Saturday, August 1, 2020

சாமி பெயரில் அர்ச்சனை செய்யக் கூடாது ஏன்?

கோவிலுக்கு செல்பவர்கள்

சில பேர் சுவாமி பேருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள் என்று சொல்லி கேட்டிருப்போம். இப்படி சொல்ல வேண்டாம்.. உலக

ஜீவ ராசிகளை இயக்குபவர் இறைவனே.. இப்படியிருக்க சுவாமி தனக்கு தானே அரச்சனை செய்வது அவரிடம் நம் பேரை சொல்லிதான் அரச்சனை

செய்ய வேண்டும்.

அர்ச்சனை என்பது ஒரு

குடும்பத்தினரின் இராசி

நட்சத்திரம், கோத்திரம்

அங்குள்ள அர்ச்கரிடம்

சொல்லி இறைவனிடம் நம்

வேண்டுதலை சமர்ப்பிக்க

வேண்டும்.

எடுத்து காட்டாக புரியும் படி ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள்.

நாம் ஒரு தபால் ஒன்றை

எழுதுகிறோம் அதில்

அனுப்புநர், பெறுநர்

கடிதத்தில் கூற வருவது

இதுபோல் எழுதினால் தான் தபால் முழுமை பெறும் அல்லவா இதே போல் தான்.

அரச்சனையும்... கடிதத்தில்

அனுப்புநர் தான் நாம் பெறுநர் தான் இறைவன்,

அந்த கடிதத்தில் உள்ள பொருள் தான் நம்

கோரிக்கைகள்

இப்போது புரிகிறதா அனுப்புநராகிய நாம் பெறுநராகிய இறைவனிடம் நம் கோரிக்கைகளை வைத்து சமர்ப்பிப்பதே அரச்சனையாகும்.

இனிமேல் நீங்கள் கோவில் செல்லும் போது

உங்களுடைய பெயர், ராசி நட்சத்திரம் கூறி இந்த வேண்டுதலை (சுய தொழில்

பண்ண வேண்டும், சொந்த

வீடு வாங்க வேண்டும்.

திருமணம் விரைவில் நடை பெற இது போல் பல உங்கள் கோரிக்கைகள் வைத்து இறைவனை வழிபடுங்கள்.

No comments:

Post a Comment