க கருட மந்திரம்

ஸ்ரீ கருட மந்திரம் :- சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க


                                                           ஸ்ரீ கருட காயத்ரி 

                                                ஓம் தத்புருஷாய வித்மஹே|
                                                ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
                                                தன்னோ கருட ப்ரசோதயாத் ||


ஸ்ரீ கருட பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.


கேரளாவில் இவரை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது.எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.


ஸ்ரீ கருடனின் கதையை விளக்கினால் அதிகம் நீளும்.


இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும்  சுவாதி  நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.


சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி  மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.


ப்ரகலாதப்ரியன் பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான் .


ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.


ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப் போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.

கருட உபாசனை  பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச்  சிலரே அறிவர்,கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்றால் ஆச்சர்யம் அடைவீர்கள் ஆம் கருட உபாசானையின் பலன்களுள் அதுவும் ஒன்று.


ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து,
செண்பக மலர்களால் அர்ச்சிக்க மகிழ்ந்து வரங்களை அருள்வார்.


கருட மந்திரங்கள் பல உள்ளன.அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி  மந்திரம் தான்.இம்மந்திரத்தை குருவிடம்  தீக்ஷை பெற்று விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு ஜெபிக்கவும்.



கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-


ஓம் க்ஷிப ஸ்வாஹா  

KSHIPA OM SWAHA


ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும்.


கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும்.நீரில் நின்று ஜெபிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே ஜெபிக்கலாம்.



பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு  வர மனோதிடம் உண்டாகும்.



கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.


கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-


1.விசாலா -புன்னகை பூத்த பார்வை

2.கல்யாணி - மான் போன்ற பார்வை

3.தாரா - குருக்குப்பார்வை

4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை

5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை

6.அவந்தீ  -  பக்க வாட்டுப் பார்வை

7.விஜயா  -  கணவன் மனைவியிடையே நேசத்தைப்  பூக்கச் செய்யும் பார்வை

8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை



இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?


முற்காலத்தில் சன்யாசிகள்,சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி  தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள் .அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள் .கருட மந்திரத்தை லக்ஷம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள்.இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள்.அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது.யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.


ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு
கெடுபலன்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும்.

கால சர்ப்ப தோஷ  பாதிப்புகள் குறைய கருட உபாசனை செய்து வரலாம்.


தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன.தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் பொழுது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.


பாம்பு கடித்து விஷம் தலைக்கேறினால் முகம் நிறம் மாறிவிடும் காப்பாற்றுவது கடினம்,விரைவில் மரணம் ஏற்படும் .அப்படி விஷத்தால் கடுமையாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் கூட எனது சிலம்ப ஆசான் கருட மந்திரப் பிரயோகத்தினால் விஷம் நீக்கி இயல்பு நிலை பெறச்செய்துள்ளார். இது நான் நேரில் கண்ட அனுபவம்.


அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும்.மேலும் விஷ நிவாரண கருடரக்ஷை கட்டிக்கொள்ள விஷ ஜந்துக்கள் தீண்டாது.

Saturday, July 25, 2020

விபூதியின் மகிமை

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் அர்த்தம் இருக்கிறது .அது போல் ஆன்மீகத்தில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு சம்பிராதயமும் ஏன் செய்கிறார்கள் ? என்பதை 

தெரிந்து செய்தால் நாம் சீக்கிரமாக கடவுள் அருகில் செல்ல முடியும் .



 விபூதி


 .விபூதிக்கு திருநீறு என்ற பெயர் உண்டு .விபூதி சைவர்களது புனித அடையாள சின்னம் ."எவராக இருந்தாலும் இந்த உடல் ஒரு நாள் மரணத்திற்கு பிறகு, இறுதியில் தீயில்  வெந்து பிடி சாம்பலாக போகிறது "என்ற தத்துவத்தை உணர்த்துகிறது .ஆகையால் ,தூய்மையான அறநெறியில்இறை சிந்தனையோடு வாழ வேண்டும்.


பசுவின் சாணத்திலிருந்து சுட்டு தயாரிக்கப்படுவது திருநீறு .விபூதி அணியாமல் செய்யும் சிவபூஜை ,
ஜெபம்,பிதுர் கர்மம் ,தேவர்களின் யாகம் முழுமை அடையாது .


ஸ்ரீ மகா லக்ஷ்மிக்கு உகந்தது விபூதி . திரு என்றால் மகா லக்ஷ்மி .விபூதியை திருநீறு என்று  அழைக்கிறார்கள் .

விபூதியை எந்த திசை பார்த்து பூச  வேண்டும் ?


'நீரில்லா நெற்றி பாழ் 'என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

சைவர் திருநீறும் ,வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில்  அணிதல் வேண்டும் .

வடக்கு  திசை ,கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் ,மூன்று விரல்களால் (நடு விரல் ,
மோதிர விரல் ,ஆள் காட்டி விரல் )பூச  வேண்டும் . விபூதி நிலத்தில் சிந்துவது பாவம்.
 பூசும் போது திருசிற்றம்பலம் ,சிவாய நம  அல்லது சிவ சிவ என்றும் உதடு பிரியாமல் மனம் ஒன்றி சொல்ல வேண்டும் .


திருமணமாகாத பெண்கள் விபூதி பிரசாதத்தை கழுத்தில் பூச வேண்டும்.இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும் .

எப்போது விபூதி பூசலாம் ?


        காலை, மாலை ,பூசைக்கு முன்னும் ,பின்னும் ,ஆலயம் செல்வதற்கு முன் ,இரவில்
உறங்க போவதற்கு முன் ,விபூதி தரிக்க வேண்டும் .

மூன்று படுக்கை வசக் கோடு  பூசுவதை "திரிபுண்டரம் "எனப்படும் .



இன்னும் விபூதியின் மகிமையை அறிய  ஒரு
சின்ன கதை இதோ!

'பர்னாதன்' என்ற சிவபக்தன் இருந்தான் .உணவு,தண்ணீர்  மறந்து சிவனை நினைத்து ,கடும்
தவம் இருந்தான் .ஒரு நாள் ,அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது.தவத்தை கலைத்துகண் திறந்து பார்த்தான் .அவனைச்  சுற்றிசிங்கங்களும்,புலிகளும் ,பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன .
பறவைகள் பழங்களை பறித்து கொண்டு வந்து ,அவன் முன் வைத்தது. பசி தீர சாப்பிட்டான்.மீண்டும் தவம் செய்ய துவங்கினான் . பலவருடங்கள் கடந்தோடியது.தவம் முடிந்து ,சிவ வழிபாட்டை தொடங்கினான்.
ஒரு நாள்,தர்பை புல்லை அறுக்கும் போது  அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.
அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான்.ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.

சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின்
கையைப் பிடித்து பார்த்தார்.என்ன ஆச்சரியம் !ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது.வந்தது தாய்மானவர் என்பதை அவன் அறிந்தான் .



ரத்தத்தை நிறுத்தியது யார்?என்பதை அறிவேன் .சுவாமி !'உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் 'என்று பர்னாதன் வேண்டினான்.ஈசனும் காட்சி கொடுத்தார்.
"உனக்காகவே சாம்பல்லை உருவாக்கினேன் .அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என அழைக்கப்படட்டும் ".உன் நல் தவத்தால் விபூதி உருவானது 


.அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இதை பூசுபவர்களை  துஷ்ட சக்தி நெருங்காது .விபூதி என் ரூபம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார்.



               விபூதி பிள்ளையார்



இங்கே இருக்குற படம் மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலில் அமைத்துள்ள விபூதி பிள்ளையார் . இந்த  பிள்ளையாருக்கு நம் கையால்  விபூதி அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் .இவரை வணங்கினால் ,வாழும்  காலத்தில்பொருளும் ,பிறவா நிலையும் கிடைக்கும் என்பது
பக்தர்களது நம்பிக்கை .நீங்களும் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போனால்  பிள்ளையாரை தரிசனம் பண்ணுங்கள் .

விபூதியால் என்ன நன்மை ? என்று ராமன் அகத்தியரிடம் கேட்டார்.



பகை ,தீராத வியாதி ,மனநல பாதிப்பு ,செய் வினை பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பூசினால்
அனைத்தும் விலகும் என்று உபதேசம் செய்தார்.


இனிமேல்,  விபூதி பூசும் போது அதன் பொருள் அறிந்து பூசுவீர்கள் !என்று நினைக்கிறேன். என்
பதிவு நிறைய பேர்களுக்கு ஆன்மீகச்  சிந்தனையை தூண்டும் என எண்ணி ,இந்த பதிவை முடிக்கிறேன்.

சர்வமும் சிவமயம் !  சகலமும் சிவனருள் !நடப்பதெல்லாம் ஈசன் செயல்!

பூஜையில் தேங்காய் தத்துவம்

*பூஜையில் தேங்காய் ஏன்?* 



பூஜை காலங்களில் தேங்காய் இன்றி பூஜை இல்லை. தேங்காய் இன்றி பூஜை செய்தால் பூஜையின் முழுத்தன்மை அடைவதில்லை. நம் முன்னோர் தான் தேங்காய் வைத்து பூஜை செய்யும் வழக்கத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். திருமணம், சடங்கு, பூப்படைதல், விழா, ஹோமம், கிரகபிரஷேம், கும்பாபிஷேகம், பூரண கும்பம் கொண்டு மரியாதை செய்தல்,இது போன்ற பல செயல் பாட்டில் தேங்காயைப் பயன் படுத்துகிறோம். தேங்காய் வடிவத்தில் மும்மலம் கருத்து உள்ளது. தேங்காய் ஓடு, நார் மனிதனின் உடல், தேங்காயின் உள்பகுதி வெண்மை உள்ள நிலை மனிதனின் மனம். தேங்காய் உள்ள நீர் மனிதனின் உயிர். பூஜை நேரத்தில் தேங்காயைப் படிப்படியாக களையும் போது அங்காரம் என்ற ஓடு நோறுங்க மனம் வெண்மையாக பிரகாசிக்கிறது. அதன் நீரை இறைவனுக்கு அர்பணிக்கப்படுகிறது. மனிதனின் உயிர் இறைவனுடன் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.

இறைவனுடைய திருக்காட்சியைக் காண மனிதனின் அகங்காரம் என்ற தேங்காய் ஓடு உடைத்தால் மனத்தூய்மை (தேங்காய் உள்ள வெண்மை) உருவாகி மனிதனின் உயிர் (நீர்) ஞான உணர்வு பெற்று இறைவனை தரிசிக்கிறது. மனிதனுக்கு இரண்டு கண்கள் மூன்றாவது கண் ஞானக்கண், இது போன்று தேங்காய்க்கு மூன்று கண் அமையபட்டுள்ளது. தத்துவக்குணத்துடன் சஞ்சலமில்லாமல் மனிதனின் ஞானக்கண்ணால் இறைவனை தரிசிக்கும் போது பக்தி உணர்வுகள் இதயம் உணர்கிறது.

சிதறு தேங்காய்

வழிப்பாட்டில் தேங்காயை தூள் தூளாக தரையில் அடிப்பது வழக்கத்தில் காணலாம். நான்கு திசைகளில் சிறும்படி தேங்காய் உடைப்பது சதுர் தேங்காய் வழிபாடு.  சிதறும் தேங்காய் துண்டுகள் பலரும் எடுத்துக்கொள்வது வழக்கம் இது போன்ற முறை குறிப்பாக விநாயகர் கோவிலில் காணலாம். சிதறும் தேங்காய் துண்டுகள் குழந்தை பிள்ளையாரின் பிரசாதம். இதன் காரணமாக என்னவோ சிதறும் தேங்காய் பகுகளைக் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

சிதறு தேங்காய் வழிபாட்டு தன்மையில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலை உணற முடிகிறது. ஏழை சிறுவர்கள் சிதறு தேங்காய் துண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலை மறைமுகமாக செய்யும் தர்மமாகும். அகங்கார மண்டை உடைய வேண்டும் அமுதமான அறிவுநீரை அடைய வேண்டும் என்பதுதான் சிதறு தேங்காய் வழிபாட்டின் தத்துவம்.

பூ விழுந்த தேங்காய் :-

கடவுளுக்காக உடைக்கிற தேங்காயில் பூ விழுந்தால் ரோக நாஸ்தி ஏற்படும் என்று சொல்வார்கள். சில சாஸ்திரங்கள் பொன், பொருள் சேர்க்கையான ஸ்வர்ண லாபம் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதனால் சாமிக்கு உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் நீங்கள் சந்தோஷத்தில் கூட துள்ளிக் குதித்து விளையாடலாம்.

கும்பத்தில் தேங்காய்:-

முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்து கொள்ளுங்கள். மனிதன் உயிர் வாழத் தேவையானது தண்ணீர். ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைகற்பூரம் முதலிய வாசனை திரவியங்களைப் போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து
பூஜிக்கிறோம்.

பித்தளை அல்லது தாமிர சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. அறிவியலாகச் சொல்வதானால், கடத்திகள். ஆங்கிலத்தில் conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவனின் உடலாக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் கொள்ளலாம். ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப்படுகின்றன. அறிவியல் ரீதியாகச் சொல்வதானால், குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்பவை போல.

மேலே மாவிலையைக் கொத்தைச் சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும், சில நாட்களில் அழுகியும் விடும். ஆனால், மாவிலை மட்டுமே குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே பசுமை மாறாமல் இருக்கும். அதற்கும் மேலான நாட்களிலும் சருகாக வேண்டுமானால் ஆகுமே தவிர, அழுகாது.

  சிலர் வீடுகளில் தலைவாசலில் தோரணமாகக் கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணம், மாதக்கணக்கில் மழை, வெயில் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு சருகாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் ஆனால், இந்த காரணத்தால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு பயன்படுத்தவில்லை; மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைத் தரவல்லது. மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயின் தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம்.

சரி, தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும்? மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் உண்டு. தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது ‘சோமசூர்யாக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள். அதாவது, வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயை தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம்.

(தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிய்த்துப்போடு என்று சொல்கிறோம்) கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால்கூட வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் இருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது.  வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பதால்தான் அது கும்பத்தில் கிரீடமாக வைத்துப் போற்றப்படுகிறது.

Friday, July 24, 2020

வாழ்க்கையில் முன்னேற இந்த 26 விதிகளைக் கடைபிடியுங்கள்

#இந்த 26 வார்த்தைகள்..!

எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்

A - Appreciation  
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour  
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise  
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression  
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego  
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive  
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness  
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty  
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex  
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy  
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness  
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk  
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding  
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral  
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation  
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience  
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness  
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness  
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness  
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting  
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate  
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary  
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound  
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox  
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield  
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero  
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்...

கீர்த்தி வாசன்...

அடுத்த பிறவியின் ரகசியம்

நீங்கள் செய்யும் தவறுக்கு அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் தெரியுமா? - அழிவில்லா கர்மா

நாம் தற்போது செய்யும் பாவங்களை யாரும் அறிந்திருக்கவில்லை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். நாம் செய்யும் நல்லது கெட்டவற்றை மேலே உள்ளவன் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான். நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே கர்மாவானது செயல்படுகிறது. அவ்வாறு நாம் பாவம் செய்தால் அந்த கர்மாவானது எவ்வாறு செயல்படுகிறது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

கர்மாவின் சட்டங்கள்

1. உங்களின் தற்போதைய வாழ்க்கையில் செய்யும் நல்லவை மற்றும் பாவங்கள் உங்களின் அடுத்த பிறவியைத் தீர்மானிக்கிறது சில நேரங்களில் கர்மாவின் சட்டங்கள் நம்மை மிகவும் கடுமையாக தாக்குவதாய் இருக்கும், அவை அதன் அறிவுக் கூர்மைக்கு உட்பட்டு இருக்கின்றன. இந்துப் புராணங்களில் கர்மா எவ்வாறு செயல்படுகிறது மற்றும் பாதிக்கிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளன.
2. கர்மா அடுத்த பிறவியைப் பாதிக்கிறது நம்முடைய தற்போதைய வாழ்க்கையில் கர்மாவின் பலன்கள் செயல்பட வேண்டும் என்று நாம் எவ்வளவு விரும்பினாலும், அது அவ்வாறு செயல்படாது. நம்முடைய இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் நல்லது மற்றும் கெட்டதைப் பொறுத்து இந்த வாழ்நாளிலேயே அதற்கான நேர்மறையான பலன்களையும் எதிர்மறையான முடிவுகளையும் அனுபவித்துவிட வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் அது எப்போதும் நடக்காது. இன்று நாம் செய்யும் எல்லாமே அடுத்த பிறவிக்கான சேமிப்பு கணக்கு தான். அந்த சேமிப்புக்கு வட்டியும் முதலுமாய் அடுத்த பிறவியில் அனுபவிப்போம். அதுவே கர்மா.

3. பண்டைய நூல்கள் இந்து மதத்தின் பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நமது வாழ்வானது தற்போதைய வாழ்க்கையில் நமது கர்மாவினால் முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்பது மட்டுமல்லாமல், நமது கடந்த கால வாழ்க்கையில் இருந்தும் என்னென்ன செய்திருந்தோம் என்பதைக் கண்காணிக்கப்பதாகவும் அமைகிறது.
4. பிறக்கும் முறை பிறக்கும் முறை என்றால் மனிதனாகிய நாம் பிறப்பதற்குத் தயாராவதற்கு முன்பு நம்முடைய முந்தைய பிறப்பின் வாழ்க்கையில் நாம் செய்த நல்லது மற்றும் கெட்டவற்றைக் கணக்கிட்டு அதன் வினைகளாக இந்த கர்மாவானது செயல்படுகிறது. அந்த கர்மா தான் அடுத்த பிறவியில் ஒருவர் எப்படி பிறக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.

5. நல்ல கர்மா மற்றும் கெட்ட கர்மா நமது தற்போதைய வாழ்க்கை கடந்த கால கர்மாவின் நிழல்களின் கீழ் தொடர்ந்து இயங்குகிறது. இந்த வாழ்க்கையில் நாம் தொடர்ந்து கெட்டதைச் செய்தும், தீங்குகள் பெரிதாக நிகழாமல் நாம் இன்னும் மகிழ்ச்சியான கட்டங்களை அனுபவிக்கிறோம் என்றால் அது நம் முந்தைய வாழ்க்கையில் செய்த நல்ல செயல்களின் பயனாக நமக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல கர்மாவின் விளைவாக இருக்கலாம். தற்போது செய்யும் தீய வினைகளுக்கு அடுத்தப் பிறவியில் கொடிய வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும்.

6. முனிவர் வியாசர் பண்டைய முனிவர் மகரிஷி வேத வியாசர் மனிதர்களுக்கு உயரிய அறிவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேதங்களையும் புராணங்களையும் இயற்றி அருளினார். அவருடைய போதனைகள் நமக்கு எப்போதும் அறிவொளி அளித்த வண்ணம் உள்ளன. இன்று நாம் பிறப்பு மற்றும் அவதாரங்களைப் பற்றிய அறிவைப் பெற்று ஆராய்வதற்கு அவரே காரணம்.

உயிரினங்கள் பிறக்கும் விதி கர்மா

7. 84000 மறுபிறப்புகள் ஒரு ஆத்மா மனிதனாகப் பிறப்பதற்கு 84000 பிறப்புகளைச் சிறிய செல்களின் மூலமாக பூச்சிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வழியாக பிறக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக அறியப்படுகிறது.
8. இந்து மதத்தில் பிறப்பின் வகைகள் ஒரு ஆன்மா மனிதனாக பிறந்த பிறகு அவர்களின் நல்ல கர்மா மற்றும் தீய பாவங்களின் அடிப்படையில் தன்னுடைய அடுத்த பிறப்பானது தீர்மானிக்கப்படுகிறது என்று முனிவர் வியாசர் விளக்குகிறார். இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் தான் நீங்கள் ஒரு பூச்சியாகவோ, விலங்காகவோ அல்லது மனிதனாகவோ மறுபிறவி எடுக்கும் முறை தீர்மானிக்கப்படுகிறது.

9. கருட புராணம் கருட புராணத்தில் ஒரு ஆத்மா மனிதனாகப் பிறக்க அனுமதிக்கப்பட்டவுடன் கருப்பையில் தங்கி இருக்கும் ஒன்பது மாதங்களும் இந்த கர்மாவின் அருளை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து கடவுளுக்கு சேவை செய்வதாக அந்த ஆன்மா உறுதியளிக்கிறது. ஆனால் பிறந்த பிறகு மனிதன் மறந்து பாவங்களைச் செய்கிறான்.

10. உலகில் குற்றங்கள் கொள்ளை, மோசடி, துரோகம், கொலை மற்றும் ஒருவரை காயப்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றங்களைப் பற்றி முனிவர் வியாசர் விளக்குகிறார். ஆன்மாவின் தலையெழுத்து இந்த பாவங்களைப் பொறுத்து அமைகிறது. எந்த பாவம் எந்த பிறப்பில் பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

11. பாவம் 1 ஒரு பெண்ணுடன் வலுக்கட்டாயமாக உறவை மேற்கொள்ளும் எவரும் நரகத்தில் பயங்கரமான தண்டனைகளின் விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த பிறவியில் அவர்கள் ஓநாயாகவும், பின்னர் அதற்கு அடுத்த பிறவியில் குள்ளநரியாகவும், பின்னர் அதற்கு அடுத்த பிறவியில் கழுகாகவும், அதற்கு அடுத்த பிறவியில் பாம்பாகவும் இறுதியாக ஒரு ஹெரான் கொக்காகவும் பிறந்து துன்பங்களை அனுபவிப்பர்.

புராணங்களில் மன்னிக்க முடியாத பாவங்கள்

பாவம் 2
குடும்பத்தில் உள்ள பெரியவர்களையோ அல்லது வெளி உலகில் உள்ள பெரியவர்களையோ அவமதிப்பதும் அவர்களை சங்கடப்படுத்துவதும் மற்றும் பொது வெளியில் அவர்களை தாழ்த்துவதுமாக செய்பவர்கள் அடுத்த பிறவியில் காகமாகப் பிறப்பார்கள். குறைந்தது 10 ஆண்டுகளாவது இந்த பிறப்பில் அவர்கள் வாழ வேண்டியிருக்கும்.

பாவம் 3
தங்கத்தைத் திருடுவது புராணங்களில் மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. ஒரு நபர் அந்த பாவத்தைச் செய்தால் அதன் கடுமையான விளைவை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்பவர் தனது அடுத்த பிறவியில் ஒரு பூச்சியாக பிறப்பார் என்று முனிவர் வியாசர் கூறுகிறார். மேலும் வெள்ளியைத் திருடும் ஒருவர் அடுத்த பிறவியில் புறாவாகப் பிறப்பார்.

பாவம் 4
ஒருவர் திருடுவதோ மற்றவரின் துணிகளைப் பறிப்பதோ அல்லது ஒருவரைத் சீர்குலைப்பதோ செய்பவராக இருந்தால் அந்த பாவங்கள் கடுமையான தண்டனைக்களுக்குக் காரணமாகின்றன. அவர்கள் அடுத்த பிறவியில் கிளியாகப் பிறப்பார்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் கூண்டு வழியாக வாழும் கூண்டு கிளியாகவே வாழ வேண்டியிருக்கும்.

பாவம் 5
ஒருவரின் வாழ்வைப் பறிப்பது மற்றும் ஒருவரைக் கொலை செய்வது மிக கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த நபர் அவரின் அடுத்த பிறவியில் கழுதையாகப் பிறப்பார் என்று முனிவர் வியாசர் கூறுகிறார். அந்த விலங்கு தன் வாழ்நாள் முழுவதும் அதன் உரிமையாளரின் சுமைகளைத் தாங்கி, இரவும் பகலும் அதிக எடையைச் சுமந்து வாழ வேண்டியிருக்கும்.🙏

Thursday, July 23, 2020

பூஜை அறையில் என்னென்ன செய்ய வேண்டும்



வீட்டில் பூஜை அறையில்

தெய்வப் படங்களுடன்

மறைந்த மூதாதையர்

படத்தை சேர்க்காமல்

தனியாக வைத்து

வணங்கினால், சிறந்த

பலன் கிடைக்கும்

சனி பகவானுக்கு வீட்டில்

எள் விளக்கு ஏற்றக் கூடாது

ருத்ரம், சமகம்

போன்றவற்றை வீட்டில்

காலையில் தினமும் கேட்பது

நல்லது

நாம் வீட்டில் கடவுளை

வணங்கும்போது

நின்றவாறே தொழுதல்

குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில்

விளக்கேற்றக்கூடாது

தூங்குபவர்கள்

எழுந்த பிறகுதான்

விளக்கேற்ற வேண்டும்

தூங்குபவர்களின் தலைக்கு

நேராக தேங்காய் உடைக்கக்

கூடாது

பூஜையின் போது

விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்

பூஜை அறையில் வழிபாடு

முடிந்ததும் இடது நாசியில்

சுவாசம் இருக்கும்போது

பெண்கள் குங்குமம் இட்டுக்

கொண்டால் மாங்கல்ய

விருத்தி ஏற்படும்

பூஜை அறையில்

தெய்வப்படங்களை

வடக்குப் பார்த்து வைத்தால்

சாபமுண்டாகும்

விரத தினத்தில் தாம்பூலம்

தரித்தல், பகல் உறக்கம்,

தாம்பத்திய உறவு

சண்டையிடுதல் கூடாது

ஈர உடையுடன்

ஓராடையுடனும்

தலைகுடுமியை

முடியாமலும், தலையிலும்

தோளிலும் துணியை

போட்டுக் கொண்டோ

கட்டிக் கொண்டோ வழிபாடு

செய்யக் கூடாது

ஈர ஆடையுடன் வழிபட

நேருமானால் ஈர உடையை

ஓம் அஸ்த்ராய பட் என்ற

முறை கூறி உதறி

உடுத்தலாம்

சுப்ரபாதத்தை தினமும்

காலை வேளையில்

மட்டுமே கேட்க வேண்டும்

அவ்வாறு கேட்க முடியாத

நிலையில் மாலையில்

கேட்பது அவ்வளவு

உசிதமானதில்லை

எனப்படுகிறது

பகவானின் மந்திரத்தை

சொல்லி பிரார்த்திக்க

தெரிந்தவர்களுக்கு

எப்போதும் எல்லாமே

வெற்றிதான். காலையில்

விழித்தவுடன்

நாராயணனையும்

இரவு தூங்கு முன்

சிவபெருமானையும்

நினைக்க வேண்டும்

கஷ்டங்கள் நீங்க

நினைத்தது நடக்க எளிய

வழி தீபம் ஏற்றுவதுதான்

தீப ஒளி இருக்குமிடத்தில்

தெய்வ அனுக்கிரகம்

நிறைந்திருக்கும் வீட்டில்

எங்கெல்லாம் முடியுமோ

அங்கெல்லாம் தீபம் ஏற்றி

வைக்கலாம்

தீபத்தில் உள்ள

எண்ணெய் தான் எரிய

வேண்டுமே தவிர திரி

அல்ல, திரி எரிந்து

கருகாமல் பார்த்துக்

கொள்ள வேண்டும்

விளக்கை ஏற்றும்போது

வீட்டில் பின் வாசல்

இருந்தால் அதன் கதவை

சாத்தி விட வேண்டும்

காலையில் நின்று

கொண்டு செய்யும்

ஜெபத்தால் இரவில் செய்த

பாவமும், மாலையில்

உட்கார்ந்து கொண்டு

செய்யும் ஜெபத்தால்

பகலில் செய்த பாவமும்

தொலைகிறது

விளக்கு எரிந்து

கொண்டிருக்கும்

போது கைவிரலால்

எண்ணெயில் உள்ள

தூசியை எடுப்பதோ திரியை

தூண்டுதோ கூடாது

எரிந்து கொண்டிருக்கும்

தீபத்தை ஆண்கள்

அணைக்கக் கூடாது

உங்கள் தெய்வங்களை

வழிபடும் போது தையல்

உள்ள உடைகளை அணியக்

கூடாது,

ஆடிமாத அம்மன் சிறப்பு வழிபாடு

ஆடி மாதம், தினம்தோறும் அம்மன் வழிபாட்டை இந்த முறையில் செய்து பாருங்கள்! 

எப்படிப்பட்ட கஷ்டத்திற்கும் கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்கும்.

எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத கஷ்டத்தையும் தீர்த்துவைக்கும் சக்தி கொண்டவள் அம்பாள்.

 அந்த அம்பாளுக்கு மிகவும் சிறப்புமிக்க மாதம் தான் இந்த ஆடி மாதம். அம்பாளின் மனம் குளிர, ஆடி மாதம் 32 நாட்களும், அம்மன் வழிபாட்டை, இப்படி செய்து வந்தோமேனால், நமக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பெரிய பிரச்சினைக்கும், ஆடி மாத முடிவிலேயே நல்ல பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அம்மன் மனதை குளிரவைக்கும் சுலபமான வழிபாட்டு முறையை நம் வீட்டில், அன்றாடம் எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களை கூட, நாம் அம்பாளின் காலடியில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றோம். அவள் செவிகளில் விழுந்துவிட்டால், கஷ்டங்கள் காணாமல் போய்விடும். ஆடி மாதம், முதல் தேதியிலிருந்து உங்களது வேண்டுதலை அம்பாளிடம் வைக்க தொடங்குங்கள். காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் வீட்டு பூஜை அறையில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு, அரளிப்பூவை சாத்தி, அம்மனுக்கு அலங்காரம் செய்யுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு எந்த பூ கிடைக்கிறதோ அதை வைத்து அலங்காரம் முடித்துவிடுங்கள்.

ஒரே ஒரு, நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, பூஜை அறையில் வைத்து விட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை அம்பாளின் முன் வைத்து விடுங்கள். தீராத துன்பம் என்று உங்களுக்கு எது இருக்கின்றதோ அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முதலில் மனதார வேண்டிக்கொண்டு, பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

*மந்திரம்*

‘ஓம் சர்வ சக்தி தாயே போற்றி!’

ஒருவரி மந்திரம் தான்! ஆனால் சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஆடி மாதம் முழுவதும் காலையில் அம்மனை மனதார நினைத்து 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, உங்களது விரதத்தை தொடங்குங்கள். விரதம் என்றால் கடுமையான விரதம் இல்லை. ஒரு வேளை மட்டும், காலை ஒரு வேளை மட்டும், உணவு அருந்தாமல், பழம் பால் சாப்பிட்டுவிட்டு, இந்த விரதம் இருப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.

வீட்டில் மன கஷ்டம் இருந்தாலும், பண கஷ்டம் இருந்தாலும், ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தாலும், திருமண தடை இருந்தாலும், சண்டை சச்சரவுகள் இருந்தாலும், அதை அம்பாளிடம் மனதார சொல்லி, அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். கட்டாயம் ஆடி மாதம் முடிவதற்குள் உங்களுடைய பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வு, ஏதாவது ஒரு ரூபத்தில் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதேபோல், ஆடி மாதம் தொடங்கிய அந்த நாளிலிருந்தே உங்கள் வீட்டு வாசலில் கொஞ்சம் வேப்பிலையை சொருகி வையுங்கள். ஆடிமாதம் அதிகப்படியான காற்று வீசும் என்பதால், அந்த காற்றின் மூலம் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் எதுவும் நம் வீட்டிற்குள் நுழைய கூடாது என்பதற்காகத்தான் ஆடி மாத அம்மன் வழிபாட்டில், நம் முன்னோர்கள் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஆகவே, உங்கள் வீட்டிலும் ஆடி முதல் நாள் அன்று, நிலவாசலில் வேப்பிலை வைக்க மறக்காதீர்கள்!

Wednesday, July 22, 2020

அறிவோம் ஆன்மீகம்

🙏 *அறிவோம் ஆன்மீகம் ........ !!* 🙏

🌚1) கருப்பு எள் கொண்டு வசிக்குமிடத்தில் ஹோமம் நடத்தக் கூடாது !! 

💧2) ஈரத்துணியை உடுத்திய நிலையில் வழிபாடு செய்யவோ , உணவு உண்ணவோ கூடாது !! 

👣3) கால்களை மடித்து அமர்ந்த நிலையில் , இடது கையை தரையில் ஊன்றியபடி உணவு உண்ணக் கூடாது !! 

💩4) திருவிழாவில் பவனி வரும் தேரின் வடக்கயிற்றை கால்களால் மிதிக்கவோ , தாண்டிச் செல்லவோ கூடாது !! 

🔥5) பூஜை , ஹோமம் நடக்கும் போது யாகசாலையைவிட உயரமான இடத்தில் நாற்காலி போன்றவை பயன்படுத்தி அமர்வது கூடாது !! 

🏯6) கோவில் எல்லைக்குள் சுவாமியைத்தவிர மற்ற யாரையும் வணங்கக்கூடாது !! 

🐚7) மார்கழி மாதம் அதிகாலையில் வாசலில் கோலமிடாமலும் , வீட்டில் விளக்கு ஏற்றாமலும் , கோவிலுக்குச் செல்வது கூடாது !! 

🩸8) சனீஸ்வரர் தவிர பிற தெய்வங்களுக்கு கருப்பு நிற வேட்டி , புடவை சாத்தக்கூடாது !! 

🎗️9) வழிபாடு முடிந்ததும் , ஆலயத்தில் அமரும்போது , கோவிலிலுள்ள தெய்வங்களுக்கு , முதுகைக் காட்டியபடி அமர்தல கூடாது !! 

💦10) முந்தைய நாள் எடுத்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் , நைவேத்யம் செய்யக்கூடாது !!

எந்திரம் என்றால் என்ன? எந்தித்தர வழிபாடு என்ன?



யந்திரம்

ஓர் சக்தி வேலைசெய்வதற்கு வேண்டிய உருவஅமைப்பு யந்திரம்.
யந்திரம் இயங்குவதற்கு சக்தி தேவை.இந்த சக்தி பிராணசக்தி மூலம் கிடைக்கிறது.
பிராணசக்தி என்பது மந்திரத்தை உச்சரிப்பவர்களிடமிருந்து வருகிறது.
பிராணசக்தியை உருவாக்குபவர் தவயோகியாக,புனிதமானவராக இருக்கவேண்டும்.
பிராணசக்தி இல்லாமல் உருவாக்கப்படும் யந்திரங்கள் பலன்தராது
-
மந்திரம்,தந்திரம்,யந்திரம் என்று மூன்று இருக்கிறது.
மந்திரம் என்பது சக்தியை உருவாக்குதல்
தந்திரம் என்பது மந்திரத்தின் மூலமும் பல்வேறு பயிற்சிகளின் மூலமும் உருவான சக்தியை தன்னிடம் சேகரித்தல்.
யந்திரம் என்பது  உருவான சக்தியை தன்னிடம் சேமிக்காமல் வெளிப்பொருளில் சேமித்தல்.
உதாரணமாக சிலைகள்,தகடு,தாயத்து போன்றவை. மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரிபோல
இந்த யந்திரங்களில் உள்ள சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பலன் தரும்.
-
யந்திரத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் எவை?
-
வடிவங்கள்.
எழுத்துக்கள்.
எண்கள்.
-
யந்திரத்தின் வடிவங்கள் அதன் முக்கியத்துவம்
-
மேல் நோக்கிய முக்கோணம் - நெருப்பு தத்துவம்.
கீழ் நோக்கிய முக்கோணம் - நீர் தத்துவம்.
சதுரம் - பூமி தத்துவம்.
வட்டம் - காற்று தத்துவம்.
நட்சத்திரம் அல்லது மேல் நோக்கிய முக்கோணம் மற்றும் கீழ் நோக்கிய முக்கோணம் இணைவு - ஆகாய தத்துவம்.

தத்துவம் என்று இங்கே குறிப்பிடுவது ஐம்பூதங்களின் குறிப்பிட்ட பிராண அதிர்வை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

தாமரை இதழ் போன்ற வடிவம் - சக்தியை சுத்தமான நேர்மறை பிராணசக்தியாக மாற்றம் செய்ய. 
அவை இரண்டு வகைப்படும்.
வெளிமுகமான தாமரை இதழ் - யந்திரத்திலுள்ள சக்தியை வெளியிட.
உள்முகமான தாமரை இதழ் - யந்திரத்திற்கு வெளியே உள்ள சக்தியை யந்திரத்திற்குள் கொண்டு வர.
பிரபலமானது ஶ்ரீசக்ர யந்திரம்.ஸ்ரீ யந்திரம், சுதர்ஸ்ன யந்திரம் 
-
யந்திரத்தை கவனித்தோம் எனில் பல கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வட்டங்கள் அதில் காண முடியும்.
-
முக்கோணம் :
-
சக்தியின் மூல வடிவம் முக்கோணம். பரம்பொருளின் வடிவம் வட்டம் . அப்பரம்பொருள் ரூபமாக மாற்றம் அடையும் பொழுது எடுத்துக்கொள்ளும் வடிவம் முக்கோணம். மூன்று தன்மையை உள் அடக்கியது முக்கோணம். 
அவை படைத்தல் - காத்தல் -அழித்தல். 
அறம் - பொருள் - இன்பம், ரஜோ - தமோ - சாத்வீக குணங்கள், இட -பிங்கள -சூஷ்ம நாடிகள் என அனைத்தும் பரம்பொருள் எடுத்துக்கொண்ட சக்தி வடிவங்களாகும். இடத்திற்கு ஏற்றதுபோல இந்த முக்குணங்கள் செயல்படும். முக்கோணங்களை மேல் நோக்கிய முக்கோணம், கீழ் நோக்கிய முக்கோணம் என இரு வகை படுத்தலாம்.

மேல் நோக்கிய முக்கோணம் ஆண் தன்மையானது. கீழ்நோக்கிய முக்கோணம் பெண் தன்மையானது.

இதை சிவ மற்றும் சக்தியின் வடிவம் என கூறலாம். இவை இரண்டும் இணைந்த வடிவம் ஒர் போல காணப்படும். இவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ சக்தி வடிவங்களாகும். இந்த இரு கோணம் இணைந்தவுடன் பல முக்கோண அமைப்புகள் அதன் உள்ளே தோன்றுவதை காணலாம்.
-
எழுத்துக்கள்.
-
எழுத்துக்கள் என்பது மந்திரங்கள் உதாரணமாக சிவ மந்திரங்கள் அல்லது முருகன் மந்திரங்கள், குறிப்பாக கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தங்களுக்கு ஏற்ப மந்திரங்கள் செப்பு தகட்டில் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணமாக " நமசிவய " என்ற சிவ மந்திரத்தை எடுத்துக்கொள்வோம்.

ந - மண் தத்துவம்.
ம - நீர் தத்துவம்.
சி - நெருப்பு தத்துவம்.
வ - காற்று தத்துவம்.
ய - ஆகாய தத்துவம்.
தத்துவம் என்பது இங்கே குறிப்பிட்ட அந்த பூதத்தின் பிராண சக்தி அதிர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எண்கள்.
-
பொதுவாக கோவிலில் செம்பு தகடு பதிக்கப்படும் யந்திரங்களில் எண்கள் இடம்பெறாது.
உலகியலில் பண வரவுக்காக ஏற்படுத்தப்படும் யந்திரங்களில் நாம் எண்களை காணலாம்.
-
நவகிரக சக்திகளையும் யந்திர வடிவில் நிலைப்படுத்த முடியும். இந்த யந்திரங்கள் பார்க்கும்பொழுது சிக்கலான அமைப்பை கொண்டதாக தெரிந்தாலும், வரைவதற்கு எளிதானது. இந்தியாவில் பல கோவில்கள் ஸ்ரீ யந்திரத்தின் மைய அமைப்பை போன்று காணப்படும். உதாரணமாக திருமலை திருப்பதியில் மூலஸ்தான கோபுரம் ஸ்ரீமேரு எனும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தை போன்று கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் பல கோவில்கள் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக அமைந்துள்ளது. இந்த கோவில்களை கருட பார்வையில் பார்த்தால் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக தெரியும்.

வரை படமாக வரைந்தால் மட்டும் யந்திரம் வேலை செய்யும் என நினைக்காதீர்கள். சக்தியூட்டுதல் எனும் செயல்மூலம் யந்திரம் ஆற்றல் பெறவேண்டும். மந்திர உச்சாடனம், பூஜா விதி மற்றும் ஆற்றல் நிலைபடுத்தும் விதி மூலம் யந்திரம் மாபெரும் பிரபஞ்ச சக்தியை பெற்று செயல்பட துவங்கும்.

யந்திரம் வரைந்து அதில் சக்தியை நிலைபடுத்துவது எல்லோராலும் முடியாது. இதை சிறந்த யந்திர சாஸ்திரம் கற்றவர்களே செய்ய முடியும். 
தற்சமயம் பலர் யந்திரம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக சில கோடுகளை வரைந்து கொடுக்கிறார்கள். இதை வாங்கி உபயோகிப்பவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபத்தில் சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்கள். இதனால் எந்த பலனும் ஏற்படுவதில்லை..
-
யந்திரத்தை தாமிரம் போன்ற உலோகத்தில் வரைவது முக்கியம். மின்சாரம் கடத்தும் பொருட்களில் தாமிரம் முதல் இடத்தை பெறுகிறது. நமது ரிஷிகள் தாமிரத்தை யந்திர சாஸ்திரத்திற்கு பயன்படுத்திய காரணம் இதற்கு அற்றல் கடத்தும் திறன் அதிகமாக இருப்பதால் தான். மேலும் தங்கம் , தாமிரத்தை கட்டிலும் ஆற்றல் கடத்துவதில் சிறந்தது என்றாலும் பொருளாதார ரீதியில் பயன்படுத்த முடியாது. யந்திரம் வரையும் பொழுது சிறிது தவறு செய்தாலும் யந்திரம் முழுவதும் வீணாகிவிடும். தேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் அமைக்கும் யந்திரம் முழுமையான செயல்களை செய்யும்.
-
கோவில்களின் கருவறையில் மூல விக்ரஹம் அமைப்பதற்க்கு முன்னால் அதன் அடியில் யந்திரதை ஸ்தாபனம் செய்வார்கள். இந்த இறை சக்தியே விக்ரகம் மூலம் பக்தர்களை வந்தடைகிறது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யந்திரம் மீண்டும் மீண்டும் சக்தியூட்டம் பெறுகிறது.
-
-
இத்தகைய எந்திரங்கள் பொதுவாக 1.மூல எந்திரம், 2.பூஜா எந்திரம், 3.தாபன எந்திரம், 4.தாரண எந்திரம், 5.ரட்சா எந்திரம், 6.பிரயோக எந்திரம், 7.பிரயோகார்த்த பூசன எந்திரம், 8.சித்திப் பிரத எந்திரம், 9.முத்தொழில் சக்கரம், 10. ஐந்தொழில் சக்கரம், 11.ஐம்பூத சக்கரம், 12.ஏரொளி சக்கரம், 13. சட்கர்ம சக்கரம், 14.அஷ்டகர்ம சக்கரம், 15.அறாதாரா சக்கரம், 16.சிவ சக்கரம், 17.சிவகோணம், 18.சக்தி சக்கரம், 19.சக்திகோணம், 20.கால சக்கரம், 21.ராசி சக்கரம், 22.சர்வதோபத்ர சக்கரம், 23.கசபுட சக்கரம், 24.முக்கோண சக்கரம், 25.சதுரசிர சக்கரம், 26.ஐங்கோண சக்கரம், 27.அறுகோண சக்கரம், 28.எண்கோண சக்கரம், 29.நவகோண சக்கரம், 30.விந்துவட்ட சக்கரம், 31.ரவி சக்கரம், 32.பிறைமதி சக்கரம், 33.நாற்பத்து முக்கோண சக்கரம், 34.சம்மேளன சக்கரம், 35.திருவம்பல சிதம்பர சக்கரம், 36.பதினாறு பத சக்கரம், 37.இருபத்தைந்து பத சக்கரம், 38.முப்பத்தாறு பத சக்கரம், 39.என்பதொரு பத சக்கரம், 40.அறுபத்தி நான்கு பத சக்கரம், முதலான பல சக்கரங்களும் அதுமட்டும் அன்றி ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே சிறப்பான சக்கரங்கள் பல உள்ளன.அவை 41.வாலை சக்கரம், 42.புவனை சக்கரம், 43.திரிபுரை சக்கரம், 44.புவனாபதி சக்கரம்,45.சாம்பவி மண்டல சக்கரம், 46.வயிரவ சக்கரம், 47.நவாக்கரி சக்கரம், 48.நவகிரக சக்கரம், 49.சுதர்சன சக்கரம், 50.விஷ்ணு சக்கரம், 51.நரசிம்ம சக்கரம், 52.சரப சாளுவ சக்கரம், 53.விநாயக சக்கரம், 54.வீரபத்திர சக்கரம், 55.சண்முக சக்கரம், 56.மிருத்யுஞ்சய சக்கரம், 57.நீலகண்ட சக்கரம், 58.சண்டி சக்கரம் 59. துர்க்கை சக்கரம் 60.இராமர் சக்கரம் 61.சீதா சக்கரம் 62.லக்ஷ்மி சக்கரம், 63.அனுமார் சக்கரம், 64.ஸ்ரீ சக்கரம்  முதலிய பல சக்கரங்களும் உள்ளன 
-
கோவிலில் கடவுளின் சிலைக்கு அடியில் செப்புத் தகடு வைப்பது ஏன்?
-
முன் காலத்தில் இருந்த யோகிகள், மகான்கள், ஆன்மிகவாதிகள் தாங்கள் உணர்ந்த ஆன்மீக சக்தி அதிர்வை பொது மக்களுக்கும் பயன்படும் விதம் ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தினர். அதுவே அதிக அளவு பிராண சக்தியை தன்னகத்தே கொண்டுள்ள கோவில்கள்.

பழமையான பண்டைய கோவில்கள் என்பது எப்பொழுதும் ஆன்மீக சக்தி மையங்களாகவே இருந்தது. அந்த நேரத்தில் வழிபாடுகள் என்பது பெரும்பான்மையாக இல்லாமல் இருந்தது பின்னர் பக்தி மார்க்கம் மிகுந்த அளவில் மக்களிடம் பிரபலம் அடைந்தபோது வழிபாடுகள் பெருமளவில் கோவிலில் நடைபெற ஆரம்பித்தது.

இன்றளவும் எழுதாத விதியாக நாம் கோவிலுக்கு சென்றால் சிறிது நேரம் அமர்ந்து அந்த கோவிலில் உள்ள சக்தி அதிர்வுகளை நாம் உள்வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று கூறியது நடைமுறையில் உள்ளது.

தனி ஒரு மனிதன் யோகா, தியானம் போன்று தன் கைகளில் முத்திரைகள் வைத்து அவனுடைய பிராண சக்தியை அதிகரிக்க முடியும்.

பொதுமக்களுக்கும் இது போன்ற பிராணசக்தியை அவர்களுக்கும் யோகா, தியானம் போன்ற வகைகள் தெரியாத போதும் பலன் அடையும் வகையில் பண்டைய யோகிகள், முனிவர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்படுத்திய ஒரு அமைப்பே கோவிலாகும்.

உலகத்தில் பல இடங்களில் ஆன்மீகம் பரவலாக நடந்தாலும் நம் நாட்டில் காலம்காலமாக தொன்றுதொட்டு பல நபர்கள் பல தலைமுறை தலைமுறையாக ஒரே நோக்கமாக ஆன்மீகத்தில் இருந்துள்ளனர். இது போல உலகத்தில் வேறு எங்கும் நடைபெறவில்லை. அதன் காரணமாக இங்கே பலருக்கு உயர்வான பிராணசக்தியை நிலைநிறுத்தி வைக்கும் கோவில் கட்டும் தொழில்நுட்பம் தெரிந்துள்ளது.
முறையாக பிராணசக்தியை நிலைநிறுத்திய கோவில்களில் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் இருப்பது அதிசயத்தக்க ஒன்றாகும்.
-
இது நிகழ்வதற்கு உறுதுனையாக இருப்பது யந்திர சாஸ்திரம் மூலமாக சக்தியை நிலை நிறுத்தி வைக்கும் தொழில்நுட்பம் தான்.
நவீன அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் பெரும்பான்மையாக 100 லிருந்து 150 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மந்திரம் என்பது குறிப்பிட்ட பிராணசக்தி அதிர்வுள்ள எழுத்துக்கள்.
தந்திரம்  தொழில்நுட்பம்.
-
செப்புத் தகடு வைப்பது ஏன் ?

உதாரணமாக யந்திரத்தை ஒரு துணியில் வரைந்தோம் என்றால் வெளியே எதிர்மறை சக்தி அதிர்வு இருக்குமானால் துணியும் எதிர்மறை சக்தியால் பாதிப்படையும். 
ஆனால் செம்பாலான ஒரு யந்திரம் இதைப் போன்ற எதிர்மறை பிராணசக்தி அதிர்வால் பாதிப்படையாது.

செம்பு என்பது ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை குறிக்கும் உலோகம்.
பஞ்சலோகம் என்பது குறிப்பிடப்பட்ட ஐந்து உலோகங்களால் உருவானது.
ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு பஞ்ச பூதத்தை குறிக்கும்.

மேலும்,

நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி எதையும் செம்பு உலோகம் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டது.

செம்பு மூலம் நேர்மறை சக்தியை தக்க வைத்தல் சிறந்த உதாரணம்.
நமக்கு நன்கு தெரிந்தது என்னவென்றால் நமது பல வீடுகளில் பெரியவர்கள் காசி, ராமேஸ்வரம் சென்று வந்த பின் வீட்டு பூஜை அறையில் இருக்கும் செம்பு தண்ணீர்.

எவ்வளவு காலமானாலும் அவை கெட்டுப் போகாமல் இருக்கும். தண்ணீரில் நுண்ணிய கிருமிகள் வராமலும் வேறு எந்த வழியிலும் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.

செம்பு மூலம் எதிர்மறை சக்தியை தக்க வைத்தல் உதாரணம்.
பூத சுத்தி [ பூஞ்ச பூதங்களை சுத்தி செய்தல், யோக கிரியை.] நான் செய்யும் பொழுது ஐந்து சிறிய அளவிலான செம்பு பாத்திரங்களில் உடம்பில் உள்ள எதிர்மறை சக்தியை அந்த பாத்திரங்களில் யோக கிரியைகள் வழியாக மாற்றி பின்னர் சில மந்திரங்கள் மூலமாக எதிர்மறையான சக்தியை நேர்மறை சக்தியாக மாற்றவதுண்டு.