Wednesday, August 26, 2020

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சொல்ல வேண்டிய பதிகம்

*வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இதை மட்டும் செய்தால் போதுமே! நீங்கள் செய்யும் காரியம் நிச்சயம் வெற்றிதான்.*

*வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, நாம் சில பாடல் வரிகளை உச்சரிக்கும் பட்சத்தில் அது நமக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்முடைய சாஸ்திர குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில், தினந்தோறும் வீட்டை விட்டு செல்லும் போது, என்ன பதிகத்தை படிக்க வேண்டும், நீண்ட தூர பயணம் செல்லும்போது, அந்தப் பயணம் நல்லபடியாக அமைய, என்ன பதிகத்தை படிக்க வேண்டும், பதிகங்களை படிக்கவே தெரியாதவர்கள், என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.*

*இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்ற முதல் பதிகம், ‘கோளறு பதிகம்’. இது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தடையை நீக்கக் கூடிய சக்தி இந்த பதிகத்திற்கு அதிகமாகவே உள்ளது என்று சொல்லலாம். நாயன்மார்களில் மிக முக்கியமான நால்வரில் ஒருவரான, திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் தான் இது!*

*தினம் தோறும் வீட்டில் இருந்து வெளியே கிளம்புவதற்கு முன்பு, இந்தப் பாடலை உச்சரித்து கிளம்பினால், நீங்கள் செல்லும் வேலை சிறப்பாக முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான கோளாறு பதிகம் இதோ*

*தினம்தோறும் வெளியே செல்வதற்கு முன்பு படிக்க வேண்டிய பதிகம்:*

*வேயுறு* *தோளிபங்கன்* *விடமுண்ட கண்டன்*
*மிகநல்ல வீணை தடவி*
*மாசறு திங்கள்* *கங்கை* *முடிமேலணிந்தென்*
*உளமே புகுந்த* *அதனால்*
*ஞாயிறு* *திங்கள்செவ்வாய்* *புதன்வியாழன்* *வெள்ளி*
*சனிபாம்பி ரண்டு முடனே*
*ஆசறு நல்லநல்ல* *அவைநல்ல நல்ல*
*அடியா ரவர்க்கு மிகவே.*

*அடுத்ததாக, நீண்ட தூர பயணத்திற்கு செல்கின்றோம். மூன்று நாட்களோ அல்லது நான்கு நாட்களோ அல்லது அதற்கு மேல் வெளியூரில் தங்கி ஆன்மீக சுற்றுப் பயணம் செய்தாலும் அல்லது வேறு வகையில் பயணத்தை மேற்கொண்டாலும், அந்தப் பயணம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று, பயணத்தை முடித்துக்கொண்டு பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று, வீட்டிலிருந்து கிளம்பும்போது எந்த பதிகத்தை படிக்க வேண்டும்? அருணகிரிநாதர் நமக்காக அருளிய  பதிகம் உங்களுக்காக இதோ!*

*நீண்ட தூர பயணத்தின் போது படிக்க வேண்டிய பதிகம்:*

*சேயவன் புந்தி* *வனவாச மாதுடன்* *சேர்ந்தசெந்திற்*
*சேயவன் புந்தி* *கனிசா சராந்தக* *சேந்தவென்னிற்*
*சேயவன் புந்தி* *பனிப்பானு* *வெள்ளிபொன்* *செங்கதிரோன்*
*சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.*

*சரி, இதை எதுவுமே படிப்பதற்கு நேரம் இல்லை. படிக்கவும் தெரியாது! என்று சொல்பவர்களுக்கும், ஒரு தீர்வு உண்டு. வீட்டிலிருந்து கிளம்பும்போது பூஜை அறைக்கு சென்று, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, திலகம் வைத்துக்கொண்டு, ‘ஓம் கேசவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதார மூன்று முறை உச்சரித்து, செல்லக்கூடிய காரியம் தடையில்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும், என்று வழிபாடு செய்வது மிகமிக நன்மையை தேடித்தரும்.*

*வேலைக்கு நேர்காணலுக்கு செல்கிறீர்கள் அல்லது ஏதேனும் முக்கியமான விஷயம் உங்கள் பக்கம் வெற்றியாக வேண்டும், செல்லக்கூடிய வேலை உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்றால், உங்கள் மீது பாசமாக இருக்கக்கூடிய உங்கள் அம்மாவின் கையாலேயே அல்லது உங்களுடைய மனைவியின் கையாலோ, ஒரு டம்ளர் தண்ணீரை பருகி விட்டு செல்வது நன்மையை தரும்.*

*அதாவது, அவர்கள் நேர்மரையோடு, உங்களுக்கு தரக்கூடிய அந்த தண்ணீரில் இருந்து, கிடைக்கக்கூடிய ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மங்களகரமான காரியங்கள் தடை இல்லாமல் நடப்பதற்கும், முக்கியமான வேலைகள் தோல்வியில் முடியாமல் இருப்பதற்கும், குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து, பூஜை அறையில் வைத்து விட்டு, கிளம்புவது நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு நாம் எந்த ஒரு செயல்பாட்டை செய்தாலும் அந்த நம்பிக்கை, எப்போதுமே நம்மை கைவிடாது! 

அடுத்தவர்களுடைய நம்பிக்கையை, கேலி செய்பவர்களுக்கு பரிகாரங்கள் என்றுமே பலன் தராது,*

No comments:

Post a Comment