Tuesday, August 18, 2020

அரசமர வழிபாடு ரகசியம்

*🚩🔯அரச மரத்தை வலம் வர இது தான் சரியான நேரம்*

        
*🔯அரச மரத்தை வலம் வர இது தான் சரியான நேரம்*

கடவுள் தூணிலும் இருப்பார்.. துரும்பிலும் இருப்பார் என்பதற்கேற்ப  ராஜவிருட்சம் என்று அழைக்கப்படும் அரசமரத்தின் அடியில் மும்மூர்த்திகள் இணைந்து வாசம் செய்து அருள்பாலிக்கிறார்கள் என்பது ஐதிகம்.

 கீதையில் கண்ணன் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என்று சொல்லும்போதே  அரசமரத்தின் அருமையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

 அரசமரத்துக்கு அஸ்வத்தம் என்ற பெயரும் உண்டு.

 அதாவது அஸ்வத்தா என்றால் வழிபடுபவர்களின்பாவத்தை அடுத்த நாளே போக்குவது என்று பொருள். 

இதற்கு அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம்  போன்ற பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

 இந்துக்களின் வழிப்பாட்டில் அரசமரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசமரத்தின் அடிப்பாகத்தில் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா வசிக்கிறார். 

மரத்தின் நடுப்பகுதியில் காக்கும் கடவுளான விஷ்ணுவும்,

 மேல்பகுதியில் சிவனும் இருப்பதாக புராணம் சொல்கிறது.

 அரசமரத்தைச் சுற்றி 30 மீட்டருக்குள் கோயில் இருந்தால் அங்கு வழிபடும்போது நிச்சயம் அமைதி கிடைக்கும்.

 புத்தருக்கு ஞானம் கிடைத்தது போதிமரத்தில் தான் என்று சொல்கிறோம்.

 அந்த போதிமரமே அரசமரம் தான்.

 அரசமரத்தைச் சுற்றி வேண்டியதைப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

மரத்தை சுற்றுவதற்கு ஏற்ப பலன்கள் உண்டு. அதே போல் வழிபடும் கிழமைகளுக்கேற்ப பலன்களையும் பெறலாம்.

*🔯அரசமரத்தைச் சுற்றும் போது இந்த மந்திரத்தைச் சொல்லி சுற்ற வேண்டும்.*

*🚩மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே*

*அக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:*

*ஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச*

*ப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.🚩*

🔯ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரம் சுற்றும்போது சூரியபகவானை வணங்கிய பிறகு அரசமரத்தை 15 முறை மந்திரம் சொல்லி வலம் வந்தால் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்கும். 

🔯திங்கள் கிழமைகளில் சிவனை நினைத்தும்,

 🔯செவ்வாய்க்கிழமைகளில் அம்பிகையை நினைத்தும், 

🔯புதன் கிழமைகளில்  முப்பத்து முக்கோடி தேவர்களையும்,

 🔯வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் ,

 🔯வெள்ளிக்கிழமைகளில் லஷ்மியையும்,

 🔯சனிக்கிழமைகளில் விஷ்ணுவையும் நினைத்து சுற்றவேண்டும். 

வறுமை விலகி குலம் தழைக்கவும், செல்வம் பெருக்கவும் அரச மரம் வழிபாடு அவசியம்.

 அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டு பார்த்தாள் என்ற பழமொழி உண்டு.

 பெண்களின் கருப்பைக் கோளாறுகளை நீக்கும் தன்மை அரசமரசத்திலிருந்து வெளிவரும் காற்றுக்கு உண்டு. 

குலம் தழைக்கச் செய்யும். பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரச மரத்தின் அடியில் அமர்ந்தாலே மனம் அமைதியடையும். 

அரச மரத்தின் கீழ் அமர்ந்து ஸ்லோகங்களைச் சொல்லும் போது அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்.

 தர்மசாஸ்திரத்தின் படி அரசமரத்தை காலை 10.40 மணிக்குள் வழிபட வேண்டும்.

 சனிக்கிழமையன்று மட்டும் காலை 8.30 மணிக்குள் அரசமரத்தை வலம் வரவேண்டும். 

உங்கள் வேண்டுதலின் படி 15, 54,108 என்ற எண்ணிக்கையில் சுற்றலாம்.

 சனிக்கிழமையன்று மட்டுமே அரசமரத்தை தொட்டு வணங்கலாம்.

 மற்ற நாட்களில் அரசமரத்தைக் கையால் தொடக்கூடாது.

 இனி காலை நேரங்களில் அரசமரத்தை எங்கு கண்டாலும் பத்து நிமிடம் ஒதுக்கி சுற்றி வாருங்கள். பலனை உணர்வீர்கள்.🙏🌹🌈

No comments:

Post a Comment