Saturday, October 31, 2020

குரானா குறைந்துவிட்டதா?

*எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது.ஆள்வோரையும் தாக்குகிறது.*

குப்பன் சுப்பன் அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது. 

எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்.

1. மாதம் ஒரு முறை மளிகை வாங்கவும்.

2. வாரம் ஒரு முறை காய்கறி வாங்கவும்.

3. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும். 

4. பைகளை வெளியேவே வைக்கவும்.

5. பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும். 

6. வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும். 

7. கை,கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவும். 

8. பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும். 

லூஸில் வாங்கிய மளிகை சாமான்களை அப்படியே ஒரு நாள் வரை விட்டு விடவும். முடிந்தால் வெயிலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும். 

9. இவற்றுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவவும். 

10. வெளியே சென்று வந்ததும் வெளிபாத்ரூம் வசதி இருந்தால் குளித்து விட்டு ஆடைகளை அங்கேயே நனைத்து வைத்து விட்டு வரவும். அப்படி வசதி இல்லையேல் நேராக குளிக்கப்போகவும். சோபா , சேர் போன்றவற்றில் உட்கார வேண்டாம்.

11. ஒரு மாஸ்க்கை 4-5 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். 

12. சிறிய பாட்டிலில் சானிடைசர் கையோடு கொண்டு போகவும். ஹிமாலயாஸில் வருகிறது. பிடித்த வாசனையுடன். நான் ஆரஞ்ச் ப்ளேவர் பயன்படுத்துகிறேன். 
இவ்வகை சானிடைசர்கள் காரிலும் வைத்திருக்கலாம். பாதுகாப்பானதுதான். 

13. கையுறை போட்டாலும் கவனமின்றி இருந்தால் தொற்று ஏற்படும்.

14. மாஸ்க் , கையுறைகளை தனி கவரில் போட்டு தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்புவிக்கவும். அப்படியே போட வேண்டாம்.

15. வீதியை கூட்டும் வகையில் பாண்ட், வேட்டி அணிய வேண்டாம். வீதியில் கிடக்கும் கொரானாவை விருந்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவீர்கள்.

 16. எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் செருப்பை வெளியேவே விடவும். 

17. ஹால் தரையை தினம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்கவும். 

18. வேலைக்காரர்களை அவசியம் இல்லை எனில் நிறுத்தி விடவும். அதிலும் பல வீடுகளில் வேலை செய்வோரை கண்டிப்பாக சேர்க்கவே வேண்டாம். (குறைந்தது அரை சம்பளம் கொடுக்கவும். அவர்களுக்கும் பசிக்குமே!)

19. தவிர்க்க முடியாத நிலையில் அவர்களையும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வைக்கவும். 

20. வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். ப்ளம்பிங், எலக்ட்ரிகல், மற்ற பராமரிப்பு
மிக அவசியம் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின் உள்ளே விடவும். மறுத்தால் திருப்பி அனுப்பவும். நான் அவர்களை கை கால் கழுவ சொல்வதுடன் புதிய மாஸ்க் கொடுத்து அணிய சொல்வேன். இதில் தயவுதாட்சண்யம் வேண்டாம்.

21. உறவினர் யார் வீட்டுக்கும் போக வேண்டாம், அவர்களையும் வர ஊக்குவிக்காதீர்கள். இதிலும் தயவுதாட்சண்யம் வேண்டாம். 

22. கபசுர குடிநீர் தினமுமே 30-60 மில்லி குடிக்கலாம். ஒன்றும் ஆகாது.

23. ஏதேனும் ஒரு கசாயம்  (கீழாநெல்லி, தூதுவளை, கற்பூரவள்ளி, திரிபலா, இப்படி) தினமும்
குடிக்கவும்.

24. தினம் ஒரு சூப்
(முருங்கை இலை, மணத்தக்காளி, காய்கறி, ஆட்டுக்கால், சிக்கன், மட்டன், இப்படி) குடிக்கவும். காசு?
 வேறு வழி இல்லை. கொரானா சிகிச்சைக்கு குறைந்தது 1.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பில் போடுகிறார்களாம். (உங்கள் பாக்கெட் கனம் பார்த்து) அதை ஒப்பிட்டால் இந்த செலவு சாதாரணமே. மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

25. சுகர் இருக்கா? அப்போது கார்போஹைட்ரேட்டை மிக குறைத்து புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

26.  பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, யோகா செய்யவும்.  நேரங்கள் உள்ளஇடைவெளிகளில் செய்யலாம்.🙏🙏🙏🙏🙏

உங்கள் கர்மவினையை நீக்க உதவி செய்கிறது உங்கள் ஜாதகம்

மனிதனின் வாழ்க்கையை கர்ம வினை தான் இயக்குகின்றது என்றும் மேலும் கர்மா பலன்களை நிச்சயம் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் அதில் நான் தலையிடுவதில்லை என்றும் பகவான் கிருஷ்ணர் கூறியதை மறக்க வேண்டாம் நன்பர்களே.
வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் கர்ம வினையே காரணம் நண்பர்களே, ஜாதகத்தில் தங்கள் கர்ம வினை என்ன அதை எந்த கிரகம் தருகின்றது என்று ஆராய்ந்து அதற்கு தகுந்த பரிகாரம் பண்ணினால் தான் நிலைமை சீராகும்.
அவரவர் கர்மாவை கண்டறிந்து தகுந்த பரிகாரம் செய்யுங்கள் கண்டிப்பாக கடவுள் அருளால் அனைத்தும் சரியாகும்
இதை தவிர வேற என்ன பரிகாரம் செய்தாலும் எவ்ளோ மந்திரம் பிரயோகித்தாலும் ,எத்தனை குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி, ராகு\கேது பெயர்ச்சி வந்தாலும் தங்கள் பிரச்சினை தீராது. 

Friday, October 30, 2020

சிந்திக்க அற்புதமான பழமொழிகள்

#உண்மைகள்_உபதேசமாய் :-

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

8. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

9. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான், மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

10. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

11. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

12. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.

13. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

14. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).

15. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)

16. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)

17. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).

18. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).

19. இறுகினால் களி. இளகினால் கூழ்.

20. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)

21. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)

22. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).

23. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).

24. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

25. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)

26. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).

27. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)

28. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)

29. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).

30. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது).

31. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)

32. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)

33. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

34. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

35. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

36. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

37. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

38. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

39. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

40. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?

41. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?

42. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

43. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?

44. உண்டு கொழுத்த நண்டு 
வளையில் தங்காது.

மந்திரத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதை காஞ்சி பெரியவர் கூறுகிறார்.

#எத்தனையோ வழிபாடு செய்தும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. வருத்தமுடன் காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்தாள் ஒரு பெண்.

''சுவாமி! கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம் என ஸ்லோகங்களை எல்லாம் தினமும் சொல்கிறேன். ஆனால் கடவுள் கருணை காட்டவில்லையே. என் பிரச்னைகள் தீரவில்லை''

''அதுசரி...எப்படி சொல்கிறாய்?'' கேட்டார் சுவாமி.

''நினைத்த நேரம் எல்லாம் சொல்வேன். வேலை பார்த்துக் கொண்டே சொல்வேன். எல்லாம் சிறுவயதிலேயே எனக்கு மனப்பாடம். புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற தேவையே இல்லை!''

அவ்வளவும் மனப்பாடம் என்பதில் அளவுகடந்த பெருமை அப்பெண்ணுக்கு.

சுவாமிகள் புன்னகைத்தபடி ''கடவுள் ஒன்றும் உன் மனப்பாடத் திறமையைப் பரிசோதிக்கும் பள்ளிக்கூட ஆசிரியர் இல்லை'' என்றார். தற்பெருமை கொள்வது தவறு என்பது சுரீரென்று அவளின் புத்தியில் உறைத்தது.

''எப்போதும் ஸ்லோகம் சொல்வது நல்லது தான். இதனால் மந்திர சப்தம் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு முழுப்பயன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?'' சமையலுக்குக் காய்கறி நறுக்கும் போது காய்களை அருகில் வைத்துக் கொள்வாய். அரிவாள் மனை, கத்தி எல்லாம் உன்கிட்டே இருக்கும். அடுப்படிக்கு போய்த் தான் நீ சமையலில் ஈடுபட முடியும். குளிக்க வேண்டும் என்றால் குளியலறையில் தண்ணீர் வாளியைப் பக்கத்தில் வைத்துக் கொள்வாய். அதுமாதிரிதான் ஸ்லோகம் சொல்வது.

எல்லா இடத்திலும் கடவுள் இருப்பது உண்மையே. முழுமையாக உணர்ந்த ஞானிகளுக்குத் தான் அது பொருந்தும். பூஜையறையில் அமர்ந்து ஸ்லோகம் சொல். இஷ்ட தெய்வத்தின் படம் உன் முன்பு இருக்கட்டும். மனதை வேறு பக்கம் திரும்பாமல் ஸ்லோகத்திலேயே ஒருமைப்படுத்து. அதன் பொருளையும் நினைத்துக் கொள். அப்படிச் செய்தால் ஸ்லோகங்களின் சக்தி அதிகரிக்கும் கடலுக்குள் கற்களை வீசினால் மூழ்கும். ஆனால் மரக்கட்டைகளை ஆணி அடித்துச் சேர்த்துத் தெப்பம் ஒன்றைச் செய்து அதில் கற்களை வைத்தால் மூழ்காது.

மனக்கடலிலே கடவுளைத் தெப்பமாக வைத்துக் கொள். அதிலே கவலைகளை ஏற்று. ஸ்லோகங்கள், மந்திரங்கள், பூஜைகள் எல்லாம் தெய்வத்தை இணைக்கும் ஆணிகள் போலத்தான். அப்புறமென்ன? பிரச்னைகள் தீரும். பிறவி என்னும் சம்சாரக் கடலில் மூழ்காமல் உன்னைக் கடவுள் கரை சேர்ப்பார்.

தெளிவு கிடைத்த மகிழ்ச்சியுடன் சுவாமிகளை வணங்கி விடை பெற்றாள்.

உடல்நலம் பெற... காஞ்சிப்பெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

Thursday, October 29, 2020

சொந்த வீடு கட்ட சக்திவாய்ந்த பதிகம்

சொந்த வீடு கட்ட 1ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை!
வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது.

சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம்.

சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன இந்த கோவிலில் சிறப்பு?

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, முருகப் பெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப். பெரிய சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. முடிந்தால் ஒருமுறை சிறுவாபுரி முருகப்பெருமா னை தரிசனம் செய்து இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, காலையில் இந்த பதிகத்தை மனமுருகி உச்சரித்து, சொந்த வீடு வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வையுங்கள். சொந்த வீடு கட்டி, குடி போகும் வரை இந்த பதிகத்தை நீங்கள் பாராயணம் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை. கையில் ஒரு பைசாவும் இல்லை. என்றாலும் கூட, பரவாயில்லை . முருகப்பெருமானி டம் கையேந்தி இந்தப் பதிகத்தைப் பாடி தொடர்ந்து உங்களது வழிபாட்டை வைத்து வந்தீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

உங்களுக்கான அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம் இதோ!

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.

உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் வரை இந்த பதிகத்தை தினம்தோறும் உங்கள் வீட்டில் பாராயணம் செய்து கொண்டே இருங்கள்! சொந்த வீட்டை கட்டாமல் முருகப்பெருமானை விடுவதில் லை என்ற ஒரு குறிக்கோளுடன், எம்பெருமானின் திருப்பாதங்களை பிடித்துக்கொள்ளுங்கள்.

அர்த்தசாஸ்திரம் அறிவுரைகள்

#அர்த்த_சாஸ்திரம்
#உரைக்கும்_அர்த்தமுள்ள
#அறிவுரைகள்

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும்.

வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், கணவன் / மனைவியை நோய்வாய்ப் படும்போதும், துரதிர்ஷ்டமான காலத்திலும் அறியலாம்.

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டே சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம் ஆனால் நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

அழகு, ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

கஞ்சனுக்கு பிச்சைக்காரன் எதிரி ஆவான், அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரணநிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும். கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவர்த்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலையானது சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது. 

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.

தேனீக்களை பார்த்து கற்று கொள்ளுங்கள், அவை கஷ்டப்பட்டு தேடிய தேனை தானே உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

Wednesday, October 28, 2020

நாக வழிபாட்டின் முக்கியத்துவம்



புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது

நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை

பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக

விமரிசையாக நடக்கும்

நாகாத்தம்மன் முப்பாத்தம்மன் காளியம்மன், மாரியம்மன்

என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி திருவேற்காட்டில் தேவி

கருமாரி அம்மன், நாக

சக்தியாக அமர்ந்து

அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக்

கோயில் உள்ளது இந்த ராகு கேது தான் நாக தோஷம், சர்ப்ப

தோஷம் என பல

வகைகளில் தோஷங்களை

ஏற்படுத்துவதில்

ராகு-கேதுவுக்கு நிகர் யாரும்

இல்லை எனலாம் குழந்தை பிறக்கும்போது

கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி

சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின்

அம்சமான ராகு-கேதுவை

நாக சதுர்த்தி தினத்தில்

மனமுருகி வழிபட்டால் சகல

தோஷ நிவர்த்தி ஏற்படும்

தமிழ் நாட்டில், இவ்வாறு நாக பூஜை செய்து பிறந்த குழந்தைகளுக்கு நாகராஜா அல்லது நாகமணி என்று

பெயரிடுகின்றனர் இத்தகைய சர்வ

வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது

இந்த நாக சதுர்த்தி

விரதத்தால் குழந்தை

பாக்கியம் ஏற்படும் குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட

ஆயுளுடன் வாழ்வார்கள்

பல நோய்களை தீர்க்கும் ஒரே மந்திரம்

பல நோய்களை தீர்க்கும் ஒரே மந்திரம் கூறிய அகத்தியப் பெருமான்



மனிதர்களுக்கு வரும் நோய்கள் குறித்தும், மனித உடல் பாகத்தை மையமாக வைத்து எத்தனை நோய்கள் வரும் என்பதையும் அகத்தியர் மிக அழகாக கூறியுள்ளார். அதன்படி நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் கூறியுள்ளார்.
ஆனால் அகத்தியர் கூறிய பல்வேறு மருந்துவ முறைகள் பாதுகாக்கப்படாமல் விட்டப்படியால் இன்னும் அவை பற்றிய குறிப்புகள் கிடைக்காமல் உள்ளது. தற்போது பல குறிப்புகளில் ஒரு சில மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கில் உள்ளது.
கிடைத்த குறிப்புகளில் ஒரு சில மருத்துவக் குறிப்பு நெற்றியில் அணியும் திருநீரை மந்திர உரு ஏற்றினால் ஒரு சில நோய்கள் விலகும் என்று கூறியுள்ளார்.
அகத்தியர் அருளிய உடல்நோய்கள் அனைத் தையும் முற்றிலும் நீக்கும் இம்மந்திரத்தினை ஜெபித்து நோய்களினின்றும் விடுதலைப் பெற்று மகிழ்வுடன்வாழ்வோமே....... .

கணபதி மந்திரம் .
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற .
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு .
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று .
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று .
தாமப்பா நடனகண பதிதானொன்று .
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று .
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க் கேளு .
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே. .
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று .
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று .
நன்றான மூலகண பதிதானொன்று .
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க் .
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக் .
குறிப்புடனே சொல்லுகிறேன் .
குணமாய்க்கேளு .
நின்றாடு மூலமடா ஆதிமூலம் .
நிலையறிந்து .

 *ஓம்கிலி அங்உங்* 

208
கெண்ணே .

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந் திரம் இருக்கிறது. அது .


 *"ஓம் கிலி அங் உங்"* .


என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார். .

எண்ணமுடன் இடதுகையால் விபூதி வைத்து ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து சுத்தமுடன் ஓம்கிலி அங்உங் கென்று தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத் (208) தான் செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால் முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே. .
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும் .
கெடியான குன்மமுடன் காசந்தீரும் .
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும் .
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும் .
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம் .
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் .
வாங்கிப்போகும் .
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று .
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே. .
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான "உ" என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். .
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

Tuesday, October 27, 2020

சக்திவாய்ந்த சித்தர்களின் மூல மந்திரம்

_சித்தர்களின் மூல மந்திரங்களை தெரிந்து கொள்வோம்..._

*🕉ஆன்மீக இறையால் இணைவோம்🕉*

எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும். மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

*அகத்தியர் மூல மந்திரம்...*
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

*திருமூலர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

*போகர் மூல மந்திரம்...*
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

*கோரக்கர் மூல மந்திரம்...*
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

*தேரையர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

*சுந்தரானந்தர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

*புலிப்பாணி மூல மந்திரம்...*
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

*பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

*காக புசண்டர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

*இடைக்காடர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

*சட்டைமுனி மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

*அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

*கொங்கணவர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

*சிவவாக்கியர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

*உரோமரிஷி மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

*குதம்பை சித்தர் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

*கருவூரார் மூல மந்திரம்...*
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

*🕉ஆன்மீக இறையால் இணைவோம்🕉*

ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தின் சிறப்பு

ஓம் நமோ நாராயணாயா மந்திரம் சொல்வதால் என்ன பலன்?

ஓம் நமோ நாராயணாயா அந்த மந்திரத்தைக் கேட்பவர்களுக்கே முக்தி என்றால், அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு பயன்கள் கிடைக்கும்.

எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், “ஓம் நமோ நாராயணாயா…” எனும் மந்திரத்தை உச்சரித்த படியே மூன்று உலகையும் வலம் வருபவர் சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?

ஒரு நாள் வைகுண்டத்தில் இறைவன் நாராயணன் பாம்புப் படுக்கையில் படுத்திருந்தார். அவரின் காலுக்கருகில் மகாலட்சுமி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த நாரதர், “இறைவனே, உன் பக்தர்கள் அனைவரும் உனது பெயரைச் சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது பெயரில்?” எனக் கேட்டார். நாராயணன் நாரதரை பார்த்து, “நாரதா, அவர்கள் என் பெயரைச் சொல்லி வேண்டுவதை நான் உனக்குச் சொல்லி விளக்குவதை விட, நீயே அதை நேரடியாகச் சென்று தெரிந்து கொள். நீ உடனடியாகப் பூலோகம் சென்று தென்திசையில் இருக்கும் வனத்தில் வாழும் ஒரு புழுவிடம் அந்த மந்திரத்தைச் சொல்.” என்றார்.

உடனே நாரதரும் நாராயணன் சொன்ன வனத்தை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்ற நாரதர் அதனிடம், “ஓம் நமோ நாராயணாயா…” என்று சொன்னார். உடனே அந்தப் புழு செத்து விழுந்தது. நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார். “இறைவனே, நான் அந்தப் புழுவிடம், தங்கள் பெயரைச் சொல்லியதும் அந்தப் புழு செத்து விழுந்து விட்டது. இது தான் உங்கள் பெயரின் மகிமையா? ” எனக் கேட்டார் நாரதர்.

அதைக் கேட்ட நாராயணன், “நாரதா, நீ மீண்டும் பூலோகம் செல், அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும். அதனிடம் சென்று என் பெயருடனான மந்திரத்தை சொல்” என்றார். நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார். அங்கு அவர் சொன்னபடி ஒரு பசு மாடு கன்றை ஈன்றது. நாரதர் அந்தக் கன்றின் அருகில் சென்று, “ஓம் நமோ நாராயணாயா…” என்றார்.

பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்தக் கன்று கீழே விழுந்து இறந்தது.

நாரதர் திடுக்கிட்டார். அவர் மனதில், “பசுமாட்டைக் கொல்வதே பெரும் பாவம். இதில் பிறந்து சில நிமிடங்களே ஆன, கன்றாக இருக்கும் பொழுதே அந்த மந்திரத்தை சொல்லி அதைக் கொன்றுவிட்டோமே…” என்று நினைத்து வருந்தினார்.

உடனே நாரதர் அங்கிருந்து மீண்டும் வைகுண்டத்துக்கு வந்து சேர்ந்தார்.

“இறைவனே, இது என்ன விளையாட்டு? நான் தங்களின் பேச்சைக் கேட்டு, உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தக் கன்று இறந்து போய் விட்டது… மிகப் பெரிய பாவத்தைச் செய்து விட்டேனே…” என்றார். “நாரதா, நீ கவலைப்படாதே, மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று, நான் சொல்லுமிடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனிடம் என் பெயரிலான மந்திரத்தைச் சொல்லிப் பார்” என்றார் நாராயணன். நாரதருக்கோ மிகுந்த பயமாகி விட்டது. ஏற்கனவே இரு முறை இறைவன் பெயரிலான மந்திரத்தைச் சொல்லி புழுவும், பசுவின் கன்றும் இறந்து போய்விட்டன. இப்போது, தனனால் ஒரு சிறுவன் இறந்து போய் விடக்கூடாதே” எனக் கவலைப்பட்டார்.

இறைவன் அவரைப் பார்க்க, மனதைத் திடப்படுத்திக் கொண்டு பூலோகத்திற்கு வந்தார். அங்கு அவர் சொன்ன இடத்தில் சிறுவன் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அச்சத்துடன் அவனருகில் சென்ற நாரதர், “ஓம் நமோ நாராயணாயா…” என்று சொன்னார். அவ்வளவுதான் அந்தச் சிறுவனும் இறந்து போனான். நாரதருக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. இறைவன் தன்னை வைத்து மூன்று உயிர்களை இறக்கச் செய்து விட்டாரே…” என்று கவலையுடன் மீண்டும் வைகுண்டம் வந்தடைந்தார். அங்கு நாராயணனும் மகாலட்சுமியும் அமர்ந்திருக்க, அவர்களின் அருகில் கீழாக ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார். மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட நாராயணன், “நாரதா, ஏன் இப்படி கவலையுடன் வருகிறாய். உனக்கு என்ன ஆயிற்று?” என கேட்டார்.

நாரதர், அங்கு புதிதாக வந்திருந்த முனிவரையும் குழப்பத்துடன் பார்த்தார்.

பின்பு அவர் நாராயணனிடம், “இறைவா, இது என்ன சோதனை? நான் தங்களிடம், தங்களின் பெயரிலான மந்திரத்தின் சிறப்பைச் சொல்லும்படி கேட்டேன். ஆனால், தாங்களோ பூலோகத்திற்குச் சென்று உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொல்லிப் பார்க்கச் சொன்னீர்கள், நான் உங்களின் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன் அந்தப் புழு இறந்து விட்டது. அடுத்து பசுவின் கன்று இறந்து விட்டது. அதன் பின்பு இளம் வயது பாலகன் இறந்து போனான். உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உயிர்கள் இறந்து போய் விடுகின்றன. உங்கள் பெயரிலான மந்திரம் இவ்வளவு கொடுமையாக இருக்கிறதே…? ஒரு வேளை அதை நான் உச்சரித்தது தவறாக இருந்திருக்குமோ…?” எனக் கேட்டார் நாரதர்.

உடனே நாராயணன் நாரதரைப் பார்த்துச் சிரித்தார்.

பின்னர், “நாரதா, நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன். எங்கே என் முன்னாள் ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொல் பார்க்கலாம்” என்றார். இறைவன் இருக்கும் இடத்தில், தனது மனதை திடமாக்கிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அந்த மந்திரத்தைச் சொன்னார்.

“ஓம் நமோ நாராயணாயா…”

நாரதர் கண்களை திறந்து பார்த்தார். இறைவனின் கீழாக அமர்ந்திருந்த முனிவர் உடலை விடுத்து, அந்த ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைந்தது. நாரதர் கலங்கிப் போய் விட்டார். நாராயணன், நாரதரை பார்த்து, “நாரதா… எனது பெயரை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும். உனது வாயால் என் பெயரிலான மந்திரத்தைக் கேட்டதும் அந்தப் புழு பசுவாகவும், பசு பாலகனகவும் மறுபிறப்பை அடைந்தது.

பாலகன் மாமுனியாக அவதரித்ததும், அந்தப் பெயரிலான மந்திரச் சிறப்பினால் தான். கடைசியாக நீ அந்த மந்திரத்தை இங்கு சொன்னதும், அந்த மாமுனியும் முக்தி அடைந்தார். என் பெயரிலான மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் என்பதை உணர்த்தவே உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்த மந்திரத்தைக் கேட்பவர்களுக்கே முக்தி என்றால், அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்” என்றார்.

அன்று முதல் தொடர்ந்து, “ஓம் நமோ நாராயணாயா… ஓம் நமோ நாராயணாயா… ஓம் நமோ நாராயணாயா…” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்போது, நாரதருக்கு புரிந்தது, உங்களுக்குப் புரிந்திருக்கும்…!

ஸ்ரீ நாராயணன், கோவிந்தன், பெருமாள்,

விஷ்ணு, ஸ்ரீனிவாசன் வேங்கடேஸ்வரன்,

கோவிந்தராஜன் பக்தி பஜனை பாடல்.

 

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நமோ நாராயணாய 

 

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நமோ நாராயணாய 

 

பிறவிதோறும் வினைமிகுந்து

 பெருகுகின்ற இருளினை 

 

அகலவைக்கும் அருண தீபம்

 ஓம் நமோ நாராயணாய 

 

உலகெல்லாம் முழங்கவேண்டும் 

ஓம் நமோ நாராயணாய 

 

மனதில் என்றும் இருக்கவேண்டும் 

ஓம் நமோ நாராயணாய 

 

ஜனன மரண பயதரங்க 

ஸாகரம் கடத்தியே 

 

உடனு வந்து காக்கும் ஓடம் 

ஓம் நமோ நாராயணாய!!!

*தொகுப்பு* :
*ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்*
  🦅 *சர்வம்🌎 விஷ்ணு மயம்* 👈

Monday, October 26, 2020

நெல்லை மாகாளி சிறப்பு மற்றும் மகிமை



நோய் தீர்க்கும் நெல்லை மாகாளி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வடமேற்கு முனையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பிட்டாபுரத்தி அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள்

கோவிலுக்குள் நுழைந்ததும் சிறிய பலி பீடமும் கொடிமரமும், பெரிய பலிபீடமும் உள்ளன

அதைத் தொடர்ந்து வடக்கு முகம் அனுக்ஞை விநாயகரும், வடமேற்கு முனையில் கிழக்கு முகமாக அகோர விநாயகரும் காட்சி தருகிறார்கள்

இதனையடுத்து மகா மண்டபம் உள்ளது. இங்கு நின்றுதான் அம்மனை வழிபட வேண்டும்

இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும் சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள் அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை) சீபலி அம்மனும் ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும் பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன

அம்மனை கருவறையை அடுத்து அர்த்த மண்ட பமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது

கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில்(பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே பன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழே வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்

இந்த எழிற்கோலத்தினை தசரா அன்று காணலாம்

இந்த அன்னைக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். அம்மனுக்கு பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த பிட்டை இக்கோவிலில் பூஜை செய்து வரும் பல்லவராயர் வகுப்பை சேர்ந்தவர்கள் கோவிலிலேயே தயார் செய்து அம்மனுக்கு படைத்து இருக்கிறார்கள்

அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் ஒப்பனையில் (அலங்காரத்தில்) ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகள் பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும்

குழந்தைகளுக்கு ஏற்படும் விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி மையிடப்படுகிறது

இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது

இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர். நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

எட்டுக்குடி முருகனின் சிறப்பு மற்றும் வரலாறு

திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே  எட்டுக்குடி முருகன் கோவில் .

எட்டுக்குடி எண்கண் சிக்கல் மூன்று கோவிலையும் ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பு

 புகழ் பெற்ற மிக பழமையான முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார். எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.

முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே..

இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. 

சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் .கோவிலின் கன்னி மூலையில் மனோன்மணி தாயார் அருள் செய்கிறார்.

வான்மிக சித்தர்க்கு எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது .

இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார்.. வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் .

போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்..தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார்.

வான்மிக சித்தரின் மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீசர் சன்னதியில் உள்ளது .. 

அடுத்து இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் ஸ்தல விருச்சம் சரக்கொன்றை மரத்தின் கீழ் வெகு காலம் தவம் செய்துள்ளார்

திடீரென சிலைக்கு உயிர்வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் மயிலை, 'எட்டிப்பிடி' எனக் கூச்சலிட மயிலைப் பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர்.

 சிறப்புபெற்ற திருத்தலம் மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். 'எட்டிப்பிடி' என்ற வார்த்தையே காலப்போக்கில் 'எட்டுக்குடி' என்று ஆனதாகவும் ஒரு கூற்று உள்ளது.

ஈசனும் அம்பாளும் ஒன்று சேர்ந்த அந்தத் திருவடிவே அர்த்த நாரீஸ்வரர். பார்வதி தேவி எட்டுக்குடியிலேயே கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து ஈசனின் சரிபாதி ஆனார் என்கிறது தலபுராணம். 

பார்வதிதேவி வழிபட்ட சிவலிங்கம் சவுந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது. இத்தல அம்பிகையின் திருநாமம் ஆனந்த வல்லி என்பதாகும்.

கேதார கவுரி விரதம் இருந்து எட்டுக்குடியில் ஈசனின் உடம்பில் உமையவள் சரிபாதி ஆனதால் இத்தல அம்பாள் ஆனந்த பரவச நிலையில் உள்ளாள். இவளிடம் கேட்டது உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்

நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். 

Sunday, October 25, 2020

மகிழ்ச்சி என்பது வசதிகள் இல்லை ஆனால் செயல்களில் இருக்கிறது.

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!!

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. 

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.  
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.. 

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி கேட்டது. 

“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன். 
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.  

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது.  குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.  

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, 
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்” என்றது.  

பாம்பு  “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.  சொல்கிறேன். 

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.  

இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.  அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. 

அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். 

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.  

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. 

வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். 

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.  

ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே.  கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.  

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.  பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. 

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.  

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.  

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.  
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது. 

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம். 

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். 

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.  எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.  

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.  நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.  ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."

கடவுளை நம்புங்கள் வேண்டுவதை விட அதிகமாக தருவார்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றார். 

அவரை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். 

இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, 

வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்ற பின்பு நாம் வாங்கிக் கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. 

இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக் கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்து விட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  

எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்து கொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல *"அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்"* என்று *கோபுரத்தை பார்த்து* மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். *"என்னப்பா...சாப்பிட்டாயா?"* என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.

 கேட்பது ராஜா என்று தெரியாமல் *"ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா"* என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்து நீரை பார்த்தபடியே பதில் சொன்னார் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 

ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து *"மன்னித்து விடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?"* என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதல் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். *"ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்து கொண்டே பதில் சொல்லிவிட்டேன்...என்னை மன்னிக்க வேண்டுகிறேன்"* என்று பதறினான்.

 இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். *"வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்"* என்று அவனை பேசவிடாமல் இழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 

*"போய் குளித்துவிட்டு வா"* என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 

குளித்து, புத்தாடை அணிந்து வந்தார். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார் *"இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்"* என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

 *"ஏனப்பா அழுகிறாய்?"* என்று ராஜா கேட்க. *"நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...

இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்"* என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க *"வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...

கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டார்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்று வரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்"* என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்க வில்லை என்றால் சராசரியை விட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

Saturday, October 24, 2020

விளக்கேற்றிய வீடு வீணாகப் போகாது

விளக்கேற்றிய வீடு வீண் போகாது...

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! 

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. 

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். 
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே 
மயானம் போல் தோன்றும். 

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். 
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. 

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. 

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. 

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. 

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. 

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். 
இதற்கு தடையேதும் இல்லை. 

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. 
இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. 

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். 
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. 
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் 

மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். 

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா. 

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். 

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். 

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். 

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். 

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். 

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:- 

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். 

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். 

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். 

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது

🌼   *நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?*

🌺🌻🌺
     *1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்*

🍃நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.

🍃எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

🎪தெரியாது "நடக்காது" முடியாது "கிடைக்காது "என சொல்பவர்களை விரட்டி விடுங்கள் 

🌼🌻🌺
*2) உற்சாகமாக இருங்கள்* :-

🍃சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

🍃இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

🌼🌻🌺
*3. பவர்ஃபுல்லாக உணருங்கள்*: -

🍃உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.

🍃உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.

🍃இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

🍃உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் . 

🌼🌻🌺
*4. லவ் பண்ணுங்க* :-
உங்களை நீங்களே நேசியுங்கள்.

🍃 இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

🍃உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

🍃 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

🍃 உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

🌼🌺🌻 *5.பயணப்படுங்கள்* :-

🍃வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.

🍃இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.

🍃அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

🍃 வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.

🍃 *ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,* 
*உங்கள்  பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்..

Friday, October 23, 2020

ஆன்மீக தெய்வீக தகவல்கள்

🕉🔹💢🌟♥🔥♥🌟💢🔹🔯

*ஆன்மீகம் தெய்வீக தகவல்*

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது

2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.

🌟💥🔥💫🌪🌪🌪💫🔥💥🌟

1. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. ஏன தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

2. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

3. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

4. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

🌻🌼🌻🌼🌻♥🌸♥🌻🌼🌻

5. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

6. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

7. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 

8. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

9. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

🌺🌻🌹🌺🌻🌹🌺🌻🌹🌺🌻

10. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

11. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது

12. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

13. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.

14. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

15. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

16. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

17. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

18. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

19. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

🌾🌾🌾🌾🌴🌳🌳🌴🌾🌾🌾

20. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

21. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.

22. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

23. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

24. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

25. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

26. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

27. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

28. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

வாழ்வில் செய்யக்கூடாதவை

🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻

1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 

🌸☘🌸☘🌸☘🌸☘🌸☘🌸

5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.

9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

🦚🦚🦚🦚🌹🌻🌻🌹🦚🦚🦚

10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 

12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.

13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது. 
வாழ்க வளமுடன்....

🌷🍃🌷🍃🌷🍃🌷🍃🌷🍃🌷

லிங்க வழிபாட்டின் பலன்கள் பயன்கள்

லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல்

லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்; மையப்பகுதி விஷ்ணு பாகம், நுனிப்பகுதி சிவபாகம். இதில் சிவபாகம் சற்றுப் பெரியதாக இருக்க வேண்டும். லிங்கத்தை அமைத்தல்: 

1) உப்பினாலும், நெய்யினாலும் செய்தல், 

2) துணி, மண் ஆகியவற்றாலும் தற்காலிகமாக அமைத்து வழிபடல். 

3) சுட்ட மண்ணினால் லிங்கம் அமைத்தல். 

4) மரம், பாறை ஆகிய ஒன்றால் செய்யப்படுவது மிகச் சிறந்தது. 

5) பவழம், தங்கம் ஆகியவற்றால் ஆன லிங்க வழிபாடு அதிக பலன்களைத் தரும். 

6) வெள்ளி, பித்தளை, செம்பு, துத்தநாகம், பாதரசம் ஆகியவற்றால் ஆனவை புனிதமானவை. 

7) உலோக நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட லிங்கங்களை வழிபடுவோர் புகழ், வெற்றி அடைவர். அவர்கள் மனோரதம் நிறைவேறும்.

ஈசன் எங்கும் ஆராதிக்கப்படுவர். சாஸ்திர முறைப்படி, குறிப்பிட்ட அளவுகளில் லிங்கங்களை அமைக்க வேண்டும். பரமன் ஆராதனைக்கான இடம் ஆலயமுன் அமைதல் வேண்டும். பஞ்ச கவ்யத்தால் அனைத்தும் தூய்மைப்படுத்தல் பட வேண்டும். ஆராதிப்பவர்கள் பவித்திரம், மோதிரம், கங்கணம் அணிந்திருக்க வேண்டும்.முறையான மரக்கொம்புகளாலேயே பந்தல் அமைக்க வேண்டும். நரசிம்ம மந்திரத்தால் பூ பரிக்கிரகம் செய்த பின் சடங்குகளைச் செய்ய வேண்டும். பந்தலின் வடமேற்கு மூலையில் ஹோம குண்டம் அமைக்கப்பட வேண்டும். எந்தத் தெய்வம் பிரதிஷ்டை ஆனாலும் உடன் அரி, அயன், அஷ்டதிக் பாலகர்களையும் ஆராதனம் செய்து பூஜிக்க வேண்டும். முடிவில் சாந்தி ஹோமம் புரோகிதர்க்கு கோதானம், சுவர்ணதானம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் பஜனை, தியானத்தில் ஈடுபட வேண்டும். பக்தி, சிரத்தையுடன் பரமனை ஆராதிக்க வேண்டும். திருஉருவை பிரதிஷ்டை செய்பவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு வைகுந்தவாசத்தை அணிகிறார்கள்.

Thursday, October 22, 2020

ஏன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் தொழவேண்டும்

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார் ஒளவையார்.

ஆலயம் என்பது ஆ+லயம் எனப் பிரிக்கலாம்.

ஆ என்பதற்கு ஆன்மா என்று பொருள். லயம் என்பதற்கு லயமாவதற்கு அல்லது சேருவதற்குறிய இடம் என்பது பொருள். ஆகவே கடவுள் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கூறலாம். 

ஆ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி இருத்தலையும் குறிக்கும். அதனால் ஆலயம் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறுவர், ]

இதனைக் கோயில் எனவும் கூறுவர் கோ-கடவுள் இல் தங்குமிடம். கோயில்-கடவுள் தங்குமிடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. 

ஆகவேதான் ஆலய வழிபாடு என்பது இறைவழிபாடு என்று பொருள்படும். அது பற்றியே மெய்கண்ட தேவநாயனாரும். ஆலயந்தானும் அரனெனத் தொழுமே என்றருளினார். 

எங்கும் நீக்கமற்ற நிறைந்துள்ள இறைவனை ஆலயங்களில் மட்டும் ஏன் வழிபட வேண்டும் எனச் சிலர் கருதுவர். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இறையருள் எல்லா இடங்களிலும் விளங்கித் தோன்றுவதில்லை.

பால் முழுவதும் நெய் கலந்துள்ளது. எனினும் தயிரிலிருந்தே விளங்கித் தோன்றும். பூமியின் அடியில் எங்கும் தண்ணீர் வியாபித்திருந்தாலும், நாம் அதை உபயோகப்படுத்த வேண்டுமானால் ஒரு கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போன்றவற்றின் மூலம்தான் பயன்படுத்த முடிகிறது. 
இவற்றைப்போல் கடவுள் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள் செய்கின்றார். பசுவின் உடம்பெல்லாம் பால் வியாபித்திருந்தாலும் அது அகடுகளின் (மடி) வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. அதுபோல் இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும் ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே அருளைச் சுருக்கிறான்.

ஆலயம் மனிதவடிவம். கோயில்கள் நமது உடம்பின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சேஷத்திரம் சரீரப்பிரஸ்தாரம் என்பர். ஆலயம் மனிதர் உடம்புபோல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் பொருள். இதனைத் திருமூலரின் பின்வரும் பாடல் மூலம் உணரலாம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், (மந்திரம், பாவனை கிரியைகளால்) அவனருள் ஆலயத்தில் விளங்கித் தோன்றும். சிவஞான யோகிகளும், மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவம் ஆயவேல் அவை அருள் மயமாகும்? என்றருளினார். எனவே ஆலய வழிபாடு மிக அவசியம் என்பது உணரப்படும்.

ஆலய அமைப்பும் எல்லா இடங்களிலும் ஒரே முறையாக இருந்து வருகின்றது. பொதுவாக எல்லா சிவாலங்களிலும் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், தம்ப மண்டபம், நிருத்த மண்டபம் முதலியனவும்; ஐந்து அல்லது மூன்று பிராகாரங்களும், கோபுரமும், யாகசாலை, நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியவையும் முக்கியமாகக் காணப்படுவனவாகும். 

இவ்வமைப்பு உடலமைப்பை ஒட்டியது என்பர் ஆன்றோர். தேகமாகிய ஆலயத்துள்ளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்களும் அறியப்படும். இவ்வுடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் உள்ளன. (கோசம்-சட்டை). கோயிலிலுள்ள ஐந்து பிராகாரங்களும் இவற்றைக் குறிக்கின்றன. அன்னமய கோசம் முதலியவற்றைத் தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரணச் சரீரம் என அறிக.

ஆலயத்தில் தரிசிக்க வேண்டியவை ஏழு
1. சிவாலயக் கோபுரம் (இது தூலலிங்கம் எனப்படும்) 2. சிவாலயத்தின் வாயில். 3. பலிபீடம்(இது பத்ரலிங்கம் எனப்படும்)4. பிராகாரம். 5.கர்ப்பக்கிருக விமானம்(இது தூயலிங்கம் எனப்படும்) 6. அர்ச்சகர். 7. சிவலிங்கப் பெருமான்(சதாசிவ மூர்த்தி என்றும், பார்த்தலிங்கம் என்றும் கூறப்படும்).

ஆலய தரிசனம் செய்ய விரும்புவோர் நீராடி, தோய்த்துவந்த உடைகளை அணிந்து செல்லவேண்டும். ஆலயத்தை நெருங்கியதும் கால்களைக் கழுவிக் கொண்டு பின் தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தை தரிசித்து. இரண்டு கைகளையும் தலைக்குமேலே குவித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும். பலிபீடத்தையும் கொடிமரத்தையும். இடபதேவரையும் வணங்கவேண்டும். பின் பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும்(கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னிதகளாயின் வடக்கே தலைவைத்தும், தெற்கு, வடக்கு நோக்கிய சன்னிதிகளாயின் கிழக்கே தலைவைத்தும் வணங்கவேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால்நீட்டி வணங்கக்கூடாது) ஆண்கள் எட்டுறுப்புகளும், பெண்கள் ஐந்துறுப்புகளும் நிலத்தில் தோய வணங்கவேண்டும். (தலை, கையிரண்டு, செவி இரண்டு, மேவாய், புயங்கள் இரண்டு என்பன எட்டுறுப்புகள். தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்பன ஐந்துறுப்புகள்.)

பின்னர், தலையிலேனும் மார்பிலேனும் கைகளைக் குவித்துக்கொண்டு, குறைந்தது மூன்று முறை பிராகாரத்தை மெதுவாக வலம் வர வேண்டும். (கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வலம் வரக்கூடாது) மீண்டும் பலிபீடத்திற்கு இப்பால் விழுந்து வணங்கவேண்டும். (இந்த இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் குற்றமாகும்) பின்பு துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று கணநாத ராகிய திருநந்திதேவரை வணங்கி, பகவானே, உம் திருவடிகளை அடைந்து அடியேன் உள்ளே சென்று சிவபெருமானை தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அனுமதி செய்தருளும் என வேண்டிக் கொண்டு உள்ளே செல்லவேண்டும்.

உள்ளே சென்றதும் விக்னேசுவரனை வணங்க வேண்டும். (இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து நெற்றியில் மூன்றுமுறை குட்டி, வலச்செவியை இடக்கையினாலும், இடச் செவியை வலக்கையினாலும் பிடித்து மூன்று முறை தாழ்ந்து எழுவேண்டும்)

பின்னர் சிவலிங்கப் பெருமான் சன்னிதியை அடைந்து வணங்கியபின், உமாதேவியார் சன்னிதி அடைந்து வணங்கி விபூதி, குங்குமம் வாங்கித் தரித்துக் கொள்ளவேண்டும். பின்பு சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திசேகரர், சுப்பிரமணியர்யும், சமயக்குரவர் நால்வரையும் தரிசனம் செய்தல் வேண்டும், பின்னர் உள்பிராகாரத்தில் வலம்வந்து, சண்டீசர் சன்னிதி அடைந்து தாளத்திரயம் செய்து சிவதரிசன பலத்தைத் தரும்படிப் பிரார்த்திக்க வேண்டும். (தாளத்திரயம் என்பது மெல்லிய ஒலி எழும்படி வலது கை விரல்கள் இடது உள்ளங்கையில் மூன்று முறை தட்டுதல். பின் வலமாக வந்து இடபதேவரை வணங்கி, அங்கிருந்தே சிவலிங்கப் பெருமானை தரிசித்து பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும், பின்பு ஓரிடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து சிவமந்திரத்தை செபித்துப் பின் எழுந்து வீட்டிற்குச் செல்லவேண்டும்.

சிவாலயத்திற்குச் செல்வோர் தங்கள் தகுதிக்கேற்ப பழம் முதலியன கொண்டு சென்று அர்ச்சிப்பித்து விபூதி பிரசாதம் பெறவேண்டும். ஒன்றும் இயலாதவர் சன்னிதியில் கிடக்கும் குபப்பை முதலியவற்றை நீக்குதல் அலகிடுதல், கோலமிடுதல் முதலிய தொண்டுகள் செய்யவேண்டும். தினந்தோறும் ஆலய தரிசனஞ்செய்ய இயலாதவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் தரிசனம் செய்தல் வேண்டும்.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

16 வார்த்தைகளில் ராமாயணம்

16 வார்த்தைகளில் ராமாயணம்..!

*பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார்,செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்*

விளக்கம்

*1. பிறந்தார்:*

ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

*2.வளர்ந்தார்:*

தசரதர், கௌசல்யை,  சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

*3.கற்றார்:*

வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள்,  கலைகள் முறைகள் யாவும் கற்றது.

*4.பெற்றார்:*

வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

*5.மணந்தார்:*

ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

*6.சிறந்தார்:*

அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும்,  தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

*7.துறந்தார்:*

கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

*8. நெகிழ்ந்தார்*:

அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.

குகனார் அன்பில் நெகிழ்ந்தது.

பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.

பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும்,  தன்னலமற்ற குணத்தையும்,  தியாகத்தையும்,  விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.

அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.

சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.

விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

*9.இழந்தார்:*

மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.

*10.அலைந்தார்*

அன்னை சீதையை தேடி அலைந்தது.

*11.அழித்தார்*

இலங்கையை அழித்தது.

*12.செழித்தார்*

சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது.*

ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று,  செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.

*13.துறந்தார்*

அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில்,  மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக,  அன்னை சீதையைத் துறந்தது.

*14.துவண்டார்*

அன்னை சீதையை பிரிய நேர்ந்தது,  ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

*15.ஆண்டார்*

என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும்,  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும்,  செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

*16. மீண்டார்*

பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.

#ஜெய்_ஸ்ரீராம்..!


படம். வடுவூர் ராமர்

Wednesday, October 21, 2020

தர்பணம் ஏன் செய்ய வேண்டும்?

தர்பணம்

மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.

பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.

இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.

நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

(ஆதாரம்: பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம், ஸ்ரீமத் மகாபாரதம் முதலிய நூல்கள்.)

கரைசேரும் காலம் எப்பொழுது?

கரை சேரும் காலம் எப்பொழுது ?  எத்தனையோ வழிபாடு செய்தும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. வருத்தமுடன் காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்தா பெண் கதையை இன்று 12/7/2020 ஞாயிறு காண்போம் மனக்கடலிலே கடவுளைத் தெப்பமாக வைத்துக் கொள். அதிலே கவலைகளை ஏற்று. ஸ்லோகங்கள், மந்திரங்கள், பூஜைகள் எல்லாம் தெய்வத்தை இணைக்கும் ஆணிகள் போலத்தான். அப்புறமென்ன? பிரச்னைகள் தீரும். பிறவி என்னும் சம்சாரக் கடலில் மூழ்காமல் உன்னைக் கடவுள் கரை சேர்ப்பார்.தெளிவு கிடைத்த மகிழ்ச்சியுடன் சுவாமிகளை வணங்கி விடை பெற்றாள்.

எத்தனையோ வழிபாடு செய்தும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. வருத்தமுடன் காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்தாள் ஒரு பெண்.

''சுவாமி! கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம் என ஸ்லோகங்களை எல்லாம் தினமும் சொல்கிறேன். ஆனால் கடவுள் கருணை காட்டவில்லையே. என் பிரச்னைகள் தீரவில்லை''

''அதுசரி...எப்படி சொல்கிறாய்?'' கேட்டார் சுவாமி.

''நினைத்த நேரம் எல்லாம் சொல்வேன். வேலை பார்த்துக் கொண்டே சொல்வேன். எல்லாம் சிறுவயதிலேயே எனக்கு மனப்பாடம். புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற தேவையே இல்லை!''

அவ்வளவும் மனப்பாடம் என்பதில் அளவுகடந்த பெருமை அப்பெண்ணுக்கு.

சுவாமிகள் புன்னகைத்தபடி ''கடவுள் ஒன்றும் உன் மனப்பாடத் திறமையைப் பரிசோதிக்கும் பள்ளிக்கூட ஆசிரியர் இல்லை'' என்றார். தற்பெருமை கொள்வது தவறு என்பது சுரீரென்று அவளின் புத்தியில் உறைத்தது.

''எப்போதும் ஸ்லோகம் சொல்வது நல்லது தான். இதனால் மந்திர சப்தம் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு முழுப்பயன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?'' சமையலுக்குக் காய்கறி நறுக்கும் போது காய்களை அருகில் வைத்துக் கொள்வாய். அரிவாள் மனை, கத்தி எல்லாம் உன்கிட்டே இருக்கும். அடுப்படிக்கு போய்த் தான் நீ சமையலில் ஈடுபட முடியும். குளிக்க வேண்டும் என்றால் குளியலறையில் தண்ணீர் வாளியைப் பக்கத்தில் வைத்துக் கொள்வாய். அதுமாதிரிதான் ஸ்லோகம் சொல்வது.

எல்லா இடத்திலும் கடவுள் இருப்பது உண்மையே. முழுமையாக உணர்ந்த ஞானிகளுக்குத் தான் அது பொருந்தும். பூஜையறையில் அமர்ந்து ஸ்லோகம் சொல். இஷ்ட தெய்வத்தின் படம் உன் முன்பு இருக்கட்டும். மனதை வேறு பக்கம் திரும்பாமல் ஸ்லோகத்திலேயே ஒருமைப்படுத்து. அதன் பொருளையும் நினைத்துக் கொள். அப்படிச் செய்தால் ஸ்லோகங்களின் சக்தி அதிகரிக்கும் கடலுக்குள் கற்களை வீசினால் மூழ்கும். ஆனால் மரக்கட்டைகளை ஆணி அடித்துச் சேர்த்துத் தெப்பம் ஒன்றைச் செய்து அதில் கற்களை வைத்தால் மூழ்காது.

மனக்கடலிலே கடவுளைத் தெப்பமாக வைத்துக் கொள். அதிலே கவலைகளை ஏற்று. ஸ்லோகங்கள், மந்திரங்கள், பூஜைகள் எல்லாம் தெய்வத்தை இணைக்கும் ஆணிகள் போலத்தான். அப்புறமென்ன? பிரச்னைகள் தீரும். பிறவி என்னும் சம்சாரக் கடலில் மூழ்காமல் உன்னைக் கடவுள் கரை சேர்ப்பார்.

தெளிவு கிடைத்த மகிழ்ச்சியுடன் சுவாமிகளை வணங்கி விடை பெற்றாள்.

உடல்நலம் பெற... காஞ்சிப்பெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

Tuesday, October 20, 2020

கணவன் மனைவி ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் அஷ்டகம்

அர்த்தநாரீஸ்வர அஷ்டகம் மிகவும் சக்தி மிக்கது. குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடியது.

கணவன் மனைவி இடையே அன்பையும் பாசத்தையும், ஒற்றுமையையும் தரக்கூடியது.

இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன் மனைவி இருவரிடையே மன ஒற்றுமையை அர்த்தநாரீஸ்வரர் உண்டாக்குவார்,

சாம்பேய கௌரார்த சரீரகாயை கர்பூர கௌரார்த சரீரகாய

தம்மில்லகாயை ச ஜடாதராய நம:சிவாயை ச நம:சிவாய

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய

க்ருதஸ்மராயை விக்ருதய்மராய நம:சிவாயை ச நம: சிவாய

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய

ஹேமாங்கதாயை புஜகாங்கதாய நம:சிவாயை ச நம:சிவாய

விசால நீலோத்பல லோசனாயை விகாஸி பங்காரு லோசனாய

ஸமேக்ஷனாயை விஷமேஷணாய நம: சிவாயை ச நம:சிவாய

மந்தார மாலா கலிதால்காயை கபால மாலாங்கித கந்தராய

திவ்யாம்பராயை ச திகம்பராய நம:சிவாயை ச நம:சிவாய

அம்போதர ச்யாமல குந்தலாயை தடித் ப்ரபா தாம்ரஜடாதராய

நாரீச்வரர் நிகலேச்வராய நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய

ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே நம: சிவாயை ச நம:சிவாய

ப்ரதீப ரத்னோஜ்வல குண்டலாயை ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய

சிவான்விதாயை சசிவான்விதாய நம:சிவாயை ச நம:சிவாய

ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ பக்த்யாஸ மான்யோ புவி தீர்கஜீவி

ப்ராப்னோதி ஸெபாக்ய மனந்தகாலம் பூயாத்ஸதா தஸ்ய ஸமஸ்தஸித்தில்

இதை முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சிவதலத்தில் கொடி மரத்தின் அருகே அமர்ந்து

இதை முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சிவதலத்தில் கொடி மரத்தின் அருகே அமர்ந்து முறை பாராயணம் செய்யவும்.

பின்பு வீட்டிற்கு வந்து அர்த்தநாரீஸ்வரர் சிலை அல்லது படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்யவும்.

பிறகு தினமும் 1 முறை பாராயணம் செய்தால் போதுமானது

வில்வத்தின் மகிமை



ஓம் நமசிவாய

வில்வம் ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் !

அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றி பார்ப்போம்

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்

சிவனாருக்கு சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் பங்கு வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள்

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்கள் பூஜைக்குப் பயன் படுத்துகிறோம்

ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன

புகைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை சூரியோதயத்துக்கு சூரியன் படிப்பதற்கு முன்னதாக முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்

வில்வந்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்பத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்

தினமும் சிவனுக்கு வில்வம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு

மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை தரிசித்தால் ஏழேழு ஜென்மம் பாவங்களும் விலகும் என்பது ஐதிகம்

வில்வ வழிபாடு பயன்கள்

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்

வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறார்

வடமொழியில் வில்வம் ஸ்ரீபாலம், சுரேஷ் வில்வம், கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் (உயிர்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் கனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூரிப்பவர்கள் சகல சித்திகளும் நன்மைகளும் அடைவார்கள்

வில்வத்தின் பெருமை சாஸ்திரங்கள் புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகும் விளங்குகின்றன

பனிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் (திருகருகாவூர் திருத்தலத்தில் வில்ல மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

அதன்படி வேதங்களும் வில்வ மரங்கள் தவமியற்றியதால் திருவைகாவூர் என்றனர் வில்வராகாயம் என் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவன் சூட்டினைத் வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்லத்தை சாந்தி வழிபட்டுள்ளனர்

அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன் இமயத்தில் பனி அதிகம்

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூஜைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்

ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குலம் கொண்டதாகும்

வில்வ மரத்தை வீட்டில், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பவன் கிடைக்கும்

ஒரு வில்வம் சிவனுக்கு அர்ப்பணித்தால் சகல பாவங்களும் துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாத பிறப்பு சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி , அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில்  

Monday, October 19, 2020

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்தின மந்திரம்

நவராத்திரி நாயகி திருமியச்சூர் லலிதாம்பிகை.

#ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை.

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸ்த்குரோ சரணம் சரணம்
ஞான னந்தா சரணம் சரணம்
             காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவேனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக
காக்கும் கணநாயக வாரணமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

        1 வைரம்
கற்றும் தெளியார் காடேகதியாய்க

கண்முடி நெடுங்கன வானதவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்

பெருகும் பிழையேன் பேசத்தகுமோ

பற்றும் வயிரப்படைவாள் வயிரப்

பகைவர்க்கெமனாக எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

          2. நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக்கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக்குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்

நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக்குமரீ வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

        3. முத்து
முத்தேவரும் முத்தொழிலாற்றிட வே

முன்னின் றருளும்முதல்வீ சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாசினியே சரஙம்

தத்தேறிய நான் தனயன் தாய் நீ

சாகாத வரம் தருவே வருவாய்

மாத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையை

         4.பவளம்
அந்தி மயங்கய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ

தேன் பொழிலாமீது செய்தவள் யாரோ

எந்தியிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்

மந்திரவேத மாயப்பொருளானாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

           5.மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே

கருத்துக்கிடையாக் கலையானவளே

பூனையக்கிடையாப் புதுமைத்தவளே

நாணித்திரு நாமமும் நின்துதியும்

நாவிலாதவரை நாடாதவளே

மாணிக்க ஓளிக்கதிரே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

           6.மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்

மதுரிதபுதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

சுதிஜதி லயமே இசையே சரணம்

அர ஹர சிவ என்றடியவர் குழம

அவரருள் பெற அருள்முதே சரணம்

வர நவநதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

           7. கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள் 

பொன்றாது பயன் குன்றா வரமும்

தீ மேல் இடினும் ஜெய எனத்

திடமாய் அடியேன் மொழியும் திறமும்

கோமேதகமே குளிர்வான் நிலவே 

குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்

மாமேருவிலே வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

   8.பதுமராகம்(புஷ்பராகம்)
ரஞ்சனி நந்தினி அங்கணி பதம்

ராக விகாஸ வியாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணீ

சாம்பவி சந்தர கலாதரி ராணி

அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத ஸொருபிணி நித்ய கல்யாணி

மஞ்சுளமேரு சிருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

              9.வைடூரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்

மருள பாறயாறொலி  யொத்த வித்தால்

நிலையற் றொளியேன் முடியத்தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அளவற் றசைவற் றநுபூதி பெறும்

அடிவார் முடிவாழ் வைடூரியமே

மலையத் துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

                பயன்
எவன் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவாரே

திருமணத்தடை நீங்க கல்யாண முருகரின் வழிபாடு

*இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்!*
                        🕉 🙏 💐

நிறைய பேருக்கு திருமணத்தில் தடை இருக்கும். சில பேருக்கு ஜாதக கட்டத்தில் திருமணம் நடக்கும் என்ற யோகம் இருந்தாலும் கூட, சில பெண்களுக்கு சீக்கிரத்தில் மாப்பிள்ளை கிடைக்காது, ஆணாக இருந்தால், திருமணம் செய்து கொள்ள, மணமகளை தேடுவதில் சிரமம் இருக்கும். உங்களுடைய ஜாதக கட்டத்தில், உங்களுடைய கர்ம வினையால், தோஷத்தால், திருமணத் தடை இருந்தாலும் கூட கவலை வேண்டாம். இந்த பதிவில் சொல்லக்கூடிய பரிகாரத்தை நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் கைமேல் பலன் கிடைக்கும்.

குறிப்பாக இந்த பரிகாரத்தை திருமணம் ஆகாத பெண், திருமணம் ஆகாத ஆண் தான், செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. திருமணமாகாமல் இருக்கும் ஆண் அல்லது பெண்ணின் பெற்றோரும் செய்யலாம். உடன்பிறந்தவர்களும் செய்யலாம். ஆனால், கட்டாயம் 9 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இடையில் ஒரு வாரம் கூட தவறக்கூடாது.

திருமணம் நடக்க வேண்டும் என்று, வேண்டிக்கொண்டு முருகனின் பாதங்களில் தான் நாம் சரணடையப் போகின்றோம். இதை பரிகாரம் என்று கூட சொல்லமுடியாது. நம்பிக்கையான வழிபாடு என்றே சொல்லலாம். வாரம் தோறும் வரும் செவ்வாய்க் கிழமைகளில் முருகர் கோவிலுக்கு சென்று, இரண்டு நெய் தீபம் ஏற்றி வையுங்கள். அதன் பின்பு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், இவைகளை வாங்கி கொடுத்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். திருமணம் ஆகாத அந்த குறிப்பிட்ட நபரின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், ராசி, இவைகளைச் மட்டும் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நீங்கள் அர்ச்சனை செய்யும் பொருட்களோடு சேர்த்து, ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வையுங்கள். அர்ச்சனை பொருட்களோடு சேர்த்து அந்த எலுமிச்சை பழத்தை கொடுப்பதற்கு முன்பு, உங்கள் உள்ளங்கைகளில் அந்த எலுமிச்சை பழத்தை வைத்து, இரு கைகளையும் கூப்பி, முருகப் பெருமானை வேண்டி, திருமண தடைகள் நீங்கி, அந்த குறிப்பிட்ட நபருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை அர்ச்சனை பையில் வைத்து விடுங்கள்.

குருக்களிடம் அந்த அர்ச்சனை பாழத்தை இறைவனின் பாதங்களில் சேர்த்து விடும்படி சொல்லுங்கள். அர்ச்சனை முடித்த பின்பு, மீண்டும் அந்தப் பழத்தை திரும்பி வாங்கிக் கொள்ள வேண்டாம். அந்த வேண்டுதல் நிறைவேற, அந்த எலுமிச்சை பழத்தை முருகப்பெருமானின் பாதங்களிலேயே விட்டு விடுங்கள். அவ்வளவு தான். பிரச்சனையை முருகப்பெருமான் பார்த்துக் கொள்வான்.

ஒன்பது வாரங்களும் தொடர்ந்து இதை செய்து வர வேண்டும். இது ஒரு பரிகாரம். இதுதவிர இரண்டாவதாக ஒரு பரிகாரம் உள்ளது. அதையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த பரிகாரத்தை திருமணமாகாத குறிப்பிட்ட அந்த ஆணோ அல்லது பெண்ணோ தான் செய்ய வேண்டும்.

திருமணம் ஆகாத ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள் சென்று, அங்கு இருக்கும் முருகப்பெருமானை, மூலவரை தரிசனம் செய்துவிட்டு, அந்த கோவிலிலேயே தனியாக, கல்யாண முருகர் என்று ஒரு சன்னிதானம் இருக்கின்றது. அந்த சன்னிதானத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் அந்த குறிப்பிட்ட நபர் 6 வாரங்கள் இந்த கோவிலுக்கு சென்று, கல்யாண முருகனுக்கு மாலை வாங்கி அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து, கல்யாண முருகர் கழுத்திலிருந்து ஒரு மாலையை பெற்று, தன் கழுத்தில் போட்டுக்கொண்டு, இந்த சிறுவாபுரி முருகன் கோவிலை 6 முறை வலம் வரவேண்டும். 6 வாரங்கள் தொடர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து, பக்தர்களுக்கு விநியோகம் செய்து, பிரார்த்தனையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தவர்கள், யாருக்கும் திருமணமாகாமல் இருந்ததே கிடையாது. இது அனுபவப்பூர்வமான உண்மையும் கூட. உங்களது மனதிற்கு பிடித்தமான, மணவாழ்க்கை கட்டாயம் கிடைக்கும்.

நிறைய பேருக்கு சிறுவாபுரி முருகன் கோவிலைப் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு. முடிந்தவர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று, இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள்
உங்கள் வீட்டில் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு  முருகன் கோவிலுக்கு சென்று,  எலுமிச்சை பழத்தை வாங்கி வைத்து, முதலில் சொன்ன வழிபாட்டை செய்து பலனடையலாம். நிச்சயம் நல்ல பலன் உண்டு என்பது ஐதீகமாகும்.

                🌹 🕉 🙏 💐 🌹

Sunday, October 18, 2020

தியானம் பழகு

தியானம் பழகு..!

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில நிமிடங்கள் வரை தியானம் செய்வது உடல் ரீதியான நோய்கள், மனதை  அமைதியாக்குதல், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவற்றை சுலபமாக்குகிறது. தியானமானது ஒரு ஆழமான சுய  விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வைட்டமின் சி..

மிக முக்கியமான வைட்டமின் சி உங்கள் உடல் பல்வேறு வழிகளில் சரியாக செயல்பட உதவுகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது, புற்றுநோய், இதயநோய், நீரிழிவுநோய் மற்றும் சுவாசநோய் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது சருமத்தை ஆரோக்கியமாகவும், சுருக்கங்களின்றி வைத்திருக்கவும் உதவுகிறது.

நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள்...

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நமது குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது  என்கிறது அறிவியல். நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் புளிக்கச் செய்து ஈஸ்ட் உருவாகிய உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகிறது. Yoghurt, Kefir, Sauerkraut போன்ற புளிக்கச் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

காதல்...

நீங்கள் நேசிக்கும் உங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் உள்ள விஷயங்கள் மற்றும் அலங்காரங்கள் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும், உங்கள் ஆன்மாவோடு பேசுவதற்கும் உதவுகிறது.

தூங்கும் நேரம்....

ஒரு திடமான, வழக்கமான படுக்கை நேரமானது உங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்கிறது. உங்களுடைய உடலானது சூரிய உதயம், சூரிய மறைவு போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கேற்ப உங்களுடைய தினசரி வேலைகள் மற்றும் தூக்கம் போன்றவற்றை அமைத்திருந்தால், ஒரு நாள் பொழுதை எப்போது தொடங்கி, எப்போது முடிக்க வேண்டும் என்பதை உங்கள் உடலே அறிந்துகொண்டு அதன்படி செயல்படும்.

நடைப்பயிற்சி...

நடைப் பயிற்சியால் நாம் பல்வேறு பலன்களைப் பெறலாம். உங்கள் மூளையானது நல்ல உணர்வுக்கான  ஹார்மோன்களை சுரப்பதற்கு குறைந்தபட்சம் 10 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது.

வாசிப்பு பழக்கம்
உங்களுக்கு வயதாகும்போது மனம் தடுமாறத் தொடங்கி நினைவுகள் மங்கத் தொடங்குகின்றன. தாமதத்தை சரி செய்யவோ அல்லது அதை தலைகீழாக மாற்றுவதற்கோ உதவும் வழிகளில் ஒன்றாக இருக்கிறது வாசிப்பு  பழக்கம். அது மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கு உதவுகிற ஒரு எளிதான மற்றும் சுவாரஷ்யமான வழியாக இருக்கிறது.

மஞ்சள்....

துடிப்பான இந்த வண்ணமயமான மசாலா பொருளானது இஞ்சியைப் போன்றே வேரிலிருந்து  கிடைக்கக்கூடியதாக உள்ளது. இதன் பல்வேறு மருத்துவ சிறப்புகளால் தனி ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. வீக்கம், மன அழுத்தம், மூட்டுவாதம் மற்றும் நீரிழிவு பிரச்னைகளை சரிசெய்ய உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும்  புற்றுநோயை எதிர்த்து செயல்படும் திறனுடையது மஞ்சள் என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடுவதில் கவனம்....

உங்கள் வயிறு நிறைந்திருப்பதாக மூளை பதிவு செய்ய சுமார் 15 நிமிடங்கள் ஆகிறது. உங்கள் மூளை மற்ற பணிகளில் மும்முரமாக இருந்தால், இந்த செய்தி மூளையில் பதிவு செய்யப்படாமல் போகலாம். இதனால் நீங்கள் எப்போதும் பசியுடனேயே இருப்பதோடு, ஒருபோதும் சாப்பிட்ட திருப்தியை அடைய மாட்டீர்கள். இது அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்வதற்கும், ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.

சுவாசமே....

தியானத்திலிருந்து வேறுபட்டது என்றாலும் அதற்கு இணையான ஒன்றுதான் சுவாசத்தில் கவனம் செலுத்துதல். இது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் காட்டிலும் எல்லா நேரங்களிலும் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவதைப் பற்றியது. மக்கள் தங்கள் நுரையீரலின் மேல் பாதியைப் பயன்படுத்தி மட்டுமே சுவாசிப்பது மிகவும் பொதுவானது.

ஆனால் அரிதாக எப்போதாவது ஆழமான, முழு சுவாசத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் உதரவிதானத்தை முழுமையாக விரிவடையச் செய்யலாம். நாம் சரியாக சுவாசிக்கவில்லை என்றால் அதிகமான அளவு ஆக்சிஜனைப் பெற முடியாது என்பதோடு தேவையற்ற கார்பன்டை ஆக்சைடை வெறியேற்றவும் முடியாது.

குளிர்சிகிச்சை....

திரவ நைட்ரஜன் மூலம் அதிக குளிரை உருவாக்கி அளிக்கப்படும் சிகிச்சை குளிர்சிகிச்சை (Cryotherapy) என்று சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சை வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்....

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. உடலில் உள்ள மிக முக்கியமான இந்த இரண்டு உறுப்புகளையும் நல்ல முறையில் வைத்திருக்க விரும்பினால் இதய ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளுக்கு ஒவ்வொருநாளும் சராசரியாக 30 நிமிடங்கள் ஒதுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மரம் நடுங்கள்....

இயற்கைச் சூழலில் நடைப்பயிற்சி செய்வது மன அமைதியைத் தரும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அடர்த்தியாக மரங்கள் இருக்கும் சூழல் மன இறுக்கத்தை மேலும் குறைக்கும் என்கிறது ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் Environment and Behavior இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை.

மேலும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரம் பற்றிய சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இயற்கை மிகுந்த உருவங்களை வெறுமனே படங்களாக பார்த்தாலே, மன அழுத்தம் குறைவதை உடலியல் குறிப்புகள் (Physiological markers) வெளியிடுவதாக தெரிவிக்கிறது.

நம் வீட்டைச்சுற்றி எவ்வளவு மரங்கள் வளர்க்கிறோமோ, அந்த அளவிற்கு உடலுக்கும் சரி, மனதுக்கும் சரி ஆரோக்கியம் என்பதை
சொல்லியிருக்கிறது இந்த ஆய்வு.

நட்ஸ்...

கொட்டை வகை உணவுப் பொருள்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான ஆரோக்கிய பலன்களுக்
குரிய பட்டியலைப் பெற்றிருக்கிறது. அவை மன அழுத்தத்தைத் தணிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகின்றன. இவை புரதம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களைப் பெற்றுள்ளதோடு, இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

மன அழுத்த மேலாண்மை....

மன அழுத்தம் ஏற்பட ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு காரணி இருக்கும். மேலும் பலருக்கு இதற்கான காரணிகள் அதிகமாகவும் இருக்கும். ஆனாலும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதோடு மனதையும், உடலையும் மீட்டெடுக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் உங்கள் வாழ்நாளில் நம்பமுடியாத முடிவுகளைப் பெற முடியும்.

மாதுளை....

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் போன்றவற்றைப் பெற்றுள்ளதால் இந்தப் பழம் சிறப்பான உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது உயர் ரத்த அழுத்தம், சில புற்றுநோய்கள், இதயநோய் மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

வெள்ளைப் பொருள் வேண்டாம்...

சமீபத்திய லான்சட் பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையின்படி, இந்தியர்களுக்கு 50 சதவீதம் இதயநோய் அதிகரித்திருக்கிறதாம். இதற்குக் காரணம் உணவுப் பழக்கமே. இயல்பாகவே இந்தியர்கள் உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்க்கிறார்கள். இவர்களின் இந்த உணவுப்பழக்கம் மட்டும் அல்லாது புதிதாக காற்று மாசுபாடும் இந்தியர்களின் இதயநோயைத் தூண்டுவதற்கான கூடுதல் காரணியாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

நம்பிக்கை....

நம்பிக்கை உடையவர்களை பார்க்கும்போதே உங்களுக்கு தெரியும். நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலும் நன்றாக உடையணிந்து, சிறந்த தோரணையுடன், உயரமாக நடந்துகொள்வதோடு, நம்பிக்கையான ஒரு மனநிலையைக்  கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும், குறைவான அழுத்தத்துடனும், அதிக வெற்றிகரமாகவும்  உள்ளனர். தினசரி சிறிய இலக்குகளை நீங்களே அமைத்துக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளலாம்....