Thursday, August 13, 2020

சிவனே பாவங்களை கரைப்பதில் முதல்வர்

🕉️“நம் பாவங்களைத் தான் வாங்கிக் கொள்பவன் ஈஸ்வரன். 🔯

🕉️அவன் தலையில் சந்திரன் இருக்கிறான். 
சந்திரனை விடப் பாவம் செய்தவர் யார்? அவனையே தலையில் சுமக்கும் சிவன், நம்மையெல்லாம் ஏன் காப்பாற்ற மாட்டான்? 

🕉️சிவனை பூஜிப்பது மிக சுலபம். இன்னும் சொல்லப்போனால் செலவில்லாதது. நீரினால் அபிஷேகம் செய்து வில்வத்தால் பூஜித்தால் போதும். 

🕉️மேலும் அவர், தான் விஷத்தை உண்டு, நமக்கு அமிர்தம் அளிப்பவர். முன் ஜன்ம நல்வினைத் தொடர்பு இல்லாவிட்டால் சிவ பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது!” – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஆம் மகா சுவாமிகள் சொல்வது போல, முன்ஜென்மத்தில் ஏதேனும் நல்லது செய்திருந்தால் தான் சிவசிந்தனையே இந்த பிறவியில் வரும். 

🕉️எனவே நாம் இப்போது எந்த நிலையில் எப்படி இருந்தாலும் சிவசிந்தனையும் சிவபக்தியும் இருந்தாலே அது ஒரு வரம் தான். பாக்கியம், அதிர்ஷ்டம் என்று நாம் கருதும் விஷயங்கள் எல்லாம் அற்பமானவை. 

🕉️சிவபக்தி ஒன்றே மிகப் பெரிய பாக்கியம். இதை அனைவரும் ஒரு நாள் உணர்ந்தே தீருவார்கள்!

No comments:

Post a Comment