Thursday, August 27, 2020

ஆறுமுகத்தின் மகிமை மற்றும் முருகனின் பெருமை

ஆறுமுகத்தை வழிபட்டால் ஏறுமுகம் ...!!

ஆறு படைவீடுகளில் முருகப்பெருமான் ஆறு நிலைகளில் விளங்குகிறார். 

1. திருப்பரங்குன்றத்தில் திருமண நிலை (உல்லாசம்), 

2. திருச்செந்தூரில் கவலை தோய்ந்த நிலை (நிராகுலம்), 

3. பழநி மலையில் 
ஞான பண்டிதனாகத் துறவி கோலநிலை (யோகம்),

4. சுவாமிமலையில் தந்தைக்கு இதமாகப் பிரணவப் பொருள் உபதேசித்த குரு நிலை (இதம்),

5. திருத்தணியில் குறிஞ்சி குன்றுகளில் மகிழ்ந்த நிலை (சல்லாபம்), 

6. சோலைமலையில் ஞானப்பழம் உதிர்க்கும் ஆனந்தநிலை (விநோதம்) நிலையில் அருள்பாலிக்கிறார். 

~~~~~~
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள், 
ஆறு திருமுகம், 
ஆறு கார்த்திகை பெண்கள், 
ஆறு சமயங்களுக்கும் 
தனிப் பெருங்கடவுள், 
ஆறு மந்திரங்கள், 
ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம், 
ஆறுமுகனுக்கு உகந்த ஆறு நூல்கள், 
தோன்றிய இடமும் ஆறு (கங்கை ஆறு) இவ்வாறு ஆறு என்பதுடன் முருகப்பெருமானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. 

ஆறுமுகத்தை மனமுருகி வழிபட்டால் நம் வாழ்க்கையில் ஏறுமுகத்தை காணமுடியும். 
🙏🙏🙏

No comments:

Post a Comment