❇️ #காகம்_பற்றிய_சில
⚜️ #அபூர்வ_தகவல்கள் !
*****************************************
✳️ #காகம் அல்லது #காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியம் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை! பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய , இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்களை தொகுத்து சித்தர்களின் குரல் ஆழமாக பகிர்கிறேன். அவசியம் படித்து அனைவருக்கும் பகிருங்கள்.⚜️
❇️⚜️காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை! கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனம் சேறும்🌀
🌠⚜️கூச்ச சுபாவம் கொண்டது காகம்!. மனிதன் கூட விலங்குகள் போல #பொது_இடத்தில் #காதல் என்கின்ற பெயரில் #முகம்_சுலிக்கும் வகையில் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்துவான், அந்தரங்கத்தை படம் பிடித்து வியாபாரம் செய்வான்! ஆனால் காகம் யாருக்கும் தெரியாமல் தான் உடல் உறவு வைத்துக் கொள்ளும்! 🌀
✳️❇️ #பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் #குளித்துவிட்டுதான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது காகம்.🌀
✳️⚜️உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற #சுயநலம் சிறிதும் இல்லாத பறவை! உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.🌀
🍼சிறந்த தாய்! காக்கைக்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும்!, #தெரிந்தும்_குயிலின் முட்டையை அடை காக்கும்! குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே #பறக்கும்_வரை உணவளித்து பராமரிக்கும்! "உலகில் மிகச்சிறந்த #மாற்றந்தாய் #காகம் தான் என்பதை உங்கள் அனுபவத்தில் உணரலாம்!🌀
🙏தங்கள் இனத்தில் ஏதாவது #காக்கை_இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது. மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான் ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை. ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது. 🌀
⚜️ செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற் அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.🌀
🌀குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து ஏழு ஒன்பது என்ற கணக்கி கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா………………….கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள் அன்னங்களை சுவைக்கும். அப்படி சுவைக்கும்போது அந்த காக்கைகள் கா…………………கா........ என்ரு கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டு சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். 🌀
⚜️🌀இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம் பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.
⚜️ #காக்கையிடம்_உள்ள_தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது. எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.
🧑🤝🧑 #எமனும்_சனியும்_சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா……………….கா…………. என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு. காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.🌀
⚜️எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான் எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.🌀
🙏#தமிழர்களுக்கும்_காகத்துக்கும் உள்ள தொடர்பு:-
*********************************************************
ஒவ்வொரு நாளும் #பழந்தமிழர் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் #முதல்_பங்கு #காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. 🌀
⚜️ #காகம்_கரைதல் வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில் இருந்தே இருப்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது!🌀
👪#ஒற்றுமையுடன்_வாழ்வதற்கு உதாரணம் காக்கை அதனால் விருந்தாளிக்கு உணவு பரிமாறுவது போல் அதற்கு வாழை இலையில் உணவு வைப்பார்கள். அந்த உணவை காக்கைகள் சாப்பிட்டுச் சென்றதும் பெண்கள் அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. காக்கையின் இந்த குணமானது கூடி வாழ்வதின் சிறப்பினை தமிழர்களுக்கு உணர்த்த குறிப்பிடப்படுவதும் உண்டு.🌀
🌀⚜️🙏சங்க இலக்கிய பாடல்:-
************************
காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல் – சால
உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்.
காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 6 விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் மேலே சொன்ன பாடலில் அழகாகச் சொல்லுகின்றனர்:
1.காலை எழுந்திரு.
2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்).
3.மாலையிலும் குளி.
4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு..
5.கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை).
6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).
தமிழ் வேதமாகிய திருக்குறளில்
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள” (குறள் 527)
#காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும் என்கிறார் வள்ளுவர்.
#காக்கையை பற்றி வேறு ஒரு இடத்தில் “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள் 481)
#பொருள்:-
பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
🙏#பஞ்ச_தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், #மஹாபாரதத்தில் அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு காக்கைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் குறிப்பு உள்ளது.
No comments:
Post a Comment