Saturday, August 22, 2020

ஜோதிடத்தைப் பற்றி ராகவேந்திரரின் கருத்து

ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.

""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.

""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.

""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!""மூன்றாமவர் சொன்னார். 

"எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்...
என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்...
பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""

""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார்.

ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.

புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.

நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. 

நவாப்பிடம் மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான்.

துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார். 

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அழகு எழில் கொஞ்சும் துங்கபத்திரை நதிக்கரையோரம் அமைந்திருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மடத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் நம் பிரார்த்தனை நிறைவேறுவதோடு மன அமைதியும் கிடைக்கும்.

கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை.
ஜயா பொன்னையா சுவாமிகள் பதிவு 
இது பகிர்ந்து கொண்டேன் 
ஜயாவுக்கு நன்றிகள்

No comments:

Post a Comment