நாமத்தின் மகிமை
முற்கலன்
பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில்
நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து
"ஏன்யா, இப்படி வந்து நிற்கிறாய்?
நீ ஒருதடவையாவது கடவுள் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள் நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
தெரியுமா?
"சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளதே? அதில் ஒரு நாமத்தையாவது
சொல்லி இருக்கலாமே?
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!!"
என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது? என்று கடவுள் நாமத்தின்
மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான் எமன்."
"ரங்கா" என்று ஒருதடவை சொல்லி இருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே?
"அறிவிலா மனிதர் எல்லாம்
அரங்கமென்றுஅழைப்பராகில்
பொறியில்வாழ் நரகம் எல்லாம்
புல்லெழுந்து ஒழியுமன்றோ?"
அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும். எனக்கு வேலை இருந்திருக்காதே ஐயா!
இது மட்டுமா “அரங்கா" என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட நன்றியோடு இருந்திருக்கும் ஐயா!"
" அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமினீரே!"
"உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம்,
சொல்லி இருக்கிறார்கள்.
நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு" என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம், “இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்" என்று ஆணை இட்டுவிட்டு தான் இருப்பிடத்தை நோக்கி நகருகிறான்.
நரகத்தைக் காணோம்!
உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து “உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகிவிட்டது ஐயா"
"என்னப்பாசொல்கிறாய்?" என்று எமன் கேட்க.... ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு அதனைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள், நரகம் இல்லாமல்
போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான்.
“நமனும் முற்கலனும் பேச
நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சொர்க்கமாகும்
நாமங்கள் உடைய நம்பி”
அப்படிப்பட்டது அவன் நாமம்.
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களை!
தினமும் சொல்வீர்...
ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே...
🌸ஆனந்தம் அடைவீர்🌸
No comments:
Post a Comment