Sunday, August 16, 2020

ஆவணி மாதத்தின் சிறப்புகள்



ஆவணி மாத சிறப்புகள்

தெரிந்து கொள்வோம்

ஆவணி மாதத்தை சிங்க

மாதம் என்றும் வேங்கை

மாதம் என்றும் சித்தர்கள்

பேசுவர். மாதங்களுக்கு

எல்லாம் அரசன் என்று

பொருள். ஆவணி மாதத்தில்

சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி

செய்கிறார். சூரியனுக்கு

சிம்மவீடு பலமான வீடு

நமக்கு ஆத்மபலத்தைத்

தருபவர் சூரியனே. எனவே தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர் சஞ்சலமாக இருந்த

அர்ஜுனனுக்கு

ஆத்மபலத்தை அளிக்க

கீதையை உபதேசம் செய்ய

கிருஷ்ணர் இம்மாதம்

பிறந்தார்

மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம் வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது, இந்த ஆவணி மாத திருவோண

நட்சத்திரத்தில்தான்

காஞ்சி காமாட்சி ஆவணி

மூல தீர்த்தத்தில் நீராடுவது

மிகவும் புனிதமானது மோட்ச கதியை தரவல்லது இளையான்குடி மாறனார், குலச்சிறையார். திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள்

அவதரித்த மாதம் இந்த

ஆவணி மாதத்தில் தான்

ஆவணி மாதம் வரும்

ஞாயிற்றுக்கிழமை விரதம்

இருப்பது சிறப்பு வாய்ந்தது ஏனெனில் "ஞாயிறு என்றாலே"சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்

ஆவணியில் பிறக்கும்

குழந்தைகளுக்கு ஆன்மிக

அறிவைப் புகட்டினால்

அவர்கள் அதில் சிறந்து

விளங்குவர். சிலருக்கு

இயற்கையாகவே

ஆன்மிக அறிவு அமையும்

தேகநலனுக்காக

சூரிய நமஸ்காரப் பயிற்சி

எடுப்பவர்கள் ஆவணி

ஞாயிற்றுக்கிழமைகளில்

தொடங்குவது மிகவும்

விசேஷம். விவசாயம்

சிறக்கும் தமிழகத்தில்

ஆவணி மாதம்

விவசாயத்திற்கு

முக்கியமான காலமாகும்

ஆடியில் விதைத்து

ஆவணியில் கண்போல

பயிரை பாதுகாத்து

வளர்கின்றனர்

விவசாயிகள்

கிராமப்புறங்களில்

உள்ள தங்களது காவல்

தெய்வத்திற்கு ஆனி, ஆடி

மாதங்களில் படையல்

முடித்து, கொடைவிழா

நடத்தும் மக்கள்

இம்மாதத்தில் தாங்கள்

செய்யும் தொழிலுக்கு

அங்கீகாரம் கிடைக்கும் என

நம்புகிறார்கள்

மீனாட்சி ஆட்சி மதுரை

மீனாட்சி- சுந்தரேஸ்வரர்

கோயிலில் ஆவணி மூலத்

திருவிழா பெரிய அளவில்

கொண்டாடப்படுகிறது

கருங்குருவிக்கு உபதேசம்

செய்தது, நாரைக்கு முக்தி

கொடுத்தது, தருமிக்கு

பொற்கிழி அளித்தது

புட்டுக்காக மண் சுமந்தது

நரிகளைப் பரிகளாக்கிய

வளையல் விற்ற லீலை

என, மதுரை மண்ணில்

சிவபெருமான் நிகழ்த்திய

திருவிளையாடல்கள்

இந்த விழாவில்

இடம்பெற்ற. விழாவின்

முக்கிய நிகழ்ச்சிகள்

சொக்கநாதருக்குப்

பட்டாபிஷேகம்

செய்யப்படும்.

No comments:

Post a Comment