Sunday, August 9, 2020

வாழ்க்கையில் எதையும் யோசித்து முடிவு செய்யுங்கள்

*அழகான வாழ்க்கை எது?*

 *ஒரு முடிவுக்கு வரும் முன்,*
*யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.*

*ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.*

 *முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.*

*ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.*

*காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.*

*ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.* 

*ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.*

*முதலாளி பார்த்தது, காவலாளிக்குத் தெரியாது.* 

*அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.*

*காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றார்.*

*இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையில் சுடச் சுட விதவிதமாக உணவு இருக்கும்.*

*அவரும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட்டு வந்தார்கள்.*

*இருந்தாலும் யார் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறார் என மனதுக்குள் ஒரு கேள்விக்குறி இருந்து கொண்டே இருந்தது.*

*திடீர் என ஒரு நாள் முதலாளி இறந்து விட்டார்.*

*வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும், வந்திருந்தனர்.* 

*அன்று அதே இடத்தில் உணவுப் பொதியைத் தேடினார்.* 

*உணவு இருக்கவில்லை.*

*ஒரு வேளை, பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது என நினைத்து அன்று விட்டு விட்டார்.*

*இரண்டாம் நாள் பார்க்கிறார்,* 
*அந்த இடத்தில் உணவுப் பை இல்லை.*
*மூன்றாம் நாள்,* 
*நான்காம் நாள் எனப் பார்க்கிறார்.*
*உணவுப் பை இருக்கவே இல்லை.*

*இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று.*

*உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்திக் கேட்டார்.*

*அதற்கு முதலாளியம்மா,*
*மகனிடம் கலந்தாலேசித்து சொல்வதாகச் சொன்னார்.*

*இது நாள் வரை போதுமானதாக இருந்தது,*
*இப்போது மட்டும் எப்படி பற்றாக்குறை ஏற்பட்டது என வினவினார்.*

*வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப் பை கதையையும்,* 
*அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் முதலாளியம்மாவிடம் எடுத்துச் சொன்னார்.*

*எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனது என்று முதலாளியம்மா கேட்டார்.* 

*அதற்கு அவரும் முதலாளி இறந்த நாளிலிருந்து எனச் சொன்னார்.* 

*முதலாளியம்மா ‘ஓ’ என அழத் தொடங்கினார்.* 

*இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு கூட எனக்கு வேண்டாம் அம்மா,* 
*நான் இங்கேயே வேலை செய்கிறேன்,*
*முதலில் நீங்கள் அழுவதை நிறுத்துங்கள் எனக் கூறினார்.*

*அதற்கு முதலாளியம்மா,*
*நான் அதை நினைத்து அழவில்லை.* 

*என் கணவர் தினமும் ஏழு நபர்களுக்கு உணவளித்து வந்தார்.* 

*அதில் ஆறு நபர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு விட்டேன்.* 

*ஏழாம் நபரைத் தான் இத்தனை நாளாய் தேடிக் கொண்டிருந்தேன்.*

*ஏழாவது நபர் நீ தான் எனத் தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன்.*
*இது அழுகை கூட இல்லை.* 
*என் இறைவனுக்கு நான் செலுத்தும் காணிக்கை என்றார்.*

*நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும்,*
*ஒரு நாள் கூட நம்மை ஏறெடுத்தும் பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என மலைத்தபடி நின்றார்.*

*அடுத்த நாளிலிருந்து, முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப் பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றார்.*

*காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு அவனது தந்தையைப் போலவே, பதில் சொல்லாமலேயே தினமும் செல்வார்.*

*ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடி வந்து உணவுப் பையை கையில் கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னார் காவலாளி.*

*அதற்கு அவரிடமிருந்து வழக்கம் போல எந்த பதிலும் வரவில்லை.*

*பொறுமையை இழந்த காவலாளி,*
*மிகவும் உரத்த குரலில்,*
*“நன்றி சொன்னால் பதில் கூற மாட்டீர்களா?”*
*என வருத்தத்துடன் வினவினார்.*

*திரும்பிப் பார்த்த அந்த சிறுவர்,*
*“நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எனக்குத் தெரியாது. காரணம்:*
*எனக்கும் என் தந்தையைப் போலவே காது இரண்டும் கேட்காது”*
*என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் போனார்.*

*நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது,*
*பார்த்த மாத்திரத்திலேயே அவர்களைத் தவறாக முடிவெடுத்து விடுகிறோம்.* 

*அடுத்தவர்களது நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத் தன்மையை அறியாமல் நாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.* 

*இந்தக் கதையிலிருந்து மூன்று விடயங்களை எடுத்துக் கொள்ளலாம்;*

*ஒன்று: எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே அதை நம்பி, நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ முடிவெடுக்கக் கூடாது.*

*இரண்டு: நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.* 

*நமக்கு மட்டும் தான் பிரச்னை.* 
*மற்றவர்களுக்கு இல்லை என நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது.*

*மூன்று: அவர்களுக்கு வசதியைக் கொடுத்த இறைவன்,*
*நமக்கு ஆரோக்கியத்தை அளித்துள்ளான்.*

*பல விஷயங்களில் நிறைவைத் தந்த இறைவன்,*
*சில விஷயங்களில் குறைவைத் தந்துள்ளான்.* 
*அதன் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான் என மனப்பூர்வமாக எண்ணி அவனுக்கு அனுதினமும் நன்றி செலுத்த வேண்டும்.*

*உடையையும்,*
*உள்ளத்தையும்,*
*எண்ணத்தையும்,*
*பார்வையையும்,*
*தூய்மையாக வைத்துப் பாருங்கள்,*

*வாழ்க்கை எவ்வளவு அழகானது எனப் புரியும்.*

*பணமும்,*
*வசதியும்,* 
*அழகும்,*
*மட்டுமே வாழ்க்கை அல்ல.*

*நேர்மையும், இறை வழிபாடும்,*
*எவ்வளவு மன அமைதியையும்,*
*சந்தோஷத்தையும் தரும் என்பதை,*
*அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.*

*முயற்சித்துத் தான் பாருங்களேன்.*

*உங்களுக்கும்,*
*உங்களின் அன்பு குடும்பத்தாருக்கும்,*
*எப்போதும் மன அமைதியும்,*
*சந்தோஷமும் என்றென்றும் நிலைக்க வேண்டும்.*

No comments:

Post a Comment