Wednesday, August 5, 2020

எப்பொழுதும் மன கஷ்டமா? இந்த சித்தரை வணங்குங்கள்.



ஸ்ரீ கயிலாய கம்பளிச்சட்டை முனி சித்தர் தியானச்செய்யுள்

கனிந்த இதயம், மெலிந்த உருவம் சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?

அலையும் மனதை அடக்கி

அருள் அள்ளியே தருவாய்

தாடியில் தங்கம் தந்த தெய்வமே நங்கள் திருவடி சரணம்.

சித்தர் வரலாறு அஷ்டமா சித்தி பெற்ற இந்த சித்தர் உரோமாபுரியிலிருந்து (ROME) வந்தவராதலால் 'உரோமரிஷி' என்ற நாமம் பெற்றார்

உடல் முழுவதும் முடி முளைத்திருந்தபடியால் "உரோமமுனி என்ற காரணப்பெயரும் இவருக்கு உண்டு புண்ட மாமுனிவரின் சீடர் இவர்.

கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் இவர் தவம் செய்யும்பொழுது தன்னை தரிசித்தவர்களுக்கெல்லாம் தாடி வழியே தங்கம் தந்திருக்கிறார், ஒருமுறை தாடி இடையே தங்கம் வருவது நின்றுவிட தாடி அனைத்தையுமே மழித்து நீக்கிவிட்டு நீராடாமல் இறைவனை தரிசிக்க கோவிலுக்குச் சென்றார்

இவர் நீராடாமல் வருவது கண்டு விநாயகரும், முருகரும் இவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்க வருத்தமடைந்த உரோமரிஷி திரும்பிச்சென்று, கோபுரவாசலிலே நின்று கொண்டு இறைவனை மனமுருக விளித்தார்

உரோமரிஷி சுவாமிகளின் பக்தி ஒளியில், அவர் மெய்யழுக்கை மறந்து மெய்ப்பொருளாம் சிவபெருமான் ஓடிவந்து வெட்டவெளியில் அவர்முன் நின்று ஒளி வெளிச்சமாக பிரகாசித்து நின்றார்

உரோமரிஷி சுவாமி, தன் நூல்களை காகபுஜண்டர் சித்தர் இடம் கொடுத்து வைக்க அவர் பின்பு அவற்றை அகத்தியரிடம் கொடுத்து உலகுக்கு ஈந்தார், என்று கூறப்படுகின்றது

இந்த சித்தரின் பாடல்களில் உவமை நயத்திற்கும், சிலேடைகளுக்கும் பஞ்சமே இல்லை . அவரது ஆயுட்காலம் அளவிட முடியாத ஆற்றல் பெற்றதாகும். இச்சித்தர் பெருமான் சித்தியடைந்த திருத்தலம் தமிழ்நாடு எனக் கருதப்படுகின்றது.

இப்படிப்பட்ட சித்தரை வணங்குவதால் நம் ஜனன ஜாதகத்திலே இருக்கின்ற சந்திரன் பழுதுபடும் பொழுதும், சந்திரன் நீச்சம் அடையும்பொழுதும் நம்மை அவர் காக்கின்றார்

இவரை வணங்க நாம் தாம்பரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின்" அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு" திங்களன்று

வெள்ளைவஸ்திரம், ஜாதிபுஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி

ஜடாமுடி பிரியரே போற்றி

சந்திரனை தரிசிப்பவரே போற்றி

சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி நந்தி தேவர் காப்பற்றப்படுபவரே போற்றி

சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி

சங்கீதப் பிரியரே போற்றி

தடைகளை நீக்குபவரே போற்றி காகபுஜண்டர் பூஜிக்கப்படுபவரே போற்றி மகாலட்சுமியின் அருள் பெற்றவரே போற்றி

முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி

உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி

சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி

காலத்தைக் கடந்தவரே போற்றி

தெய்வீகச் சித்தரே போற்றி கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோம ரிஷி முளியே போற்றி போற்றி

இவ்வாறு அர்ச்சித்த பின்பு பின்வரும் மூல மந்திரம் "ஓம் ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டை முனி சித்தர் ஸ்வாமியே போற்றி" என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்

பின்பு. பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல், மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண்பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும்

அவ்வாறு வைத்து மனதார பிரார்த்தித்து நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்

இவரை வணங்குவதால் நாம் பெறும் பலன்களாவன. இவர் சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர் மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டுமென்றால், மனோன்மணி சக்தி பெற வேண்டுமென்றால் சந்திரன் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும்

இவரை முறைப்படி வழிபட்டால் மனவியாதி, மன அழுத்தம், மன புழுக்கம் பெற வேண்டுமென்றால் சந்திரன் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும்,

இவரை முறைப்படி வழிபட்டால்,

மன வியாதி, மன அழுத்தம், மன புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். எதிலும் சரியான முடிவெடுக்கும் திறன் வந்துவிடும்

படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய் மகன் மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இத்தகைய பெருமை வாய்ந்த சித்தரை நாம் வணங்கி பலன் பெறவேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment