Wednesday, August 19, 2020

சித்தனும் சிவனும் ஒன்றே

சித்தனும் சிவனும் வேறு வேறு அல்ல....

மனிதனும் சிவனும் வேறு வேறு அல்ல... 

மனித பிறவி இல்லையேல்  சித்தசிவத்தை அறிய இயலாது.... !

1.ஒருவன்.... கர்மத்தின் சுழற்சியால் மனிதனாக பிறக்கிறான். 
2.பிறந்ததின் பயனை,  உணர்ந்ததின் பயனாக தானதர்மங்கள் செய்கிறான். 
3.தான தர்மத்தின் பயனாக பக்தியை வளர்க்கிறான். 
4.பக்தியின் முற்றாக யோகத்தை 
வளர்க்கிறான். 
5.யோகத்தின் நிறைவாக  ஞானத்தில் மிதக்கிறான். 
6.ஞானத்தின் உச்சமாம் சித்தனும் ஆகிறான். பித்தனும் மறைகிறான். 
7.பித்தம் தெளிந்து சித்தத்தை அடைந்ததால்,  இறுதியில்  சிவனுமாகிறான்.......!

ஆகவே மனித பிறவி இல்லாமல் ஈசனை அடைய இயலாது . 
இத்தகைய மனித பிறவியை வீண் செய்யலாமா?? 

ஈசனை உணர்ந்து, பின் அவனை அடைய முயற்சி செய்... !
அதை விட இன்பம் எதிலும் இல்லையே.... !

சொல், செயல்  இரண்டிலும் ஈசனை நிலை நிறுத்து.... !

              பின்பு அவனே உன்னுள் நிலை கொண்டிடுவான்..... !!
                             🙏🙏🙏

No comments:

Post a Comment